பாக்., மக்களுக்கு தண்ணீர் தந்த இந்தியர்

Updated : ஜூன் 06, 2019 | Added : ஜூன் 06, 2019 | கருத்துகள் (4)
Share
Advertisement
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் வறுமையிலும், வறட்சியிலும் வாடும் மக்கள் வசிக்கும் பகுதியில் 600க்கும் மேற்பட்ட அடி குழாய்களை அமைத்து, அப்பகுதி மக்களின் தண்ணீர் பஞ்சத்தை தீர்த்துள்ளார் இந்திய வம்சாவளி தொழிலதிபரான ஜோஜிந்தர் சிங் சலாரியா.இந்தியாவை பூர்வீகமாக கொண்டவரான சலாரியா, 1993 ம் ஆண்டு துபாயில் குடியேறி, போக்குவரத்து வாகன தொழிலை நடத்தி வருகிறார். பேஸ்புக்,

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் வறுமையிலும், வறட்சியிலும் வாடும் மக்கள் வசிக்கும் பகுதியில் 600க்கும் மேற்பட்ட அடி குழாய்களை அமைத்து, அப்பகுதி மக்களின் தண்ணீர் பஞ்சத்தை தீர்த்துள்ளார் இந்திய வம்சாவளி தொழிலதிபரான ஜோஜிந்தர் சிங் சலாரியா.latest tamil news


இந்தியாவை பூர்வீகமாக கொண்டவரான சலாரியா, 1993 ம் ஆண்டு துபாயில் குடியேறி, போக்குவரத்து வாகன தொழிலை நடத்தி வருகிறார். பேஸ்புக், யூட்யூப் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் பாக்.,ன் தென்கிழக்கு பகுதியான தர்பார்கர் மாவட்டத்தில் தண்ணீரின்றி மக்கள் மிகவும் வறுமையில் வாடுவதை அறிந்தார். இதனையடுத்து அப்பகுதியில் உள்ள தன்னார்வலர்களின் உதவியுடன், 600 க்கும் மேற்பட்ட அடி பம்பு குழாய்களை அமைத்து கொடுத்துள்ளார். மேலும் அப்பகுதி மக்களுக்கு உணவு தானியங்கள் வழங்கவும் ஏற்பாடு செய்துள்ளார்.


latest tamil news


இது குறித்து சலாரியா கூறுகையில், புல்வாமா சம்பவத்திற்கு பிறகு இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. கடுமையான வறட்சியில் பாதிக்கப்பட்ட இப்பகுதி கிராம மக்களுக்கு தண்ணீர் பம்புகள் அமைத்து கொடுத்துள்ளோம். சாலை வசதியோ, மருத்துவமனை வசதியோ இல்லாத கிராமங்கள் இவை.
பிரதான சாலையை அடைய இவர்கள் 25 கி.மீ., வரை நடந்து செல்ல வேண்டி உள்ளது. பள்ளிகளும் மிக மோசமான நிலையிலேயே உள்ளன. பெரும்பாலான குழந்தைகள் பள்ளிக்கு செல்ல வாய்ப்பு இல்லை. இங்குள்ளவர்களில் 87 சதவீதம் மக்கள் வறுமையில் வசிப்பவர்கள் என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venkatan - Puducherry,இந்தியா
07-ஜூன்-201910:06:17 IST Report Abuse
venkatan இப்படி மோசமான அடிப்படை வசதிகள் இல்லாத பாகிஸ்தான் இந்தியாவிடம் போருக்கு செலவு செய்வதை விட்டு விட்டு மக்களுக்கான ஆக்கபூர்வமான சமூக நலன் சார்ந்த செயல்களில் ஈடுபடுவது நல்லது.வீண் சண்டையை தவிர்க்கலாம்.
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
06-ஜூன்-201919:18:00 IST Report Abuse
Natarajan Ramanathan இவருக்கு இந்தியாவின் மஹாராஷ்டிரா மாநிலத்தின் சில பகுதிகளில் நிலவும் கொடுமையான தண்ணீர் பஞ்சத்தையும் யாராவது தெரியப்படுத்தினால் நல்லது.
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
06-ஜூன்-201923:14:40 IST Report Abuse
 Muruga Velநீங்க ஏதாவது தர்ம காரியம் செய்யக்கூடாதா .. அமெரிக்காவில் பிறந்த பில்கேட்ஸ் ஆப்பிரிக்காவிலும் ஆசியாவிலும் போலியோவை ஒழிக்க பாடு படவில்லையா .. மகாராஷ்டிராவில் அமிதாப் பச்சனும் சல்மான் கானும் முகேஷ் அம்பானியும் கோடிகளில் வரி செலுத்துகிறார்கள் … வரிக்கு மேலும் தான தர்மங்கள் செய்யும் வசதி படைத்தவர்கள் ......
Rate this:
Cancel
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
06-ஜூன்-201918:16:02 IST Report Abuse
 nicolethomson வரவேற்க வேண்டிய செய்தி இது , நன்றி தினமலர் , இவரின் முழு பெயர் என்ன என்பதனை ஆங்கிலத்திலும் போடுகிறீர்களா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X