சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : ஜூன் 06, 2019 | கருத்துகள் (1)
Advertisement
 'டவுட்' தனபாலு

காங்கிரஸ் தலைவர் ராகுல்: சுற்றுச்சூழல் பிரச்னையை, அரசியல் பிரச்னையாக்கும் வரை, அதற்கு முக்கியத்துவம் கிடைக்காது.

டவுட் தனபாலு: எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருப்பதால், எந்தப் பிரச்னையையும், அரசியல் பிரச்னையாக்கினால் தான், உங்க வண்டி ஓடும்னு சொல்லுங்க... சுலபமாய் தீரும் எந்தப் பிரச்னையும், அரசியல் புகுந்தால் என்ன ஆகும்கறது தெரியாதா... தெரிந்தும், இப்படி ஒரு ஆசை உங்களுக்கு எதற்கு என்பது தான், மக்களின், 'டவுட்!'

***

தெலுங்கு தேசம், எம்.பி., கேசினேரி ஸ்ரீனிவாஸ்: கட்சியின், லோக்சபா கொறடா பொறுப்பை எனக்கு, கட்சித் தலைவர், சந்திரபாபு நாயுடு அளித்துள்ளார். இந்த மிகப் பெரிய பொறுப்புக்கு, நான் தகுதியானவன் இல்லை. அதனால், தகுதியான சிறந்த ஒருவருக்கு அளிக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளேன்.

டவுட் தனபாலு: பதவி வேண்டாம்கற அரசியல்வாதிகளை பார்ப்பது, அபூர்வம்... உங்களின் இந்த முடிவுக்குப் பின்னால், பெரிதாய் ஏதோ ஒளிந்திருக்குமோ... ஒருவேளை, கூட்டணிக் கணக்கெல்லாம் மாறி, மத்திய அமைச்சர் பதவி தேடி வந்தாலும், இதே பதிலைச் சொல்வீங்களா என்பது, 'டவுட்' தான்...!

***

பத்திரிகை செய்தி: துணை முதல்வர் பன்னீர்செல்வம், தன் மகனுடன், ஜெயலலிதா நினைவிடம் சென்று, மரியாதை செலுத்தினார்.

டவுட் தனபாலு: இவரு, ஜெ., நினைவிடம் சென்றாலே, பின்னாளில் ஏதோ பெருசா வெடிக்க காத்திருக்கு என்ற, 'டவுட்' இருக்கு... தேனி லோக்சபா தொகுதியில் வெற்றி பெற்ற மகன் ரவீந்திரநாத் குமாருக்கு, மத்திய அமைச்சரவையில் இடமளிக்க, முதல்வர் தரப்பில் இருந்து எந்த அழுத்தமும் தரப்படலை என்ற விமர்சனம் இருக்கும் நேரத்தில், இந்த நிகழ்வு, பல கேள்விகளை எழுப்புதே...!

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
07-ஜூன்-201918:18:44 IST Report Abuse
D.Ambujavalli பேசாமல் மெரீனாவுக்கு பக்கமாக ஒரு பங்களாவை வாங்கிப்போட்டு தினம் நடைப்பயிற்சிக்குப் போவது போல் 'அம்மாவுக்கு' அட்டெண்டன்ஸ் கொடுக்கலாமே. ஆன்னா ஊன்னா அங்கே போய் உட்கார்வதைத்தவிர மக்கள் நலன் பற்றி என்று நினைத்திருக்கிறார்?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X