கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
கண்டிப்பு,ஹெல்மெட்,வாகனம்,பறிமுதல்,லைசென்சை,ரத்து,ஐகோர்ட்,அறிவுறுத்தல்

சென்னை: 'ஹெல்மெட்' அணியாமல் சென்றால் இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்ற உத்தரவை கண்டிப்புடன் அமல்படுத்தும்படி அதிகாரிகளை சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. மேலும் வாகன ஓட்டிகளின் லைசென்சை ரத்து செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

சென்னையை சேர்ந்த ராஜேந்திரன் தாக்கல் செய்த மனுவில் 'இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும். ஆனால் ஹெல்மெட் அணியாமல் செல்கின்றனர். சட்ட விதிகளை கண்டிப்புடன் பின்பற்றும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்' என கூறப்பட்டுள்ளது. மனு நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் அடங்கிய 'டிவிஷன் பெஞ்ச்' முன் விசாரணைக்கு வந்தது.

'இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும்; பொது மக்களிடம் ஹெல்மெட்டின் அவசியம் குறித்தும் விதிகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்' என நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு

வந்தபோது கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். போக்குவரத்து போலீஸ் இணை ஆணையர் மற்றும் துணை ஆணையர்கள் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தனர்.

வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது போக்குவரத்து இணை ஆணையர் சுதாகர், துணை ஆணையர் ஸ்ரீஅபினவ் ஆஜராகினர். ஹெல்மெட் அணியாமல் வாகனங்களில் சென்ற வகையில் ஆறு மாதங்களில் நான்கு லட்சத்துக்கும் மேலான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக அரசு தரப்பில்

தெரிவிக்கப்பட்டது. மேலும் ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களுக்கு விதிக்கப்படும் 100 ரூபாய் அபராத தொகையை அதிகரிப்பதற்கான சட்ட திருத்தம் பார்லிமென்ட்டில் நிலுவையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

நீதிபதிகள் எழுப்பிய கேள்விகள்:


இரு சக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் யாரும் ஹெல்மெட் அணிவதில்லை. டில்லி, பெங்களூரில் கட்டாய ஹெல்மெட் சட்டத்தை கண்டிப்புடன் அமல்படுத்தும் போது தமிழகத்தில் மட்டும் ஏன் அமல்படுத்த முடியாது.

ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்கள் ஓட்டுவோரின் உரிமங்களை ஏன் ரத்து செய்யக் கூடாது; அவர்களின் வாகனங்களை ஏன் பறிமுதல் செய்யக் கூடாது. போலீசார் பலரும் ஹெல்மெட் அணியாமல் வாகனங்களில் செல்வதை பார்க்க முடிகிறது. அவர்களுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த் பாண்டியன் ''ஹெல்மெட் அணியாமல் சென்றால் வாகனங்களை பறிமுதல் செய்ய ஏற்கனவே 'டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது. மோட்டார் வாகன சட்ட விதிகள் கண்டிப்புடன் அமல்படுத்தப்படுகின்றன. ஹெல்மெட் அணியாத போலீசாருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது'' என்றார்.

உடன் 'ஹெல்மெட் விதிகளை மீறுபவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்ய ஏற்கனவே உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதாக கூடுதல் அட்வகேட் ஜெனரல் தெரிவித்துள்ளார்; அந்த உத்தரவை அதிகாரிகள் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்' என நீதிபதிகள் அறிவுறுத்தினர். விசாரணையை வரும் 12ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.


Advertisement

வாசகர் கருத்து (55)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce - tokyo,ஜப்பான்
10-ஜூன்-201908:46:34 IST Report Abuse

oceடு வீலர்களில் மூன்று கியர்கள்உள்ளன. 18 முதல் 25 வரை வயதுள்ள பிள்ளைகள் மூன்றாவது கியரில் 50 60 கிமீ வேகத்தில் அதிவேகமாக போவதும் 25 முதல் 50 வயது வரையுள்ளவர்கள் ரோடின் மேடுபள்ளங்கள் தடைகள் சாலையோரம் செல்லும் மக்கள் கூட்டம் பெடஸ்டரியன் கிராசிங் சிக்னல்கள் அடிக்கடி கிராஸ் செய்யும் மாடுகள் நாய்கள் போன்றவற்றைகளை கவனித்து சற்று நிதானமாக 35 கிமீ. வேகத்தில் செல்லுவதும் அன்றாட நிகழ்வுகள். ரோடில் செல்லும் டுவீலர் வேகத்தை 35 கி.மீ வேகத்திற்கு மேல் செல்லக்கூடாது என்ற தடையை வண்டி தயாரிக்கும் கம்பெனிகளுக்கு உத்தரவிடவேண்டும். சில வண்டிகளில் கை பிரேக்குகள் வைக்கிறார்கள். அந்த கை பிரேக்குகள் சில நேரங்களில் அதிக பயன்பாடு காரணமாக அதன் கேபிள் ஒயர் அறுந்து வண்டியை நிறுத்தமுடியாமல் ஆபத்தில் கொண்டு விடுகிறது. அதையும் கால் பிரேக்குக்குமாற்ற உத்தரவிடவேண்டும். அந்த கால லேம் ரெட்டா போன்ற பெரிய ஸ்கூட்டர்களில் கால் பிரேக் வைத்திருந்தார்கள். இருசக்கர வண்டிகள் ரோடில் ஓடும்போது ஒவ்வொரு 5 கி.மீட்டர் இடைவெளியில் அவை தானாகவே ஆப் ஆகி சில நிமிடங்கள் பொறுத்து மீண்டும் அடுத்த ஐந்து கி.மீ வரை ஒடி நின்று பிறகு ஓடவேண்டும். இந்த முறைகளை பின் பற்றினால் வண்டி ஓட்டிகள் வண்டியை அடக்கி ஓட்டி எதிர் வரும் ஆபத்தை தவிர்க்கலாம். அந்த மாதிரி நிகழ்வுகளில் தலைக்கு பாதுகாப்பு கவசம் தேவை இல்லை. .

Rate this:
vidhuran - chennai,இந்தியா
08-ஜூன்-201908:34:14 IST Report Abuse

vidhuranநடிகர் விவேக் பகுத்தறிவை பரப்புவதை போல சில பெரிய ஹீரோக்கள் நடிப்பில் கூட ஹெல்மெட் அணிந்துதான் நடிப்போம் என்றும் அதனை தங்களது ரசிகர் மன்றங்கள் மூலமாக ஒரு இயக்கமாக நடத்துவோம் என்று உறுதியெடுத்துக்கொள்ளட்டும். உதாரணமாக விஜய், சூர்யா அஜித் போன்றவர்கள் இது போன்ற அறிவுரைகளை முக்கியமாக பெண்கள் ஏற்கவேண்டும். அவர்கள் தான் அதிகமாக ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களில் வேகமாக பயணிக்கின்றனர்.

Rate this:
vidhuran - chennai,இந்தியா
08-ஜூன்-201908:30:59 IST Report Abuse

vidhuranஅவன் அப்படிசெய்யவேண்டும் அரசு இப்படி செய்யவேண்டும் போலீஸ் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று எல்லோரும் கருத்து மாத்திரம் எழுதிக்கொண்டு இருக்காமல் இன்றுமுதல் நான் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனத்தை உபயோகிக்கமாட்டீன் என்று சபதம் செய்து அதை நடைமுறை படுத்துங்கள்

Rate this:
மேலும் 52 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X