புதுடில்லி: காங்கிரஸ் மூத்த தலைவர், சோனியாவின் மருமகன், ராபர்ட் வாத்ரா, 50, லண்டனில் வாங்கியுள்ள, பிற சொத்துக்கள் பற்றிய விபரத்தை அளிக்குமாறு, பிரிட்டன் அரசிடம், இந்தியாவின், அமலாக்க இயக்குனரகம் கோரியுள்ளது.
'நோட்டீஸ்'
சில ஆண்டுகளுக்கு முன், வாத்ரா, லண்டனில் வாங்கிய, பல கோடி ரூபாய் மதிப்புள்ள
சொத்துக்கான பண ஆதாரம் மற்றும் நிதி மோசடி குறித்து, அமலாக்க இயக்குனரகம் விசாரித்து வருகிறது. இது தொடர்பான விசாரணைக்கு, வாத்ராவும் பலமுறை ஆஜராகியுள்ளார். எனினும், மேலும் பல சொத்துக்களை, வாத்ரா, லண்டனில் வாங்கி குவித்திருக்கலாம் என, அமலாக்க இயக்குனரகம் சந்தேகிக்கிறது.
கிடைத்த தகவல்களை ஊர்ஜிதப்படுத்த, பிரிட்டன் மற்றும் அதன் தொடர்புடைய அமைப்புகளின் உதவியை, அமலாக்க இயக்குனரகம் கேட்டுள்ளது. வாத்ராவுடன் தொடர்புடைய, தலைமறைவாகியுள்ள ஆயுத தரகர், சஞ்சய் பண்டாரிக்கு, ஏற்கனவே, அமலாக்க இயக்குனரகம், 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளது. இந்நிலையில், வாத்ராவின் கூட்டாளி எனக்கருதப்படும், கேரளாவை பூர்வீகமாக கொண்ட, வெளிநாடு வாழ் இந்தியர், சி.சி.தம்பி என்பவருக்கும், அமலாக்க இயக்குனரகம் நேற்று, நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நிதி மோசடி:
இவர், 2017ல், கேரளாவில், 1,000 கோடி ரூபாய்க்கு, நிலங்கள் வாங்கியுள்ளார். அதில், அவர், நிதி மோசடியில் ஈடுபட்டு உள்ளார் என, அமலாக்க இயக்குனரகம் கருதுகிறது. காங்கிரஸ் மூத்த தலைவர்,சோனியாவின் உதவியாளர் ஒருவர் மூலம், வாத்ராவுக்கு அவர் நெருக்கமாகியுள்ளார் எனக் கூறப்படுகிறது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (30)
Reply
Reply
Reply