பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
வாத்ரா வாங்கி குவித்த சொத்துக்கள்
துருவுகிறது அமலாக்க இயக்குனரகம்

புதுடில்லி: காங்கிரஸ் மூத்த தலைவர், சோனியாவின் மருமகன், ராபர்ட் வாத்ரா, 50, லண்டனில் வாங்கியுள்ள, பிற சொத்துக்கள் பற்றிய விபரத்தை அளிக்குமாறு, பிரிட்டன் அரசிடம், இந்தியாவின், அமலாக்க இயக்குனரகம் கோரியுள்ளது.

வாத்ரா,சொத்துக்கள்,துருவுகிறது,அமலாக்க இயக்குனரகம்


'நோட்டீஸ்'


சில ஆண்டுகளுக்கு முன், வாத்ரா, லண்டனில் வாங்கிய, பல கோடி ரூபாய் மதிப்புள்ள

சொத்துக்கான பண ஆதாரம் மற்றும் நிதி மோசடி குறித்து, அமலாக்க இயக்குனரகம் விசாரித்து வருகிறது. இது தொடர்பான விசாரணைக்கு, வாத்ராவும் பலமுறை ஆஜராகியுள்ளார். எனினும், மேலும் பல சொத்துக்களை, வாத்ரா, லண்டனில் வாங்கி குவித்திருக்கலாம் என, அமலாக்க இயக்குனரகம் சந்தேகிக்கிறது.

கிடைத்த தகவல்களை ஊர்ஜிதப்படுத்த, பிரிட்டன் மற்றும் அதன் தொடர்புடைய அமைப்புகளின் உதவியை, அமலாக்க இயக்குனரகம் கேட்டுள்ளது. வாத்ராவுடன் தொடர்புடைய, தலைமறைவாகியுள்ள ஆயுத தரகர், சஞ்சய் பண்டாரிக்கு, ஏற்கனவே, அமலாக்க இயக்குனரகம், 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளது. இந்நிலையில், வாத்ராவின் கூட்டாளி எனக்கருதப்படும், கேரளாவை பூர்வீகமாக கொண்ட, வெளிநாடு வாழ் இந்தியர், சி.சி.தம்பி என்பவருக்கும், அமலாக்க இயக்குனரகம் நேற்று, நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Advertisement

நிதி மோசடி:


இவர், 2017ல், கேரளாவில், 1,000 கோடி ரூபாய்க்கு, நிலங்கள் வாங்கியுள்ளார். அதில், அவர், நிதி மோசடியில் ஈடுபட்டு உள்ளார் என, அமலாக்க இயக்குனரகம் கருதுகிறது. காங்கிரஸ் மூத்த தலைவர்,சோனியாவின் உதவியாளர் ஒருவர் மூலம், வாத்ராவுக்கு அவர் நெருக்கமாகியுள்ளார் எனக் கூறப்படுகிறது.


Advertisement

வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
07-ஜூன்-201919:54:10 IST Report Abuse

தமிழ் மைந்தன்சாதிக் பாட்சாவுடன் கோடியக்கரை சண்முகம் ஞாபகம் வரவில்லையா

Rate this:
07-ஜூன்-201919:18:48 IST Report Abuse

padma rajanஇவ்வளவு வருடமா துருவிக் கொண்டே இருக்கீங்க இன்னும் தருவிண்டு இருக்கீங்களா. சீக்கிரமா அந்த ஆள உள்ள தள்ளுங்க.

Rate this:
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
07-ஜூன்-201918:59:05 IST Report Abuse

தமிழ்வேல் கூறப்படுகின்றது, சொல்லப்படுகின்றது ...........ன்னு வர்றத பார்த்தா, இதுவும் புஸ்ஸுன்னு போயிடும் போல தோனுது.

Rate this:
மேலும் 27 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X