பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
மத்திய அரசில் புது கேபினட் கமிட்டிகள்

புதுடில்லி : பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக, மேலும் பல, கேபினட் கமிட்டிகளை, மத்திய அரசு நேற்று அமைத்துள்ளது.

மத்திய அரசு,கேபினட் கமிட்டிகள்,பிரதமர்,மோடி,PM,Modi


இட வசதி:


மத்தியில் புதிய அரசு பொறுப்பேற்கும் போது, கேபினட் கமிட்டிகள் புதிதாக உருவாக்கப்படுவதும், மாற்றியமைக்கப்படுவதும் வழக்கம். அந்த வகையில், பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துதல், வேலைவாய்ப்பை பெருக்குதல் மற்றும் நாட்டின் பாதுகாப்பிற்கான கேபினட் கமிட்டிகள், நேற்று முன்தினம் உருவாக்கப்பட்டன. பிரதமர் மோடி தலைமையிலான இந்த கமிட்டிகளுடன், நேற்றும் புதிதாக சில கமிட்டிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

நியமனங்களுக்கான கேபினட் கமிட்டி:
தலைவர் - பிரதமர் மோடி. உறுப்பினர் - உள்துறை அமைச்சர், அமித் ஷா.

'அக்காமடேஷன்' எனப்படும், இட வசதி அளிக்கும் கேபினட் கமிட்டி:
தலைவர் - அமித் ஷா. உறுப்பினர்கள் - சாலை போக்குவரத்து துறை அமைச்சர், நிதின் கட்கரி; நிதியமைச்சர், நிர்மலா சீதாராமன்; ரயில்வே அமைச்சர், பியுஷ் கோயல். சிறப்பு அழைப்பாளர்கள் - நகர்ப்புற விவகாரம் மற்றும் விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர், ஹர்தீப் புரி; பிரதமர் அலுவலகத்துறை இணையமைச்சர், ஜிதேந்திர சிங்.

பொருளாதார விவகாரங்களுக்கான கேபினட் கமிட்டி:
தலைவர் - மோடி. உறுப்பினர்கள் - ராணுவ அமைச்சர், ராஜ்நாத் சிங்; சாலை போக்குவரத்து துறை அமைச்சர், கட்கரி; ரசாயனம் மற்றும் உரங்கள் துறை அமைச்சர், சதானந்த கவுடா; நிதியமைச்சர், நிர்மலா சீதாராமன்; விவசாய அமைச்சர், நரேந்திர சிங் தோமர்; தகவல் தொடர்புத்துறை அமைச்சர், ரவிசங்கர் பிரசாத்.

உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர், ஹர்சிம்ரத் கவுர்; வெளியுறவுத் துறை அமைச்சர், ஜெய்சங்கர்; பெட்ரோலியத்துறை அமைச்சர், தர்மேந்திர பிரதான், பியுஷ்கோயல்.

Advertisement

பார்லிமென்ட் விவகாரங்களுக்கான கேபினட் கமிட்டி:
தலைவர் - அமித் ஷா. உறுப்பினர்கள் - நிர்மலா சீதாராமன், தோமர், ரவிசங்கர் பிரசாத், நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர், ராம்விலாஸ் பஸ்வான்; சமூக நீதி அமைச்சர், தாவர் சந்த் கெலாட். சுற்றுச்சூழல் துறை அமைச்சர், பிரகாஷ் ஜாவடேகர்; பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர், பிரஹலாத் ஜோஷி.

சுகாதாரத்துறை:


அரசியல் விவகாரங்களுக்கான கேபினட் கமிட்டி:
தலைவர் - மோடி. உறுப்பினர்கள் - அமித் ஷா, கட்கரி, நிர்மலா சீதாராமன், பியுஷ் கோயல், ராம்விலாஸ் பஸ்வான், ரவிசங்கர் பிரசாத். பிரஹலாத் ஜோஷி, ஹர்சிம்ரத் கவுர் பாதல், சுகாதாரத்துறை அமைச்சர், ஹர்ஷ்வர்தன், கனரக தொழில்கள் துறை அமைச்சர், அரவிந்த் சாவந்த்.


Advertisement

வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
PSN - CHENNAI,இந்தியா
08-ஜூன்-201921:27:14 IST Report Abuse

PSNஎந்த திட்டம் கொண்டுவந்தாலும் அதை எதிர்க்க ஒரு கூட்டமே காத்து கொண்டு இருக்கு. நீட் வேண்டாம், ஹிந்தி வேண்டாம், மீத்தேன் வேண்டாம், அணு கழிவு உலை வேண்டாம், எட்டு வழி சாலை வேண்டாம், ஸ்டெரிலைட் ஆலை வேண்டாம். அனால் எல்லோருக்கும் வேலை வேண்டும். உன்னை சொல்லி குற்றமில்லை என்னை சொல்லி குற்றமில்லை. தமிழர் செய்த கோலமடா. கமிட்டீ மட்டும் வைத்து என்ன புண்ணியம். இவங்க எல்லாம் அடங்கட்டும்.

Rate this:
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
07-ஜூன்-201919:49:01 IST Report Abuse

தமிழ் மைந்தன்தமிழகத்தில் நான்கு வகையாக அமைத்தால் தலா 9 பேருக்கு வாய்ப்பு கிடைக்கும்..........செய்யுமா மோடி அரசு

Rate this:
07-ஜூன்-201918:14:22 IST Report Abuse

ஆப்புவிவசாயிகள் வருமானம் இரட்டிப்பு கமிட்டி, 2 கோடி வேலை வாய்ப்பு கமிட்டி, கோதாவரி, காவேரி இணைப்புக் கமிட்டி இதெல்லாம் கிடையாதா ஐயா?

Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X