பதிவு செய்த நாள் :
துணை சபாநாயகர் பதவி
வரிந்து கட்டும் சிவசேனா

புதுடில்லி: லோக்சபா துணை சபாநாயகர் பதவியை பெறுவதற்கு, சிவசேனா கட்சி தலைவர்கள், தீவிரமாக முயற்சித்து வருகின்றனர்.

shiv sena,சிவசேனா,துணை சபாநாயகர்,பதவி,வரிந்து கட்டும்


'ஆளும் கட்சியின், பிரதான கூட்டணி கட்சி என்ற அடிப்படையில், துணை சபாநாயகர் பதவி, இயற்கையாகவே, எங்களுக்கு தான் தரப்பட வேண்டும்' என, சிவசேனா கட்சியினர் கூறி வருகின்றனர். சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணி, மீண்டும் ஆட்சியை பிடித்தது.

பா.ஜ.,வின் பிரதான கூட்டணி கட்சியான, சிவசேனா, 18 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்நிலையில், லோக்சபாவுக்கு, விரைவில், சபாநாயகர், துணை சபாநாயகர் பதவிக்கான

தேர்தல் நடக்கவுள்ளது. பா.ஜ.,வுக்கு அதிக, எம்.பி.,க்கள் இருப்பதால், அந்த கட்சியைச் சேர்ந்த ஒருவரே, சபாநாயகர் பதவிக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்படவுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சர் மேனகாவுக்கு, சபாநாயகர் பதவி கிடைக்கலாம் என, கூறப்படுகிறது. இதற்கிடையே, துணை சபாநாயகர் பதவியை பெறுவதற்கு, சிவசேனா, ஐக்கிய ஜனதா தளம், பிஜு ஜனதா தளம் ஆகிய கட்சிகள், தீவிரமாக முயற்சித்து வருகின்றன. பிஜு ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவருக்கு, துணை சபாநாயகர் பதவி தரப்படவுள்ளதாக, பேச்சு அடிபடுகிறது.

இந்நிலையில், சிவசேனா கட்சியின் மூத்த தலைவரான, சஞ்சய் ரவுத் கூறியதாவது: பிஜு ஜனதா தளம், பா.ஜ.,வின் கூட்டணி கட்சியல்ல. லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வை எதிர்த்து, இந்த கட்சியினர் போட்டியிட்டனர். எங்கள் கட்சிக்கு, லோக்சபாவில், 18 எம்.பி.,க்கள் உள்ளனர். எனவே, தே.ஜ., கூட்டணியில், பா.ஜ.,வுக்கு அடுத்தபடியாக, அதிக தொகுதிகளில் வென்ற கட்சி என்பதால்,

Advertisement

இயற்கையாகவே, துணை சபாநாயகர் பதவி, எங்களுக்கு தான் தரப்பட வேண்டும்; அதற்கான முயற்சியில் ஈடுபட்டு உள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.

மோடி தலைமையிலான புதிய அமைச்சரவையில், தங்கள் கட்சிக்கு, ஒரு இடம் மட்டுமே தரப்பட்டுள்ளதால், சிவசேனா தலைவர்கள், அதிருப்தியில் உள்ளனர். இதனால், துணை சபாநாயகர் பதவி, அந்த கட்சியினருக்கு தரப்பட வாய்ப்பு அதிகம் உள்ளதாக, அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. கடந்த லோக்சபாவில், அ.தி.மு.க.,வைச் சேர்ந்த, தம்பிதுரை, துணை சபாநாயகராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manian - Chennai,இந்தியா
09-ஜூன்-201900:16:35 IST Report Abuse

Manianஇப்படி உள்ளூர ஆளுக இருக்க அவசியம்தான். தேவையான போது போலி அமளி பண்ணுவாங்க.

Rate this:
PSN - CHENNAI,இந்தியா
07-ஜூன்-201910:12:54 IST Report Abuse

PSNமஹாராஷ்டிராவில் தேர்தல் வருது. இவர்கள் ஒத்துழைப்பு அவசியம்.

Rate this:
blocked user - blocked,மயோட்
07-ஜூன்-201904:19:45 IST Report Abuse

blocked userகுறைந்தபட்சம் ஓவராக பேசுவதை நிறுத்த சந்தர்ப்பம் உண்டு.

Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X