தோல்விக்கு காரணம் சபரிமலை; ஒப்புக்கொண்டது இந்திய கம்யூ.,

Updated : ஜூன் 07, 2019 | Added : ஜூன் 07, 2019 | கருத்துகள் (33)
Advertisement

திருவனந்தபுரம்: 'கேரளாவில் கம்யூ., கட்சியின் தோல்விக்கு சபரிமலை பிரச்னைதான் காரணம்' என இந்திய கம்யூ., பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளது.






லோக்சபா தேர்தலில் கேரளாவில் 20 தொகுதிகளில் ஒன்றில் மட்டுமே, ஆளுங்கட்சியான இடது முன்னணி வென்றது. தோல்வியை ஆராய இந்திய கம்யூ., சார்பில் குழு அமைக்கப்பட்டது. நேற்று நடந்த மாநில நிர்வாகக்குழுவில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.






அறிக்கை விபரம்:


சபரிமலையில் 50 வயதுக்கு உட்பட்ட பெண்களை அனுமதிக்கும் பிரச்னையில் இடது முன்னணி அரசு எடுத்த நடவடிக்கை இந்துக்களை கோபம் அடைய செய்தது. அது எதிர்ப்பாக மாறியது. சபரிமலை பிரச்னையை அலட்சியப்படுத்தும் வகையில் இடது முன்னணியின் தேர்தல் பிரசாரம் அமைந்திருந்தது. அரசுக்கு எதிரான பிரசாரத்தை தடுக்கவில்லை. சிறுபான்மையினர் ஒருங்கிணைந்தது தோல்விக்கு மற்றொரு காரணம். மீண்டும் மோடி ஆட்சி வருவதை தடுக்க சிறுபான்மையினர் எடுத்த முடிவு இடது முன்னணிக்கு பாதகமாக அமைந்தது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

'சபரிமலை பிரச்னைதான் படுதோல்விக்கு காரணம்' என இந்திய கம்யூ., பகிரங்கமாக ஒத்துக்கொண்டாலும், மார்க்சிஸ்ட் கட்சி மவுனம் காக்கிறது.

Advertisement




வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sukumar Talpady - Mangalore ,இந்தியா
07-ஜூன்-201920:38:32 IST Report Abuse
Sukumar Talpady கம்யூனிஸ்ட் கட்சியின் தோல்விக்கு சபரிமலை ஐயப்பன் தான் காரணம் தான் என்றால் , கம்யூனிஸ்ட்களும் ஹிந்து சாமிகளை நம்ப ஆரம்பித்து விட்டார்கள் என்றுதான் அர்த்தம் . இனிமேல் ஹிந்து கடவுள்களை கேலி செய்யமாட்டார்கள் என்று நம்பலாம் . அய்யப்ப சாமி கம்யூனிஸ்ட்களுக்கு பாடம் புகட்டி விட்டார் என்று எடுத்து கொள்ளலாம் . ஆனால் இங்கே ஒருவர் சொன்னது ஹிந்து வாக்குகள் பா ஜ க விற்கு போயிருக்க வேண்டுமே தவிர காங்கிரஸ் கட்சிக்கு ஏன் போனது என்று தெரியவில்லை . மலையாளிகள் இன்னும் பா ஜ க வை நம்ப ஆரம்பிக்கவில்லை என்று எடுத்து கொள்ளலாம் . ஆனால் பக்கத்திலுள்ள தமிழ் நாட்டில் கிருஷ்ண பகவானை கேலி செய்து பேசினாலும் , ஹிந்து மதத்தை இழிவாக பேசினாலும் , வைத்த விபூதி அழித்தாலும் , தமிழர்கள் தி மு க வை மாபெரும் வெற்றி பெற செய்து விட்டார்கள் என்பதை தாங்கி கொள்ள முடியவில்லை . கிருஷ்ண பகவானுக்கு கோவம் வரவில்லையா ?
Rate this:
Share this comment
Cancel
narayanan iyer - chennai,இந்தியா
07-ஜூன்-201914:06:41 IST Report Abuse
narayanan iyer கம்யூனிஸ்ட் பார்ட்டி இப்போ இழந்த தேசிய அங்கீகாரம் மீண்டும் பெற இதுபோன்ற நடவடிக்கைகளில் எடுபடாமல் இருக்கவும் .
Rate this:
Share this comment
Cancel
Ramesh Nagarajan - chennai,இந்தியா
07-ஜூன்-201914:05:16 IST Report Abuse
Ramesh Nagarajan எங்களை போல் சபரி மலைக்கு விரதம் இருந்து கண்ணிய நேர்த்தியுடன் செல்லும் பக்தர்மார்களின் சாபம் வீண் போகவில்லை. இதுவும் அய்யப்பனின் திருவிளையாடல் தான் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X