பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
மீண்டும் வட்டியை
குறைத்தது ரிசர்வ் வங்கி

மும்பை: வங்கிகளுக்கு வழங்கும், குறுகிய கால கடனுக்கான, 'ரெப்போ' வட்டியை, ரிசர்வ் வங்கி மீண்டும் குறைத்துள்ளது.

,RBI,Reserve Bank,ரிசர்வ் வங்கி,வட்டி,குறைப்பு


நிதிக் கொள்கை குழு கூட்டத்திற்கு பின், நேற்று, வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகிய கால கடனுக்கான, ரெப்போ வட்டியை, 0.25 சதவீதம் குறைத்துள்ளதாக, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதையடுத்து, ரெப்போ வட்டி விகிதம், இதற்கு முன் இருந்த, 6 சதவீதத்திலிருந்து, 0.25 சதவீதம் குறைந்து, 5.75 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டதால், வாகன கடன், வீட்டுக்கடன் உள்ளிட்ட, கடன்கள் மீதான வட்டி குறைவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

நிதிக் கொள்கை குழு உறுப்பினர்கள் ஆறு பேரும், ஒருமனதாக வட்டி விகித குறைப்புக்கு ஆதரவளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தனியார் முதலீடுகளை அதிகரிக்கவும், தேவைகள் அதிகரிப்புக்கு ஊக்கம் கொடுக்கும் வகையிலும், வட்டி விகிதத்தை குறைக்கும் முடிவுக்கு வந்திருப்பதாக, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி கவர்னராக, சக்திகாந்த தாஸ் பதவியேற்ற பின், மூன்றாவது முறையாக, ரெப்போ விகிதம் குறைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு, டிசம்பர் மாதத்தில் சக்திகாந்த தாஸ் கவர்னராக பொறுப்பேற்றார்.

அவர் பதவி ஏற்ற பின், பிப்ரவரியில் நடந்த முதல் நிதிக் கொள்கை கூட்டத்தில், ரெப்போ விகிதம், 6.50 சதவீதத்திலிருந்து, 6.25 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. அடுத்து, ஏப்ரலில் நடைபெற்ற கூட்டத்தில், மேலும், 0.25 சதவீதம் குறைக்கப்பட்டு, 6 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டது. தற்போது, மூன்றாவது முறையாக, மீண்டும், 0.25 சதவீதம் குறைக்கப்பட்டு, ரெப்போ வட்டி விகிதம், 5.75 சதவீதமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதுள்ள பொருளாதார மந்த நிலையை மாற்றும் முயற்சியில், ரிசர்வ் வங்கி, தீவிரமாக இறங்கி இருப்பது, இந்த வட்டி குறைப்பிலிருந்து அறிய முடிவதாக நிபுணர்கள் கூறியுள்ளனர். நிதிக் கொள்கை குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கியமான முடிவுகளில் சில:

* நிதியாண்டு, 2019 - -20க்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி, இதற்கு முன், 7.2 சதவீதமாக கணிக்கப்பட்டிருந்தது. இது தற்போது, 7 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது

* நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான, அரையாண்டு காலகட்டத்தில், மொத்த உள்நாட்டு உற்பத்தி எதிர்பார்ப்பு, இதற்கு முன்பிருந்த, 6.8 -- 7.1 சதவீதம் என்ற நிலையிலிருந்து, 6.4 -- 6.7 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

* நடப்பு, 2019 செப்டம்பர் முதல், 2020 மார்ச் வரையிலான காலகட்டத்தில், மொத்த உள்நாட்டு உற்பத்தி எதிர்பார்ப்பு, 7.3 -- 7.4 சதவீதத்திலிருந்து, 7.2 -- 7.5 சதவீதமாக திருத்தியமைக்கப்பட்டு உள்ளது

Advertisement

* நடப்பு நிதியாண்டின், முதல் அரையாண்டுக்கான, நுகர்வோர் பணவீக்கம், 2.9 -- 3.0 சதவீதம் என்பதிலிருந்து, 3.0 - 3.1 சதவீதமாக மாற்றப்பட்டுள்ளது* சிறு வங்கிகளுக்கான அனுமதியை, விரைவாக வழங்குவதற்கான வரைவு, ஆகஸ்ட் மாதத்துக்குள் தயாரிக்கப்படும்

* வங்கி வாடிக்கையாளர்கள், ஆர்.டி.ஜி.எஸ்., மற்றும் என்.இ.எப்.டி.,மூலம் பணப் பரிவர்த்தனை செய்வதற்கான கட்டணம் நீக்கப்படுகிறது

* டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை அதிகரிப்பதற்காக எடுக்கப்படும் இந்த நடவடிக்கையின் பயனை, வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும்

* ஏ.டி.எம்., சேவைக்கான கட்டணங்கள் உள்ளிட்டவற்றை ஆராய, ஒரு குழு அமைக்கப்படும்

* நிதிக் கொள்கை குழுவின் அடுத்த கூட்டத்தின் முடிவுகள், ஆகஸ்ட், 7ம் தேதி அறிவிக்கப்படும்.


Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
07-ஜூன்-201908:05:28 IST Report Abuse

ஆப்புஇவுரு மூணு தடவை குறைத்தும் வளர்ச்சி உயரவில்லை. கொஞ்சநாள்ள இவரை இன்னும் வட்டியைக் குறைக்கச் சொல்லி கட்டாயப்படுத்தி, இவரே இடி விடற மாதிரி செஞ்சுருவாங்க.

Rate this:
Mani Nrs - mumbai,இந்தியா
07-ஜூன்-201904:49:37 IST Report Abuse

Mani Nrsவர்த்தக நிருவனங்கள் அனைத்தும் ரூ 1௦௦௦ க்கு மேல் பரி வர்த்தனை செயும்போது கண்டிப்பாக டிஜிட்டல் பரிவர்த்தையில் தான் செய்ய வேண்டும் என்றும் கை யுருப்பு துகை பெரிய வர்த்தகத்தற்கு ரூ ஒரு லட்சத்துக்குள்ளும்சிறிய வர்த்தகத்திற்கு ரூ பத்தாயிரத்துக்குள்ளும் இருக்க வேண்டும் அதிக துகையை உடனுக்குடன் வங்கி கணக்கில் செலுத்தவும் உத்தரவினை கண்டிப்பாக பின்பற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் சில நிறுவனங்கள் டிஜிடல் பரிவர்தனை செய்வதை தவிர்க்க மெஷின் வேலை செய்வது இல்லாமல் நெட்வொர்க் பிராப்ளம் எனவே கேஷ் தருமாறு கூரிகின்றனர் எனவே இதை சரி செய்யவும் டிஜிடல் வர்தகத்துக்கு டேக்ஸ் பிடிப்பதை கட்டுப்படுத்துனால் அனைத் வர்த்தகமும் கணக்கில் வந்து விடும் குறிப்பாக இப்போது கல்வி நிறுவனங்கள் மருந்து விற்பனை மற்றும தங்க வியாபாரிகள் இவர்களை முதலில் டிஜட்டலுக்கு மாறினாலே பாதி கருப்பு பணம் ஒழியும்

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X