உலகளவில் இந்தியாவின் மதிப்பு உயர்வு :வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கணிப்பு

Added : ஜூன் 07, 2019
Advertisement
 உலகளவில் இந்தியாவின் மதிப்பு உயர்வு :வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கணிப்பு

புதுடில்லி:''கடந்த ஐந்து ஆண்டு களில், உலக அளவில், இந்தியாவின் மதிப்பு உயர்ந்திருப்பதை, மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர்,'' என, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்து உள்ளார்.

டில்லியில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில், அவர் பேசியதாவது:இந்தியாவின் வளர்ச்சியை, இங்கிருந்து பார்ப்பதற்கும், வெளிநாட்டில் இருந்து பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. இந்த அரசு உயிர்ப்புடன் செயல்படுகிறது. மாற்றங்களுக்கான எதிர்பார்ப்புகள், வலிமை அடைந்துள்ளன.

மத்திய அரசின் பல்வேறு துறைகளுக்கு இடையே, நெருக்கமான ஒருங்கிணைப்பு இருக்க வேண்டிய அவசியம், தற்போது அதிகம் வலியுறுத்தப்பட்டு வருகிறது.ஒருங்கிணைந்து செயல்படுவதன் மூலமே, நாம் திறனை அதிகரிக்க முடியும். நம் பொருளாதாரம், வேகமான வளர்ச்சி அடைய வேண்டுமென்றால், நம் வெளியுறவுத் துறையின் பங்களிப்பு மிகயும் அவசியம்.

சரியான திட்டங்களை சாதுர்யமாகச் செயல்படுத்துவது, வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் முன், மிகப்பெரிய சவாலாக காத்திருக்கிறது.கடந்த, ஐந்து ஆண்டுகளில், உலக அளவில், இந்தியாவின் மதிப்பு பன்மடங்கு உயர்ந்திருப்பதை, பெரும்பாலான மக்கள் உணர்ந்துள்ளனர்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X