பதிவு செய்த நாள் :
தெலுங்கானாவில் காலியாகிறது காங்கிரஸ்
12 எம்.எல்.ஏ.,க்கள் ஆளும் கட்சிக்கு ஓட்டம்

தெலுங்கானாவில், காங்கிரஸ் கூடாராம் காலியாகிறது. அந்த கட்சியைச் சேர்ந்த, 12 எம்.எல்.ஏ.,க்கள், சபாநாயகர் ஸ்ரீனிவாச ரெட்டியை சந்தித்து, தங்களை, ஆளும், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியில் இணைய அனுமதிக்கும்படி, கோரிக்கை விடுத்து உள்ளனர்.

தெலுங்கானா,காலியாகிறது,காங்கிரஸ்,12 எம்.எல்.ஏ.,ஆளும் கட்சி,ஓட்டம்


தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான, டி.ஆர்.எஸ்., எனப்படும், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது.

18 ஆக குறைந்தது:


கடந்த டிசம்பரில், இங்கு நடந்த சட்டசபை தேர்தலில், மொத்தம் உள்ள,119 தொகுதிகளில், 88 தொகுதிகளில் வெற்றி பெற்று, டி.ஆர்.எஸ்., ஆட்சியை தக்க வைத்தது. எதிர்க்கட்சியான காங்கிரஸ்,19 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்., - எம்.எல்.ஏ.,க்களை, தங்கள் பக்கம் இழுப்பதற்கு, ஆளும் கட்சியினர், பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். இதன் பலனாக, காங்., - எம்.எல்.ஏ.,க்கள் சிலர், டி.ஆர்.எஸ்., கட்சிக்கு தாவப் போவதாக அறிவித்தனர்.

இது தொடர்பாக, சபாநாயகர், ஸ்ரீனிவாச ரெட்டியை, மார்ச்சில் சந்தித்து பேசினர். இதற்கிடையே, தெலுங்கானா மாநில காங்கிரஸ் தலைவர், உத்தம் குமார் ரெட்டி, சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து, தன், எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தார். இதனால், காங்., உறுப்பினர்களின் எண்ணிக்கை, 18 ஆக குறைந்தது.

வாய்ப்பு:


இந்த, 18 எம்.எல்.ஏ.,க்களில், 12 பேர், நேற்று ஐதராபாதில், தலைமைச் செயலகத்துக்கு சென்று, சபாநாயகர் ஸ்ரீனிவாச ரெட்டியை சந்தித்தனர். தங்களை, டி.ஆர்.எஸ்., கட்சியில் இணைய அனுமதிக்கும்படி கோரிக்கை விடுத்தனர். டி.ஆர்.எஸ்., செயல் தலைவரும், முதல்வர் சந்திரசேகர ராவின் மகனுமான, ராமா ராவையும் சந்தித்து, கட்சியில் இணைவது தொடர்பாக பேச்சு நடத்தினர்.

காங்கிரசில் உள்ள மொத்த, எம்.எல்.ஏ.,க்களில், மூன்றில் இரண்டு பங்கினர், டி.ஆர்.எஸ்., கட்சிக்கு தாவ உள்ளதால், இவர்கள் மீது, கட்சி தாவல் தடுப்பு சட்டத்தின் கீழ், நடவடிக்கை எடுக்க முடியாது. மேலும், காங்கிரஸ், எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கையும், ஆறாக குறையும். இதனால், சட்டசபையின் பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தையும், காங்கிரஸ் இழக்க நேரிடும். டி.ஆர்.எஸ்., கூட்டணி கட்சியான, ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சிக்கு, ஏழு எம்.எல்.ஏ.,க்கள் இருப்பதால், பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்து, அந்த கட்சிக்கு கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement

ஜனநாயக படுகொலை:


தெலுங்கானாவில், காங்கிரசின் கூடாரம் காலியாவதால், அந்த கட்சியின் மூத்த தலைவர்கள், கலக்கம் அடைந்துள்ளனர். இது குறித்து, காங்., மூத்த தலைவர், உத்தம் குமார் ரெட்டி கூறியதாவது: இது, ஜனநாயக படுகொலை. நடுநிலையாக செயல்பட வேண்டிய சபாநாயகரே, கட்சி தாவல் நடவடிக்கைகளுக்கு உதவி செய்வது, மோசமான அரசியல். சட்டசபை தேர்தலில், காங்கிரசுக்காகவே, இந்த, 12 பேருக்கும், மக்கள் ஓட்டளித்தனர். இவர்களுக்காக தனிப்பட்ட முறையில் ஓட்டளிக்கவில்லை. இவர்களை, டி.ஆர்.எஸ்., கட்சி, விலை கொடுத்து வாங்கியுள்ளது; இது, ஜனநாயக விரோத நடவடிக்கை. இவ்வாறு, அவர் கூறினார்.

காங்கிரசார் போராட்டம்!

டி.ஆர்.எஸ்.,கட்சிக்கு தாவ முடிவு செய்துள்ள, 12 எம்.எல்.ஏ.,க்களில், ரோகித் ரெட்டியும் ஒருவர். இந்த, 12 பேரும், நேற்று, சபாநாயகரை சந்தித்ததை அடுத்து, காங்கிரஸ் மூத்த தலைவர்கள், கட்சி நிர்வாகிகளுடன், சட்டசபை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை, போலீசார், அங்கிருந்து வெளியேற்றினர்; சிலரை கைது செய்தனர். இந்த சம்பவத்தால், தெலுங்கானா மாநில அரசியல் களத்தில், பரபரப்பான சூழல் நிலவுகிறது.


- நமது சிறப்பு நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rafi - Riyadh,சவுதி அரேபியா
15-ஜூன்-201914:23:08 IST Report Abuse

Rafi ஜனநாயகம் குழி தோண்ட முற்படுத்தப்பட்டுள்ளது. தேவையில்லாமல் இடைத்தேர்தல் நடப்பதை தவிர்க்க வேண்டும், பொதுவாகவே ஒரு கட்சி உறுப்பினர் இறந்து விட்டால் அக்கட்சியே வேறு ஒரு நபரை தேர்ந்தெடுக்கும் நபரை அங்கீகரிக்க வேண்டும். அப்போது தான் இது போன்ற அவலங்கள் நடை பெறுவதை தடுக்க முடியும். முழுவதும் இரண்டு மாதம் ஆகவில்லை, அதற்குள் கட்சியின் மீது வெறுப்பு வர வாய்ப்பில்லை. முழு மெஜாரிட்டி இருக்கும் சந்திர சேகர்ராவ் இந்த அநாகரிக செயலுக்கு துணை போகும் பட்சத்தில் மக்களின் கோபம் எதிர்காலத்தில் மாறும். அப்போது இதற்கான விலையை கொடுக்க வேண்டி வரும். ஆளுநர் துணை செய்கின்றார் என்றால் வேறு மாநிலங்களில் இது போன்ற செயல்கள் நடக்க முன்னோட்டம் பார்க்க படுவதற்காகவே என்று தோன்றுகின்றது.

Rate this:
07-ஜூன்-201913:27:26 IST Report Abuse

அண்ணாமலை ஜெயராமன்கைப்புள்ளை கூடாரம் காலியாகும் மாநிலத்திற்கு போகாமல் கேரளாவிற்கு வந்தது ஏன்.

Rate this:
எதிர்க்குரல் - சிங்கார சென்னை ,இந்தியா
07-ஜூன்-201917:37:07 IST Report Abuse

எதிர்க்குரல் இது உங்கள் இடம் சுப்பு லக்ஷ்மணன் திருக்குறளை எழுதியவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் என்று பாடம் சொல்லி கொடுத்த ஆசிரியர் போல கல்வித்துறைக்கு களங்கம். ரஜினி காந்த பாஜவுக்கு கவர்ச்சி தலைவராம் இதை எல்லாம் இன்றைய இளைஞர்களா ஏற்பார்கள்.???முழுவதையும் பார்த்த அவர்களுக்கு இந்த அரைகுறை கவர்ச்சி எல்லாம் எந்த விதத்திலும் எடுபடாது. ...

Rate this:
rmr - chennai,இந்தியா
07-ஜூன்-201912:43:47 IST Report Abuse

rmrகாமராஜர் காலத்தோடு congress அழிந்து விட்டது இப்போது இருப்பது ஒரு -

Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X