வாஜ்பாய் வசித்த பங்களாவில் குடியேறுகிறார் அமித் ஷா

Updated : ஜூன் 07, 2019 | Added : ஜூன் 07, 2019 | கருத்துகள் (3)
Advertisement

புதுடில்லி: டில்லியில், மறைந்த முன்னாள் பிரதமர், வாஜ்பாய் வசித்த பங்களாவில், மத்திய அமைச்சரும், பா.ஜ., தலைவருமான, அமித் ஷா, விரைவில் குடியேற உள்ளார்.






டில்லியில், அமைச்சர்கள், வி.வி.ஐ.பி.,க்கள் வசிக்கும், மத்திய டில்லி பகுதியில் உள்ள, கிருஷ்ண மேனன் மார்க் பகுதியில் உள்ள பங்களாவில், வாஜ்பாய், தன் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். பிரதமராக இருந்த போது, பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் வசித்த அவர், 2004ல், பார்லிமென்டில் நடந்த ஓட்டெடுப்பின் போது, ஆட்சியை இழந்ததும், கிருஷ்ண மேனன் மார்க் பகுதியில் உள்ள, பங்களாவுக்கு மாறினார். அது முதல், கடந்த ஆண்டு ஆகஸ்டில், அவர் இறக்கும் வரை, குடும்பத்தினருடன் அங்கு வசித்தார்.





வாஜ்பாய் இறந்ததை அடுத்து, நவம்பரில், அவரின் குடும்பத்தினர் பங்களாவை காலி செய்தனர். தற்போது யாரும் குடியேறவில்லை. அந்த பங்களா, அமித் ஷாவுக்கு ஒதுக்கப்பட உள்ளது .சில நாட்களுக்கு முன், அங்கு சென்ற அமித் ஷா, சில மாற்றங்களை செய்ய உத்தரவிட்டார். விரைவில் அங்கு அவர் குடியேற உள்ளார். தற்போது அவர், டில்லியில், அக்பர் சாலை, 11ம் எண் பங்களாவில் வசிக்கிறார்.

கடந்த முறை பிரதமரானதும், 'டில்லியில் தலைவர்கள் வசித்த இல்லங்கள், நினைவிடங்களாக மாற்றப்படாது' என, மோடி உத்தரவிட்டார். அதன்படி, வாஜ்பாய் வசித்த பங்களாவும், நினைவிடமாக மாற்றப்படவில்லை. எனினும், டில்லியில் தலைவர்களுக்காக நினைவிடங்கள் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில், அவருக்கு நினைவிடம் கட்டப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
07-ஜூன்-201916:00:49 IST Report Abuse
ஆப்பு குடிசையில் வசிக்க இவுரு என்ன ஏழைத்தாயின் மகனா? கோடீஸ்வரரின் தந்தை...
Rate this:
Share this comment
Cancel
அருண்நம்பி - Chennai,இந்தியா
07-ஜூன்-201910:12:40 IST Report Abuse
அருண்நம்பி மாபெரும் தலைவர், சிறந்த மனிதர் வாழ்ந்த வீடு, இவருக்கு கிடைத்தே இவர் வாழ்நாள் பாக்கியம்.... வாழ்த்துக்கள் ஐயா...
Rate this:
Share this comment
Cancel
blocked user - blocked,மயோட்
07-ஜூன்-201903:45:23 IST Report Abuse
blocked user மிக எளிமையானவர் வசித்த பங்களா. அவரைப்போல அமித்ஷாவும் சிறப்புற வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X