மும்மொழி கல்வி கொள்கை

Added : ஜூன் 07, 2019 | கருத்துகள் (4)
Advertisement
 மும்மொழி கல்வி கொள்கை

புதுடில்லி:''ஹிந்தி படிக்காததால், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஆண்கள், பல்வேறு மாநிலங்களில்,தரையை சுத்தம் செய்யும்வேலையை செய்து வருகின்றனர்; பெண்கள், மும்பை, 'பார்'களில் நடனமாடுகின்றனர்,'' என, மேகாலயா மாநில கவர்னர், டதகதா ராய் கூறியது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசு, சமீபத்தில், கல்வி வரைவுகொள்கையை அறிவித்தது.இதன்படி, 'ஹிந்தி பேசாத மாநிலங்களில், மாணவர்கள், மூன்றாவது மொழியாக, கட்டாயம் ஹிந்தியை கற்க வேண்டும்' என, பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருந்தது.இதற்கு, தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட, ஹிந்தி மொழி பேசாத மாநிலங்களில், கடும் எதிர்ப்பு எழுந்தது.

இந்நிலையில், மேற்கு வங்க மாநிலத்தின், மூத்த, பா.ஜ., தலைவரும், தற்போதைய மேகாலயா மாநில கவனர்ருமான, டதகதா ராய் கூறியுள்ளதாவது:மேற்கு வங்க மாநிலத்தின் பெருமை, தற்போது காணாமல் போய் விட்டது.மேற்கு வங்க ஆண்கள், ஹரியானாவிலிருந்து, கேரளா வரை, பல்வேறு மாநிலங்களில், தரையை சுத்தம் செய்யும் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர்.மேற்கு வங்க பெண்கள், மும்பை போன்ற நகரங்களில் உள்ள, 'பார்'களில் நடனமாடுகின்றனர்.

ஹிந்தி மொழி கற்பதை, அரசியல் காரணங்களுக்காக, சிலர் எதிர்க்கின்றனர்.அசாம், மஹாராஷ்டிரா, ஒடிசா ஆகிய மாநிலங்களிலும், பெரும்பாலான மக்கள், ஹிந்தி மொழி பேசுவது இல்லை. ஆனால், அவர்கள் ஹிந்தி கற்பதற்கு, எதிர்ப்பு தெரிவிப்பது இல்லை. இவ்வாறு, அவர் கூறினார்.இதற்கு, திரிணமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள், கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
07-ஜூன்-201919:38:39 IST Report Abuse
தமிழ்வேல் ஓக்கே, அப்போ இந்த வேலைகளை எல்லாம் யார் செய்யணும்னு எதிர்பார்க்கிறீங்க ஜீஜி ? ஹிந்தி படிச்சவங்களா ? /// மேற்கு வங்க ஆண்கள், ஹரியானாவிலிருந்து, கேரளா வரை, பல்வேறு மாநிலங்களில், தரையை சுத்தம் செய்யும் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர்.மேற்கு வங்க பெண்கள், மும்பை போன்ற நகரங்களில் உள்ள, 'பார்'களில் நடனமாடுகின்றனர். ///
Rate this:
Share this comment
Cancel
P.Sekaran - விருத்தாசலம்,இந்தியா
07-ஜூன்-201912:37:56 IST Report Abuse
P.Sekaran எல்லா தனியார் பள்ளியிலும் இந்தியை விருப்ப பாடமாக கற்பிக்கிறார்கள். அரசு பள்ளியில் இந்தியை விருப்ப பாடமாக மாணவர்கள் படித்துகொள்ளட்டுமே. அவர்கள் எதிர்காலத்திற்கு மற்ற மாநிலத்திற்கு செல்லும்போது பயன்படுமே.
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
07-ஜூன்-201919:40:07 IST Report Abuse
தமிழ்வேல் கரடியா கத்தினாலும் இது எவனுக்கும் புரியமாட்டுதே ......
Rate this:
Share this comment
Cancel
natarajan s - chennai,இந்தியா
07-ஜூன்-201906:17:41 IST Report Abuse
natarajan s தமிழன் மட்டும் வெளிமாநிலங்களில் CEO வேலைக்கா போகிறார்கள் > அவர்களும் அங்கு menial வேலைக்குத்தான் வைக்கப்படுகிறார்கள் . கூடுதலாக ஒரு மழையை கற்பதில் இந்த அப்பன் பிள்ளைக்கு என்ன எரிச்சல் என்றே தெரியவில்லை சும்மாவாவது தமிழ் தமிழ் என்று கூவி மொழிப்பாரம்பத்தியதை அழித்ததுதான் மிச்சம் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X