மும்மொழி கல்வி கொள்கை | Dinamalar

மும்மொழி கல்வி கொள்கை

Added : ஜூன் 07, 2019 | கருத்துகள் (4)
 மும்மொழி கல்வி கொள்கை

புதுடில்லி:''ஹிந்தி படிக்காததால், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஆண்கள், பல்வேறு மாநிலங்களில்,தரையை சுத்தம் செய்யும்வேலையை செய்து வருகின்றனர்; பெண்கள், மும்பை, 'பார்'களில் நடனமாடுகின்றனர்,'' என, மேகாலயா மாநில கவர்னர், டதகதா ராய் கூறியது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசு, சமீபத்தில், கல்வி வரைவுகொள்கையை அறிவித்தது.இதன்படி, 'ஹிந்தி பேசாத மாநிலங்களில், மாணவர்கள், மூன்றாவது மொழியாக, கட்டாயம் ஹிந்தியை கற்க வேண்டும்' என, பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருந்தது.இதற்கு, தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட, ஹிந்தி மொழி பேசாத மாநிலங்களில், கடும் எதிர்ப்பு எழுந்தது.

இந்நிலையில், மேற்கு வங்க மாநிலத்தின், மூத்த, பா.ஜ., தலைவரும், தற்போதைய மேகாலயா மாநில கவனர்ருமான, டதகதா ராய் கூறியுள்ளதாவது:மேற்கு வங்க மாநிலத்தின் பெருமை, தற்போது காணாமல் போய் விட்டது.மேற்கு வங்க ஆண்கள், ஹரியானாவிலிருந்து, கேரளா வரை, பல்வேறு மாநிலங்களில், தரையை சுத்தம் செய்யும் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர்.மேற்கு வங்க பெண்கள், மும்பை போன்ற நகரங்களில் உள்ள, 'பார்'களில் நடனமாடுகின்றனர்.

ஹிந்தி மொழி கற்பதை, அரசியல் காரணங்களுக்காக, சிலர் எதிர்க்கின்றனர்.அசாம், மஹாராஷ்டிரா, ஒடிசா ஆகிய மாநிலங்களிலும், பெரும்பாலான மக்கள், ஹிந்தி மொழி பேசுவது இல்லை. ஆனால், அவர்கள் ஹிந்தி கற்பதற்கு, எதிர்ப்பு தெரிவிப்பது இல்லை. இவ்வாறு, அவர் கூறினார்.இதற்கு, திரிணமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள், கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X