பொது செய்தி

இந்தியா

பட்ஜெட்டுக்கு ஆலோசனை நிர்மலா சீதாராமன் வரவேற்பு

Added : ஜூன் 07, 2019
Advertisement

புதுடில்லி:'பட்ஜெட் தொடர்பாக, பல்வேறு தரப்பினரிடம் இருந்து ஆலோசனைகள் வந்து கொண்டிருக்கின்றன. அதை வரவேற்கிறேன்; ஆலோசனைகளுக்கு நன்றி' என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 'டுவிட்டரில்'கூறியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலானமத்திய அரசில், நிதித் துறை அமைச்சராக, பா.ஜ., மூத்த தலைவர், நிர்மலா சீதாராமன் நியமிக்கப்பட்டுள்ளார்.முந்தைய ஆட்சியில் சிறிது காலம், நிதித்துறை இணையமைச்சராகவும், வர்த்தகத் துறை அமைச்சராகவும்,பின், ராணுவத் துறை அமைச்சராகவும் அவர் செயல்பட்டார்.வரும், 2019 - 2020 நிதியாண்டுக்கான பட்ஜெட், ஜூலை, 5ல் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்கான பணியில், நிர்மலா சீதாராமன் ஈடுபட்டுள்ளார்.

மத்திய புள்ளியியல் துறையின் விபரங்களின்படி, 2018 - 19 நிதியாண்டின் கடைசி காலாண்டில், பொருளாதார வளர்ச்சி, 5.8 சதவீதமாக சரிந்து இருந்தது.இந்நிலையில், உலக வங்கி சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், அடுத்த மூன்று ஆண்டுகளில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 7.5 சதவீதமாக இருக்கும் என, கணிக்கப்பட்டுள்ளது.உயர் பொருளாதார வளர்ச்சியை எட்ட, நிர்மலா சீதாராமனுக்கு கடும் சவால்கள் காத்திருக்கின்றன.

அந்த வகையில், இந்த பட்ஜெட்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.இந்நிலையில், 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில், வெளியிட்டுள்ள செய்தியில், நிர்மலா சீதா ராமன் கூறியுள்ளதாவது:பட்ஜெட் தொடர்பாக, பொருளாதார நிபுணர்கள், பல துறைகளைச் சேர்ந்தவர்கள், பொதுமக்கள் என, பலரும் தங்களுடைய கருத்துகளை கூறிவருகின்றனர்.

இவை, பட்ஜெட் தயாரிப்புக்கு உதவுகிறது. ஒவ்வொருவரின் ஆலோசனைகள், பரிந்துரை களையும் வரவேற்கிறோம். தொடர்ந்து அனுப்புங்கள்; அனைவருக்கும் நன்றி.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X