பொது செய்தி

தமிழ்நாடு

'நீட்' தேர்வு; 62 மாணவர் தேர்ச்சி

Added : ஜூன் 07, 2019
Advertisement

திருப்பூர்:திருப்பூர் கல்வி மாவட்டத்திற்குட்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களில், 62 பேர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும், மே 20ம் தேதி நடந்தது. சுமார், 15 லட்சம் பேர் தேர்வெழுதினர்.
இதற்கான முடிவுகள், நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.இதில், திருப்பூரை சேர்ந்த, 480 அரசு பள்ளி மாணவர்களை பங்கேற்றதில், 62 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், அவிநாசி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவர் வசந்தகுமார், 200 மதிப்பெண் பெறறு முதலிடம் பெற்றுள்ளார்.
'நீட்' பயிற்சி ஒருங்கிணைப்பாளர் கூறுகையில், 'பிளஸ் 2 மாணவருக்கு நீட் பயிற்சி வழங்க திருப்பூரில், 13 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகளிலிருந்து, 480 மாணவர்கள் நீட் பயிற்சி பெற்று தேர்வு எழுதினர். இந்தாண்டு, 62 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்,' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X