பதிவு செய்த நாள் :
விவசாயிகளுக்கு நிதி உதவி
ஆந்திர முதல்வர் அறிவிப்பு

அமராவதி: விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கும், முந்தைய முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் திட்டத்தை ரத்து செய்துள்ள, ஆந்திர முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.காங்., தலைவருமான ஜெகன் மோகன்ரெட்டி, புதிய திட்டத்தை அறிவித்து உள்ளார்.

விவசாயி,நிதி உதவி,ஆந்திர முதல்வர்,அறிவிப்பு


ஆந்திராவில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், மிகப் பெரிய வெற்றியைப் பெற்று, ஒய்.எஸ்.ஆர்.காங்., தலைவர், ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராகபதவியேற்றார்.தேர்தலுக்கு முன், இந்தாண்டு, பிப்.,யில், அப்போது முதல்வராக இருந்த, தெலுங்கு தேசம் தலைவர், சந்திரபாபு நாயுடு, 'அன்னதாதா சுகிபவா' என்ற திட்டத்தை அறிவித்தார்.

அதன்படி, அனைத்து விவசாயிகளுக்கும், ஆண்டுக்கு, 10 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப் படும் என, அறிவிக்கப்பட்டது. தற்போது, அந்த திட்டம் ரத்து செய்யப்பட்டு, 'ரைத்து பரோசா' என்ற பெயரில், புதியதிட்டத்தை, ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். இந்த திட்டத்தின் கீழ், அனைத்து விவசாயிகளுக்கும் ஆண்டுக்கு, 12 ஆயிரத்து, 500 ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐந்து ஆண்டுகளில், இந்த திட்டத்துக்காக, 50 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும், அக்., 15ல்,இந்த திட்டம் அமல்படுத்தப்படும் என, தெரிவிக்கப் பட்டு உள்ளது.

சி.பி.ஐ.,க்கு அனுமதி:


ஆந்திர முதல்வராக இருந்த, தெலுங்கு தேசம் கட்சித் தலைவர், சந்திரபாபு, தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறினார்.

Advertisement

அதைத் தொடர்ந்து, மத்திய அரசுக்கு எதிராகவும், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும் விமர்சனம் செய்து வந்தார்.

இந்த நிலையில், கடந்தாண்டு, நவ., 8ல், மாநில அரசின் அனுமதி பெறாமல், மத்திய புலனாய்வு அமைப்பான, சி.பி.ஐ., ஆந்திராவில் எந்த விசாரணையும் மேற்கொள்வதற்கு தடை விதித்து, அரசாணை வெளியிட்டார்.அந்த அரசாணையை ரத்து செய்து, முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அரசு, புதிய அரசாணையை, தற்போது வெளியிட்டுள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manian - Chennai,இந்தியா
07-ஜூன்-201923:17:39 IST Report Abuse

Manianஆந்திரா சீக்கிரமே போண்டியாகும்

Rate this:
07-ஜூன்-201916:15:16 IST Report Abuse

ஆப்புஅப்பிடிப் போடு...இவுரு ஒரு 12500 ரூவா, மோடி ஐயா ஒரு 6000 ரூவா... மொத்தம் 18,500 ரூவா. விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாயிருச்சு ஆந்திராவுல...

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X