பிரதமர் மோடியுடன் கமல்நாத் சந்திப்பு

Added : ஜூன் 07, 2019 | கருத்துகள் (1)
Advertisement
 பிரதமர் மோடியுடன் கமல்நாத் சந்திப்பு

புதுடில்லி:பிரதமர் நரேந்திர மோடியை, மத்திய பிரதேச மாநில முதல்வர், கமல்நாத், டில்லியில், நேற்று சந்தித்து பேசினார்.

மத்திய பிரதேச மாநிலத்தில், முதல்வர் கமல்நாத் தலைமையில், காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இந்நிலையில் அவர், பிரதமர் நரேந்திர மோடியை, நேற்று சந்தித்து, மாநில வளர்ச்சி பணிகள் குறித்து பேசினார்.இதற்கான மத்திய அரசின் நிதியை, விரைவில் வழங்க, துறை அமைச்சர்களுக்கு அறிவுறுத்து மாறும், கமல்நாத் கேட்டுக் கொண்டார். ''மாநிலங்களின் வளர்ச்சிக்கு, மத்திய அரசு எப்போதும் ஒத்துழைப்பு அளிக்கும்,'' என, பிரதமர் மோடி அவருக்கு உறுதிஅளித்தார்.

கடந்த, 2018ல், ம.பி., யில் நடந்த சட்டசபை தேர்தலில், காங்., அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து, காங்., மூத்த தலைவரான கமல்நாத் முதல்வர் பொறுப்பை ஏற்றார். ஆனால், சமீபத்தில் நடந்து முடிந்த, லோக்சபா தேர்தலில், மாநிலத்தில் மொத்தமுள்ள, 29 தொகுதி களில், 28 இடங்களை, பா.ஜ., கைப்பற்றியது. ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே, காங்., வெற்றி பெற்றது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sathya Dhara - chennai,இந்தியா
09-ஜூன்-201910:19:22 IST Report Abuse
Sathya Dhara கமல்நாத் பொய்ய்யிலே பிறந்து பொய்ய்யிலே வளர்ந்த ....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X