தேர்தல் நிபுணர் கிஷோர் மம்தாவுடன் சந்திப்பு

Added : ஜூன் 07, 2019
Advertisement
 தேர்தல் நிபுணர் கிஷோர் மம்தாவுடன் சந்திப்பு

கோல்கட்டா:மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல், காங்., தலைவருமான மம்தா பானர்ஜியை, தேர்தல் வியூகங்களை வகுத்து தரும் நிபுணர், பிரஷாந்த் கிஷோர் நேற்று சந்தித்து பேசினார்.

மேற்கு வங்கத்தில், முதல்வர், மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல், காங்., அரசு அமைந்துள்ளது. சமீபத்தில் நடந்த, லோக்சபா தேர்தலில், மாநிலத்தில் உள்ள, 42 தொகுதிகளில், திரிணமுல், காங்., 22ல் வென்றது. அதே நேரத்தில், பா.ஜ., 18ல் வெற்றி பெற்று அசத்தியது.

'வரும், 2021ல் நடக்க உள்ள சட்டசபை தேர்தலில், திரிணமுல் காங்.,கை வெல்வோம்' என, பா.ஜ.,வினர் கூறி வருகின்றனர்.கடந்த லோக்சபா தேர்தலில், இரண்டில் மட்டுமே வென்ற, பா.ஜ., இம்முறை பெற்றுள்ள அபார வெற்றி, முதல்வர் மம்தா பானர்ஜிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், தேர்தல் பிரசார வியூகங்களை வகுத்து தரும் பிரபல நிபுணர், பிரஷாந்த் கிஷோர், கோல்கட்டாவில், முதல்வர் மம்தாவை நேற்று சந்தித்து பேசினார். மம்தாவின் உறவினரும், எம்.பி.,யுமான, அபிஷேக் பானர்ஜி, உடனிருந்தார். இரண்டு மணி நேரத்துக்கு மேலாக, இந்த சந்திப்பு நடந்தது.திரிணமுல், காங்., கட்சிக்காக தேர்தல் வியூகங்களை, பிரஷாந்த் கிஷோர் வகுத்து தர உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. ஆனால், அதை இரண்டு தரப்பும் உறுதிப்படுத்தவில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X