பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
24 மணி நேரமும் கடைகள் திறந்திருக்கலாம்
அனுமதி அளித்தது தமிழக அரசு

சென்னை: தமிழகத்தில், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள், ஆண்டு முழுவதும், 24 மணி நேரமும் செயல்பட, தமிழக அரசு அனுமதி அளித்து, அரசாணை வெளியிட்டுள்ளது. இனி, மதுரை மட்டுமின்றி, அனைத்து நகரங்களும், துாங்கா நகரங்களாகும் வாய்ப்பு உருவாகி உள்ளது.

24 மணி நேரம்,கடைகள்,திறந்திருக்கலாம்,அனுமதி,தமிழக அரசு


மத்திய அரசு சார்பில், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் ஒழுங்கு முறை சட்ட மசோதா, 2016ல், இறுதி செய்யப்பட்டது. இந்தச் சட்டப்படி, சினிமா தியேட்டர்கள், ஓட்டல்கள், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள், ஆண்டு முழுவதும், தினமும், 24 மணி நேரமும் திறந்து வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த சட்ட மசோதாவில் உள்ளபடியோ அல்லது அந்தந்த மாநில நடைமுறை தேவைகளின்படி, விதிகளில் மாற்றம் செய்தோ, சட்டத்தை அமல்படுத்தலாம் என, மத்திய அரசு அறிவித்தது.

அதன்படி, தமிழகத்தில், தொழில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பை அதிகரிக்க, அனைத்து கடைகளும், 24 மணி நேரமும் செயல்பட அனுமதி அளிக்கலாம் என, தொழிலாளர் நலத்துறை முதன்மை செயலர், அரசுக்கு பரிந்துரை செய்தார். இதை பரிசீலித்த அரசு, சில விதிமுறைகளுடன், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள், ஆண்டு முழுவதும், 24 மணி நேரமும் செயல்பட அனுமதி அளித்துள்ளது. இந்த அனுமதி, மூன்று ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.இதற்கான உத்தரவை, தொழிலாளர் நலத்துறை முதன்மை செயலர், சுனில் பாலிவால் பிறப்பித்துள்ளார்.

தமிழகத்தில், மதுரையில் கடைகள், 24 மணி நேரமும் திறந்திருக்கும். எனவே, 'துாங்கா நகரம்' என, அழைக்கப்பட்டுவந்தது. தற்போது, மாநிலம் முழுவதும், 24 மணி நேரமும் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களை திறக்க, அரசு அனுமதி அளித்துள்ளதால்,

அனைத்து நகரங்களும், துாங்கா நகரங்களாக வாய்ப்புள்ளது.

நிபந்தனைகள் என்ன?


கடைகள், 24 மணி நேரம் செயல்பட, அரசு சில நிபந்தனைகளை விதித்துள்ளது. அதன்விபரம்:
* 24 மணி நேரமும் செயல்படும், கடைகள் மற்றும் வணிகநிறுவனங்களில், ஒவ்வொரு பணியாளருக்கும், சுழற்சி முறையில், வாரத்தில் ஒரு நாள் விடுப்பு அளிக்க வேண்டும்

* பணியில் இருக்கும் ஊழியர்கள் குறித்த தகவல்கள், அனைவரின் பார்வையில் படும் இடத்தில் வைக்கப்பட வேண்டும்

* ஒரு பணியாளர், ஒரு நாளைக்கு, எட்டு மணி நேரம் அல்லது வாரத்திற்கு, 48 மணி நேரம் மட்டுமே பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும். கூடுதல் நேரம் வேலை பார்த்தால், கூடுதல் தொகை வழங்கவேண்டும்

* கூடுதல் நேரமானாலும், ஒரு நாளைக்கு, 10.30 மணி நேரத்திற்குஅதிகமாகவோஅல்லது வாரத்துக்கு, 57 மணி நேரத்துக்கு மேலாகவோ பணிபுரியக் கூடாது* அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட கூடுதலாகவோ, விடுமுறையிலோ பணியில் ஈடுபடுத்துவதும் குற்றம். மீறினால், மேலாளர் அல்லது நிறுவனத்துக்கு தண்டனை விதிக்கப்படும்

* இரவு, 8:00 மணிக்கு மேல் பெண்கள் பணியாற்ற கூடாது; அவசியம் இருந்தால், பெண்களிடம் எழுத்துப்பூர்வமாக சம்மதம் பெற்ற பின், பணியில் ஈடுபடுத்தலாம்

* பணியில் இருக்கும் பெண்களுக்கு, இரவு, 8:00 முதல், காலை, 6:00 மணி வரை, தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும்; போக்குவரத்து வசதி செய்து தர வேண்டும்

* தொழிலாளர்களுக்கு கழிவறை, ஓய்வறை உள்ளிட்ட, அத்தியாவசிய தேவைகளை ஏற்படுத்தி தர வேண்டும்

Advertisement

* பணியாளர்கள் கூடுதல் நேரம் பணிபுரிந்தால், அதற்கான ஊதியம், அவர்களின் வங்கி கணக்கில், வரவு வைக்கப்பட வேண்டும்

* விதிகளை மீறினால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

வணிகர் சங்கங்கள் வரவேற்பு:

தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர், விக்கிரமராஜா: மத்திய அரசு, 24 மணி நேரமும் கடைகள் செயல்பட, 2016ல் அனுமதி வழங்கியது. அதை, 2017ல் செயல்படுத்த முடிவு செய்த தமிழக அரசு, திடீரென செயல்படுத்தவில்லை. பேரமைப்பு சார்பில், தொடர் போராட்டங்கள் நடத்தி வந்தோம். தற்போது, 24 மணி நேரமும் கடைகள் செயல்பட, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இது, வணிகர்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. போலீசார் இரவில், வியாபாரிகளை அச்சுறுத்தாமல், அவர்களுக்கு, பாதுகாப்பு வழங்க வேண்டும். வியாபாரிகளும், கடைகளை திறந்து, லாப நோக்கத்துடன் மட்டும் செயல்படாமல், மக்களுக்கும், போலீசாருக்கும் ஒத்துழைப்பு வழங்குவதுடன், வேலை வாய்ப்புகளையும் உருவாக்க வேண்டும்.


தமிழ்நாடு அனைத்து மளிகை வியாபாரிகள் சங்க தலைவர், எஸ்.பி.சொரூபன்: தினசரி ஊதியம் பெறும், வாடிக்கையாளர்கள் வசதிக்காக, பல வியாபாரிகள், காலை, 6:00 மணிக்கே கடைகளை திறந்து விடுகின்றனர்; இரவில், தாமதமாக துாங்குகின்றனர். அவர்கள், வியாபாரத்தில் செலுத்தும் கவனத்தை, தங்கள் உடலைகவனிப்பதில் செலுத்தாததால், உடல் நலம் பாதிக்கப்படுகிறது.தமிழக அரசு, 24 மணி நேரமும் கடைகள் திறந்திருக்க அனுமதி வழங்கியதை வரவேற்கிறோம். இதனால், காலையில் சற்று தாமதமாக, கடைகளை திறந்து, இரவில், விருப்பத்திற்கு ஏற்ப மூடலாம். வியாபாரிகளுக்கும் ஓய்வு கிடைக்கும்.


Advertisement

வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - coimbatore,இந்தியா
07-ஜூன்-201923:20:13 IST Report Abuse

Rajஅரசு அலுவலகங்கள் 24 மணி நேரம் திறக்க திட்டம் உள்ளதா ? குறிப்பாக நீதி துறையில் வழக்குகளை தீர்வுக்கு கொண்டு வர 24 மணி நேரம் அலுவலகம் நடக்க வேண்டும். கோடை விடுமுறையை றது செய்து அனைத்து நீதிமன்றங்களும் குளிர்சாதன வசதி செய்யப்பட வேண்டும்.

Rate this:
விவசாயி - Tiruppur,இந்தியா
07-ஜூன்-201921:18:41 IST Report Abuse

விவசாயி விக்கிரமராஜா முந்திக்கொண்டார்.....இல்லையென்றால் ஊழல்தலைவர் மகனுக்கு பாராட்டுவிழா நடத்த ஸ்ரீரங்கம் பூசாரியிடம் நல்ல நாள் கேட்கப்பட்டதாம்............ அதற்கு இவர்வேறு......

Rate this:
PANDA PANDI - Aththipatti,இந்தியா
07-ஜூன்-201921:10:46 IST Report Abuse

PANDA PANDITASMAC 24HRS PLEASE. தமிழ்நாட்டு மக்கள் இந்தியாவில் மகிழ்ச்சியான மக்கள் என்ற AWARD கிடைக்கும்.

Rate this:
மேலும் 25 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X