எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
அவதி!
மின் பயன்பாடு கணக்கீட்டில் தாமதம்:
அதிக கட்டணத்தால் மக்கள் அவதி

வீடுகளில், மின் பயன்பாட்டை ஊழியர்கள் தாமதமாக கணக்கு எடுப்பதால், மின் நுகர்வோர் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

மின் பயன்பாடு கணக்கீட்டில் தாமதம்: அதிக கட்டணத்தால் மக்கள் அவதி


வீடுகளுக்கு, 500 யூனிட் வரை, மானிய விலையில் மின்சாரம் வழங்கப்படுகிறது. அதற்கு மேல் பயன்படுத்தினால், முழு கட்டணத்தை செலுத்த வேண்டும். இரு மாதங்களுக்கு ஒரு முறை, மின் பயன்பாடு கணக்கு எடுக்கப்படுகிறது. கணக்கு எடுத்த, 20 தினங்களுக்குள், கட்டணத்தை செலுத்த வேண்டும்; இல்லையேல், மின் இணைப்பு துண்டிக்கப்படும்.

பின், அபராதத்துடன் கட்டணத்தை செலுத்தியதும், மின் இணைப்பு வழங்கப்படும்.

மின் வாரியம், வீடுகளில், மின் பயன்பாட்டை பொறுத்து, இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை, கூடுதல் வைப்பு தொகை வசூலிக்கிறது. இதன்படி, அதிக மின் பயன்பாடு உள்ள வீடுகளில், தற்போது, வைப்பு தொகை வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மின் பயன்பாடு கணக்கு எடுக்கும் ஊழியர்கள், தாமதமாக வருவதால், மின் நுகர்வோர், அதிக மின் கட்டணத்தை செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

இது குறித்து, பாதிக்கப்பட்டவர்கள் கூறியதாவது: வீடுகளில், 60 நாட்களுக்கு, ஒரு முறை மின் பயன்பாடு கணக்கு எடுக்க வேண்டும். ஏற்கனவே, கணக்கு எடுத்த தேதியில், இந்த முறை கணக்கு எடுப்பதில்லை. தாமதமாக வருவதால், அந்த நாட்களுக்கும் சேர்த்து கணக்கு எடுக்கப்படுகிறது. இதனால், 500 யூனிட்டை தாண்டுவதால், மானிய சலுகை கிடைக்காததுடன், அதிக மின் கட்டணமும் செலுத்த வேண்டி வருகிறது. தற்போது, கோடைக்காலம் என்பதால், மின் பயன்பாடு அதிகம் உள்ளது.

Advertisement



இதனால், வழக்கத்தை விட, அதிக கட்டணம் வருகிறது. தற்போது, கூடுதல் வைப்பு தொகையும் வசூலிக்கப்படுகிறது. இந்த சூழலில், மின் பயன்பாட்டை தாமதமாக கணக்கு எடுப்பதால், கோடைக் காலத்தில், வழக்கத்தை விட வந்துள்ள அதிக கட்டணம், வைப்பு தொகை, கூடுதல் கட்டணம் என, மின் வாரியத்திற்கு மட்டும், அதிக பணத்தை செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

- நமது நிருபர் -

Advertisement

வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
07-ஜூன்-201919:41:25 IST Report Abuse

padma rajanஇரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கணக்கீடு செய்வதால் மின் கட்டணம் அதிகமாக கட்ட வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். இரண்டு மாதங்களுக்கு பதிலாக மாதாமாதம் கணக்கீடு செய்தால் மக்களுக்கு இழப்பீடு இருக்காது. குறிப்பிட்ட தேதியில் கணக்கு எடுக்க வராமல் இரண்டு மூன்று நாட்கள் தள்ளி வந்தால் தோராயமாக மின் அளவை குறைத்து கணக்கிட வேண்டும். ஒரு நாளைக்கு ஆவரேஜாக 5 யூனிட்டுகள் பயன்படுத்துவர்களுக்கு மூன்று நாட்கள் தாமதமாக கணக்கு எடுக்க வந்தால் 15 யூனிட்டுகள் குறைவாக பில் செய்யப்படவேண்டும். ஆந்திராவில் பிரீபெய்டு சிஸ்டம் உள்ளது. ஒருவருடைய மாதாந்திர தேவைக்கு ஏற்றார்போல் முன்கூட்டியே பணம் கட்டி விட வேண்டும். 500 யூனிட்டுக்கு பணம் கட்டினால் அது முடிந்தவுடன் மின் சப்ளை தானாகவே துண்டிக்கப்பட்டு விடும். மின் சிக்கனத்தை நடைமுறைப்படுத்த இங்கேயும் இதுபோன்ற தொழில்நுட்பத்தை கொண்டு வர வேண்டும்.

Rate this:
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
07-ஜூன்-201916:52:23 IST Report Abuse

Natarajan Ramanathanஇந்தியாவிலேயே தமிழகத்தில்தான் மின்கட்டணம் மிகவும் குறைவு என்பது தெரியுமா? முதலில் நூறு யூனிட் இலவச மின்சாரத்தை எடுக்க வேண்டும். SLAB TEM இல்லாமல் முதல் யூனிட்டிலிருந்து ஒரு யூனிட் மூன்று அல்லது நான்கு ரூபாய் என்று வசூலிக்க வேண்டும். அப்படி செய்தால் தாமதமாக வந்தாலும் எந்த பிரச்சினையும் வராது.

Rate this:
A.SESHAGIRI - ALWARTHIRUNAGARI,இந்தியா
07-ஜூன்-201916:37:10 IST Report Abuse

A.SESHAGIRI500 யூனிட்டுக்கு மேல் ஒரு யூனிட் கூடினாலும் அதற்கு அநியாயமாக சுமார் 750 ரூபாய் அரசாங்கமே கூடுதலாக வாங்கினால் மக்கள் எங்கு தான் போய் முறையிடுவது? இது கந்து வட்டிக்காரனின் 'மீட்டர் வட்டிக்கு" மேல் உள்ளது. இதனால் மிகவும் பாதிக்கப்படுவது நடுத்தர மக்கள் தான்.

Rate this:
மேலும் 7 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X