பா.ஜ.- எம்.பி.,க்கு நீதிபதி எச்சரிக்கை

Updated : ஜூன் 07, 2019 | Added : ஜூன் 07, 2019 | கருத்துகள் (61)
Share
Advertisement
பா.ஜ., - எம்.பி.,க்கு நீதிபதி எச்சரிக்கை

மும்பை:மத்திய பிரதேச மாநில, பா.ஜ., - எம்.பி., பிரக்யா சிங் தாக்கூருக்கு, உடல்நிலை சரியில்லாததால், மாலேகான் வெடிகுண்டு வழக்கு விசாரணைக்கு, நேரில் ஆஜராவதில் இருந்து, நேற்று ஒரு நாள் மட்டும், நீதிமன்றம் விலக்கு அளித்தது.இன்று ஆஜராகாவிட்டால், விளைவுகளை சந்திக்க நேரிடும் என,நீதிபதி எச்சரித்தார்.


வழக்கு விசாரணை


சமீபத்தில் நடைபெற்ற லோக்சபா தேர்தலில், பிரக்யா சிங் தாக்கூர், ம.பி., மாநிலம் போபால் தொகுதியில், மூத்த காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங்கை தோற்கடித்தார்.இந்நிலையில், மஹாராஷ்டிர மாநிலம், நாசிக்கில், 2006ல் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு வழக்கில், பிரக்யா சிங் உட்பட ஏழு பேர், குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு உள்ளனர்.இந்த வழக்கு விசாரணை, மும்பையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.


latest tamil news




கடந்த திங்கள் அன்று நடந்தவிசாரணைக்கு, நேரில் ஆஜராக, பிரக்யா சிங்குக்கு, 'சம்மன்' அனுப்பப்பட்டது.ஆனால், பார்லி., அலுவல்கள் இருப்பதாக கூறி, விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்துவிலக்கு கேட்டு,பிரக்யா சிங் மனு தாக்கல்செய்தார். இந்த மனு நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில், பிரக்யா சிங்கை நேற்று ஆஜராக,நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.


கோரிக்கை


ஆனால்,உடல்நலக்குறைவு காரணமாக,அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதால், நேரில் ஆஜராக விலக்கு அளிக்குமாறு, பிரக்யா சிங்கின்வழக்கறிஞர் கோரிக்கை வைத்தார்.இதை ஏற்றுக், இன்று ஒரு நாள் மட்டும் விலக்கு அளிக்கப்படுவதாக கூறிய நீதிபதி, 'பிரக்யா சிங் நாளைஆஜராக வேண்டும்; இல்லையெனில், விளைவுகளை சந்திக்க நேரிடும்' என, எச்சரிக்கை விடுத்தார்.

Advertisement




வாசகர் கருத்து (61)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா
08-ஜூன்-201914:38:04 IST Report Abuse
Nallavan Nallavan ஒண்ணுமில்ல, அங்கே மகாராஷ்டிரத்தில் வரப்போற சட்டப்பேரவைத் தேர்தலில் திரும்ப பாஜக-சிவசேனாக் கூட்டணி ஆட்சியைப் பிடித்துவிடுமோ என்கிற அச்சம்
Rate this:
Cancel
Snake Babu - Salem,இந்தியா
07-ஜூன்-201914:34:41 IST Report Abuse
Snake Babu Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா அவர்களே நீங்கள் போடும் எதிர்க்கருத்து ஒவ்வொன்றும் நெத்தி அடி, எப்படி இப்படி எதிராளிகளை திணறடிக்க விடுறீங்க. சூப்பருங்க, கலக்குங்க…. நன்றி Valka வளமுடன்
Rate this:
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
07-ஜூன்-201915:17:32 IST Report Abuse
Chowkidar NandaIndiaவாழ்த்துக்களுக்கு என் இதயபூர்வமான நன்றி நண்பரே....
Rate this:
Cancel
sankar - Nellai,இந்தியா
07-ஜூன்-201913:19:14 IST Report Abuse
sankar உண்மையிலேயே - ஆளும் அரசுக்கு இது ஒரு தேவை இல்லாத லக்கேஜ்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X