பொது செய்தி

இந்தியா

வட்டி குறைப்பால் வாடிக்கையாளர்களுக்கு பயன் என்ன?

Updated : ஜூன் 07, 2019 | Added : ஜூன் 07, 2019 | கருத்துகள் (3)
Share
Advertisement
வட்டி குறைப்பால்  பயன் என்ன?

'குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் மற்றும் வங்கிகளுக்கான வட்டி விகிதம் குறைப்பால், வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக கிடைக்கும் பயன் குறைவு' என, வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆர்.பி.ஐ., என்ற, இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை கூட்டத்தில், 'ரெப்போ' என்ற, குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம், 0.25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல, வங்கிகளுக்கான வட்டி விகிதமும், 0.50 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இணையதள பணப் பரிவர்த்தனை கட்டணங்களையும், ஆர்.பி.ஐ., ரத்து செய்துள்ளது.இது குறித்து, வங்கி அதிகாரிகள் கூறியதாவது:'ஆன்லைன்' பணப் பரிவர்த்தனைகளுக்கான கட்டணத்தை, ஆர்.பி.ஐ., ரத்து செய்துள்ளது. இதில், ஆர்.டி.ஜி.எஸ்., என்ற, உடனடியாக பணம் சென்றடையும் பிரிவில், அதிகபட்சமாக, 29 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த பிரிவில், குறைந்தபட்சம், 2 லட்சம் ரூபாயிலிருந்து, அதிகபட்சமாக எவ்வளவு தொகையையும், வேறு கணக்கிற்கு உடனடியாக அனுப்ப முடியும்.'நெப்ட்' எனப்படும், தேசிய மின்னணு பணப் பரிமாற்றத்தில், அதிகபட்சம், 15 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதில், அதிபட்சமாக, 2 லட்சம் ரூபாய் மட்டுமே, பணம் அனுப்ப முடியும். இதற்கான கட்டணங்கள், முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.இதனால், பொது மக்களுக்கு அதிக பயன் கிடைக்கும். இனி கட்டணமில்லாமல், ஆன்லைன் பணப் பரிவர்த்தனையை மேற்கொள்ள முடியும்.


latest tamil news



அதேநேரத்தில், குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் மற்றும் வங்கிகளுக்கான வட்டி விகிதம் குறைப்பு காரணமாக, வீடு, வாகன கடன் வட்டி விகிதத்தில், பெரிய மாற்றம் இருக்காது. தற்போது, வீட்டு கடன்களுக்கான வட்டி, அதிகபட்சமாக, 8.60 சதவீதம் உள்ளது. வர்த்தக கடன், 14 சதவீதமாக உள்ளது.

இந்த வட்டி விகிதத்தில் குறைப்பு என்பது, சம்பந்தப்பட்ட வங்கிகளை பொறுத்து அமையும்.நிதிநிலை அறிக்கை திடமாக இருக்கும் வங்கிகள், இந்த பயனை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும். அதுவும், அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்காது; குறிப்பிட்ட துறைகளுக்கு மட்டும் வழங்கும். மேலும், வாராக்கடன் அதிகம் இருக்கும் வங்கிகள், இந்த பயனை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவது அரிது.ஏ.டி.எம்.,மில் பணம் எடுக்க விதிக்கப்படும் கட்டணத்தைக் குறைப்பது அல்லது ரத்து செய்வது தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள குழு, ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும். அதன்பிறகே, இதில் முடிவெடுக்கப்படும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
TamilArasan - Nellai,இந்தியா
07-ஜூன்-201922:50:38 IST Report Abuse
TamilArasan இனி கட்டணமில்லாமல், ஆன்லைன் பணப் பரிவர்த்தனையை மேற்கொள்ள முடியும்...| அருமை...
Rate this:
Cancel
Sadasivan Kulaikather - chennai,இந்தியா
07-ஜூன்-201912:44:15 IST Report Abuse
Sadasivan Kulaikather கடைசி ரெண்டுதடவை RBI வட்டி குறைத்த போது HDFC தன்னுடைய வாடிக்கையாளர்க்கு வட்டி விகிதத்தை குறைக்கவில்லை .
Rate this:
Cancel
Jaya Ram - madurai,இந்தியா
07-ஜூன்-201910:30:32 IST Report Abuse
Jaya Ram ஆன்லைன் பணபரிவர்தனைக்கு கட்டணம் ரத்து செய்தது வரவேற்கத்தகுந்தது .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X