அரசியல் செய்தி

தமிழ்நாடு

முதல்வரின் 'டுவிட்' நீக்கப்பட்டது ஏன் அமைச்சர் ஜெயகுமார் விளக்கம்

Added : ஜூன் 07, 2019 | கருத்துகள் (2)
Advertisement

சென்னை:''தவறாக புரிந்து கொண்டு அரசியலாக்கப்பட்டதால் முதல்வர் பழனிசாமியின் 'டுவிட்டர்' பதிவு நீக்கப்பட்டது. ஹிந்தியை எந்த வடிவிலும் தமிழகம் ஏற்காது'' என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.

சென்னையில் நேற்று அவர் அளித்த பேட்டி:தமிழகம் இரு மொழி கொள்கையை கடைப்பிடித்து வருகிறது; அதிலிருந்து பின் வாங்க மாட்டோம். முதல்வர் தன் 'டுவிட்டர்' பதிவில் 'பிற மாநிலங்களில் தமிழ் மொழியை விருப்ப மொழியாக்க வேண்டும்' என பிரதமருக்கு கோரிக்கை விடுத்திருந்தார். நம் தமிழ் பிற மாநிலங்களிலும் ஒலிக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில் அவ்வாறு பதிவு செய்திருந்தார்.

டில்லிக்கு முதல்வர் சென்ற போது ஒரு பள்ளியில் 'எட்டாம் வகுப்பில் தமிழ் கற்பிக்கும் ஆசிரியர் இல்லை' என பத்திரிகையாளர்கள் கூறினர். இதுபோல பல மாநிலங்களில் தமிழ் கற்பிக்க ஆசிரியர்கள் இல்லாததால் தமிழ் மாணவர்கள் தமிழ் படிக்க முடியாத நிலை உள்ளது.
இதற்கு தீர்வு காண வேண்டும்; பிற மாநிலங்களில் வசிக்கும் தமிழர்களின் குழந்தைகள் தமிழை விருப்ப பாடமாக படிக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வருக்கு கோரிக்கைகள் வந்தன. அதன் அடிப்படையில் பிற மாநிலங்களில் தமிழை விருப்ப பாடமாக படிக்க நடவடிக்கை எடுக்கும்படி முதல்வர் கோரிக்கை விடுத்தார்.

இதை தவறாக திரித்து அரசியல் கட்சிகள் அரசியல் செய்வதை பார்த்து முதல்வர் அந்த பதிவை நீக்கினார். எந்த நிலையிலும் எந்த வடிவத்திலும் ஹிந்தியை தமிழகம் ஏற்காது; இது தான் அரசின் கொள்கை; அ.தி.மு.க.வின் கொள்கை. மொழி விஷயத்தில் எல்லாருடைய கருத்தும் ஒன்றாக இருக்க வேண்டும்; இதில் சர்ச்சை கூடாது என்பதால் டுவிட்டர் பதிவு நீக்கப்பட்டது.

'நீட்' என்பது தமிழகத்திற்கு தேவையில்லாதது. பிள்ளையை கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டியது போல நீட் தேர்வை தி.மு.க. - காங். கூட்டணி அறிமுகப்படுத்தியது; தற்போது எதிர்க்கின்றனர். நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு பெற அரசியல் ரீதியாக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆனால் அதற்காக தற்கொலை தீர்வாகாது. இந்த ஆண்டு இல்லையென்றால் அடுத்த ஆண்டு எழுதலாம்; போராடி வெற்றி பெற வேண்டும். இதற்கு தன்னம்பிக்கை மிகவும் அவசியம்.
இவ்வாறு அமைச்சர் ஜெயகுமார் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
07-ஜூன்-201914:58:23 IST Report Abuse
Girija இதை படிக்கும் பொது சூரியவம்சம் பாட்டு எப் எம் இல் ஒலித்தது "அடக் படக் டோலு பையன் டப்பா உட்டான் பாரு கப்ஸா" தமிழு தமிழு
Rate this:
Share this comment
Cancel
07-ஜூன்-201913:50:44 IST Report Abuse
ருத்ரா நீட் தேர்வில் முதல் மாணவனும் வருகிறானே. வராத மாணவன் தோல்வி என்றால் தற்கொலை. சரியான கோச்சிங் கொடுத்தால் ஈஸி என்று புரிய வைத்தால் யார் வேண்டுமானாலும் வின் பண்ணலாம். நம் மாணவர்கள் எதையும் சாதிக்க கூடியவர்கள். அரசுதான் யோசிக்க வேண்டும்.மொழியை பொறுத்த மட்டும் தாய்மொழியை சுவாசிக்க வேண்டும் பிற மொழிகளை நேசிக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X