செல்பி எடுத்தவரிடம் முதல்வர் ஆத்திரம்

Updated : ஜூன் 07, 2019 | Added : ஜூன் 07, 2019 | கருத்துகள் (31) | |
Advertisement
கர்னால்: தன்னுடன் செல்பி எடுக்க முயற்சித்த பா.ஜ. தொண்டரை அரியானா முதல்வர் மனோகர்லால் கட்டார் அலைபேசியை தட்டிவிட்ட வீடியோ காட்சி சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.அரியானா மாநில பா.ஜ. முதல்வர் மனோகர்லால் கட்டார், நேற்று கர்னாலில் பொது நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தார். அவர் மீது ரோஜா மலர்களை தூவி வரவேற்றனர். அப்போது கையில் அலைபேசியுடன் கட்டாரை நோக்கி வந்த பா.ஜ. தொண்டர்
செல்பி, எடுத்தவரிடம், முதல்வர், ஆத்திரம்

கர்னால்: தன்னுடன் செல்பி எடுக்க முயற்சித்த பா.ஜ. தொண்டரை அரியானா முதல்வர் மனோகர்லால் கட்டார் அலைபேசியை தட்டிவிட்ட வீடியோ காட்சி சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.
அரியானா மாநில பா.ஜ. முதல்வர் மனோகர்லால் கட்டார், நேற்று கர்னாலில் பொது நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தார். அவர் மீது ரோஜா மலர்களை தூவி வரவேற்றனர். அப்போது கையில் அலைபேசியுடன் கட்டாரை நோக்கி வந்த பா.ஜ. தொண்டர் ஒருவர் குறுக்கே வந்து முன் நின்று அவருடன் செல்பி எடுக்க முயற்சித்தார். உடனே அந்த தொண்டர் கையை பிடித்து ஒரமாக இழுத்து விட்டு அலைபேசியை தட்டிவிட்டார். பின்னர் அந்த தொண்டரை நோக்கி சில நிமிடம் முறைத்து பார்த்துவிட்டு சென்றார். இதன் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியுள்ளது.


latest tamil newsAdvertisement
வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
KALIRAJ n -  ( Posted via: Dinamalar Android App )
07-ஜூன்-201914:09:38 IST Report Abuse
KALIRAJ n வயசாய்ச்சி....இதிலெல்லாம் விருப்பம் இருக்காது....
Rate this:
Cancel
Azhagan Azhagan - Chennai,இந்தியா
07-ஜூன்-201913:11:17 IST Report Abuse
Azhagan Azhagan இப்போ சுடலை கூட நீங்கள் ஒரு செல்பி எடுத்து போஸ்ட் பண்ணுங்கள் திமுக தொண்டர்களை மதிக்கிறது என்று ஒத்துக்கொள்கிரோம்.
Rate this:
Cancel
07-ஜூன்-201912:20:34 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் பிரபலங்களை அனுமதி இன்றி செல்பி எடுப்பது தவறு.
Rate this:
Sanny - sydney,ஆஸ்திரேலியா
08-ஜூன்-201906:28:53 IST Report Abuse
Sanny படம் எடுக்க இஷ்டம் இல்லாதவங்க எப்படி பிரபலம் ஆவது. அமெரிக்காவில்தான் பித்துபிடித்த ரசிகர்கள் பணம் கொடுத்து அவர்களுடன் படம் எடுப்பார்கள்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X