10 அவசர சட்டங்களை நிறைவேற்ற நடவடிக்கை

Updated : ஜூன் 07, 2019 | Added : ஜூன் 07, 2019 | கருத்துகள் (11)
Advertisement
10 அவசர சட்டங்களை நிறைவேற்ற நடவடிக்கை

புதுடில்லி: பார்லி.முதல் கூட்டத்தொடரில் 10 அவசர சட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மத்தியில், இரண்டாவது முறையாக பொறுப்பேற்றுள்ள, பிரதமர் மோடி தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, முந்தைய ஆட்சியின் போது முத்தலாக் தடை உள்பட பல்வேறு அவசர சட்டங்களை கொண்டு வந்தது. ஆனால் அவை சட்டமாக நிறைவேறும் முன்பே கடந்த பார்லி கூட்டத்தொடர் முடிவுக்கு வந்தது. தற்போது மோடி மீண்டும் பிரதமராக பொறுப்பேற்றுள்ளார்.





இந்நிலையில். 17 வது லோக்சபாவின் முதல் கூட்டத்தொடர் ஜூன் 17 ல் துவங்கி ஜூலை 26 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறுகிறது. கூட்டத்தொடர் தொடங்கி முடிவடைவதற்குள் அந்த அவசர சட்டங்கள் அனைத்தையும் சட்டமாக நிறைவேற்ற வேண்டும் இல்லையெனில் அவை செல்லாததாகிவிடும்.
எனவே முத்தலாக் தடை, இந்திய மருத்துவ கவுன்சில் சட்டதிருத்தம், கம்பெனிகள் சட்டம், காஷ்மீர் சிறப்பு ஒதுக்கீடு திருத்த சட்டம், ஆதார், முறையற்ற டெபாசிட் திட்டங்கள் உள்பட 10 அவசர சட்டங்களை லோக்சபா முதல் கூட்டத்தொடரிலேயே சட்டமாக நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.


Advertisement


வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
spr - chennai,இந்தியா
07-ஜூன்-201918:33:24 IST Report Abuse
spr "முத்தலாக் தடை, இந்திய மருத்துவ கவுன்சில் சட்டதிருத்தம், கம்பெனிகள் சட்டம், காஷ்மீர் சிறப்பு ஒதுக்கீடு திருத்த சட்டம், ஆதார், முறையற்ற டெபாசிட் திட்டங்கள் உள்பட 10 அவசர சட்டங்கள்" - இப்படி ஒற்றை வரியில் செய்தி வெளியிடாமல், இவை என்னெவென்று முழு விவரம் வெளியிட்டால் என்ன? எவை நம்மை பாதிக்கும் என்றாவது தெரிந்து கொள்ளலாமே இதுதானே செய்தியாக வெளியிடப்பட வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
R S GOPHALA - Chennai,இந்தியா
07-ஜூன்-201914:38:21 IST Report Abuse
R S GOPHALA ஆமாம். இங்கு சட்ட சபையில் சட்டையை கிழித்துக்கொண்டும், சேலைகளை உருவிக்கொண்டும் அரசியல் செய்து சிரிப்பாய் சிரித்தது போல அங்கு போய் செய்தால் நாறிவிடும் தமிழன் மானம் தலைநகரில். போதும்... ஏற்கனவே மிகவும் நாறி போய் கிடக்கிறது. மேலும் மேலும் அசிங்கம் செய்ய வேண்டாம்.
Rate this:
Share this comment
Cancel
கலைவாணன்ஃ, காட்டூர் தமிழக தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு பல கோடி நன்கொடை வாங்கிட அனுமதி கேட்டும் திமுக அரசியல்வாதிகள் நடந்தும் பள்ளிகளில் இந்தி மொழியை நீக்க கூடாது என்றும் சட்டம் கொண்டு வர கோரி திமுக கோரிக்கை விடுக்க வாய்ப்பு உண்டு
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X