புதுடில்லி: பார்லி.முதல் கூட்டத்தொடரில் 10 அவசர சட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்தியில், இரண்டாவது முறையாக பொறுப்பேற்றுள்ள, பிரதமர் மோடி தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, முந்தைய ஆட்சியின் போது முத்தலாக் தடை உள்பட பல்வேறு அவசர சட்டங்களை கொண்டு வந்தது. ஆனால் அவை சட்டமாக நிறைவேறும் முன்பே கடந்த பார்லி கூட்டத்தொடர் முடிவுக்கு வந்தது. தற்போது மோடி மீண்டும் பிரதமராக பொறுப்பேற்றுள்ளார்.

இந்நிலையில். 17 வது லோக்சபாவின் முதல் கூட்டத்தொடர் ஜூன் 17 ல் துவங்கி ஜூலை 26 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறுகிறது. கூட்டத்தொடர் தொடங்கி முடிவடைவதற்குள் அந்த அவசர சட்டங்கள் அனைத்தையும் சட்டமாக நிறைவேற்ற வேண்டும் இல்லையெனில் அவை செல்லாததாகிவிடும்.
எனவே முத்தலாக் தடை, இந்திய மருத்துவ கவுன்சில் சட்டதிருத்தம், கம்பெனிகள் சட்டம், காஷ்மீர் சிறப்பு ஒதுக்கீடு திருத்த சட்டம், ஆதார், முறையற்ற டெபாசிட் திட்டங்கள் உள்பட 10 அவசர சட்டங்களை லோக்சபா முதல் கூட்டத்தொடரிலேயே சட்டமாக நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE