அமெரிக்க பார்லி. பிரதிநிதிகள் சபை தலைவராக இந்தியர் தேர்வு

Updated : ஜூன் 07, 2019 | Added : ஜூன் 07, 2019 | கருத்துகள் (6)
Advertisement
 அமெரிக்க பார்லி. பிரதிநிதிகள் சபை தலைவராக இந்தியர் தேர்வு

வாஷிங்டன்: அமெரிக்க பார்லிமென்ட்டின் கீழ்சபையான பிரதிநிதிகள சபை தலைவராக இந்திய வம்சாவளி பெண் எம்.பி. தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அமெரிக்க பார்லிமென்ட்டில் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த இந்திய வம்சாவளி பெண் பிரமிளா ஜெயபால், 51, எம்.பி.யாக உள்ளார். இவர், அமெரிக்க குடியுரிமை பெற்றவர். அமெரிக்க பார்லிமென்டுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட, முதல், இந்திய - அமெரிக்க பெண் இவர் தான். அமெரிக்க பார்லிமென்டின் கீழ்சபையான பிரதிநிதிகள் சபையின் இடைக்கால தலைவராக பொறுப்பு ஏற்றார்.இதன் மூலம் அமெரிக்க பார்லிமென்ட் பிரநிதிகள் சபையின் தலைவர் இருக்கையில் அமர்ந்த முதல் தெற்கு ஆசிய பெண் என்கிற பெருமையை அடைந்துள்ளார்.

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பிரமிளா ஜெயபால் கூறியது “அமெரிக்க பார்லிமென்ட் பிரதிநிதிகள் சபையின் இடைக்கால தலைவராக பொறுப்பு ஏற்றுள்ளது எனக்கு பெருமையாக உள்ளது. மதிப்புக்குரிய இந்த பொறுப்பை ஏற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
agni - chennai,இந்தியா
07-ஜூன்-201917:43:31 IST Report Abuse
agni காலமும், வாழும் சூழ்நிலையும் மனிதரின் மனதை மாற்றலாம் , அவர்களின் புற அடையாளங்களை மாற்றலாம் ஆனால் இந்த பாரத மண்ணின் உயிர் தன்மையும்,சக்தியும்,கலாச்சாரமும் அவரது ஒவ்வொரு உயிரணுவிலும் மரபணுவிலும் கலந்திருக்கும் இது தான் இயற்கை.அவர் அமெரிக்க குடியுரிமை பெற்றிருக்கலாம்,அமெரிக்க குடியுரிமை பெற்ற இந்தியருக்கு பிறந்திருக்கலாம் ஆனால் அவரின் மரபணு,உயிர் செல்கள், இவை அனைத்திலும் நம் இந்த மண்ணின் சக்தியும்,தன்மையும்,ஞாபகங்களும் நிச்சயம் கலந்திருக்கும்.எனவே அவர் பதவி ,புகழ் அடைந்தாலும்,அடையாவிட்டாலும் இயற்கைபடி பார்த்தால் அவர் இந்தியர்தான்.இதை அவரே மறுத்தாலும் அவருக்குள்ளிருக்கும் இயற்கைக்கு தெரியும் தான் யாரென்று.
Rate this:
Share this comment
Cancel
Selva - CHENNAI,இந்தியா
07-ஜூன்-201910:21:18 IST Report Abuse
Selva நல்ல செய்தி, மேலும் நம் தமிழர் உலகம் முழுவதும் நல்ல பல ஆளுமையுடன் வாழ வாழ்த்துக்கள்... அமெரிக்க பார்லிமென்ட்டின் கீழ்சபையான பிரதிநிதிகள சபை தலைவராக இந்திய வம்சாவளி பெண் எம்.பி. .தமிழன்..
Rate this:
Share this comment
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
07-ஜூன்-201912:29:26 IST Report Abuse
Dr. Suriyaஇவங்களுக்கு தமிழ் மட்டும் தான் தெரியுமா? யாராவது கொஞ்சம் சுடலை கிட்ட கேட்டு சொல்லுங்க...
Rate this:
Share this comment
Cancel
சுந்தரம் - Kuwait,குவைத்
07-ஜூன்-201909:54:50 IST Report Abuse
சுந்தரம் இடைக்கால தலைவருக்கே இம்புட்டு தம்பட்டமா? இந்த ரேஞ்சுல போனா நம்மூர்ல அடுத்து வரப்போற இடைக்கால சபா நாயகரும் இது மாதிரியே தம்பட்டம் தட்டிக்குவாரு போல இருக்கே.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X