தேர்தலில் வெற்றிபெற ஆர்எஸ்எஸ்.,ஐ பின்பற்றுங்கள்: சரத்பவார்

Updated : ஜூன் 07, 2019 | Added : ஜூன் 07, 2019 | கருத்துகள் (37)
Advertisement

மும்பை : தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்றால் ஆர்எஸ்எஸ்.,ஐ பின்பற்றி தேர்தல் பிரசாரம் செய்யுங்கள் என கட்சி தொண்டர்களிடம் கூறி உள்ளார் தேசியவாத காங்., கட்சியின் தலைவர் சரத்பவார்.





மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலுக்கான பிரசாரத்தை இப்போதே துவக்கி உள்ளது தேசியவாத காங்., புனே மாவட்டத்தில் உள்ள சட்டசபை பகுதிகளுக்கு உட்பட்ட தொண்டர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார் சரத் பவார். அப்போது பேசிய அவர், கட்சி தொண்டர்கள் வீடு வீடாக சென்று வாக்காளர்களை சந்திக்க வேண்டும். அப்படி நீங்கள் செய்தால், தேர்தல் சமயத்தில் மட்டுமே எதற்காக உங்களுக்கு எங்களின் நினைவு வருகிறது என கேட்பதை வாக்காளர்கள் நிறுத்தி விடுவார்கள்.




ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் எப்படி பிரசாரம் செய்கிறார்கள் என பாருங்கள். அவர்கள் வரும் போது 5 வீடுகளில் ஒரு வீடு பூட்டி இருந்தாலும் மீண்டும் மீண்டும் வந்து, விஷயங்களை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கிறார்கள். மக்களிடம் எப்படி தொடர்பில் இருக்க வேண்டும் என்பதை ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் நன்றாக தெரிந்து வைத்துள்ளனர் என்றார்.
லோக்சபா தேர்தல் சமயத்தில் மகாராஷ்டிராவிலும், மத்தியிலும் பா.ஜ., வெற்றி பெறுவதையும், மீண்டும் ஆட்சிக்கு வருவதையும் தடுக்க பல வழிகளில் முயற்சி மேற்கொண்டவர் சரத் பவார். பா.ஜ.,வை வீழ்த்த காங்., உடன் கூட்டணி வைக்கவும் கடும் முயற்சி செய்தார்.

Advertisement




வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
TamilArasan - Nellai,இந்தியா
07-ஜூன்-201922:43:18 IST Report Abuse
TamilArasan தன்னலம் பாராமல் தேசநலன் முக்கியம் என்று உழைப்பதுதான் RSS ன் நோக்கம் ஆனால் நீங்கள் அப்படியா...? மகள், மருமகன், பேரன் என்று மொத்த குடும்பத்திலும் அல்லவா கட்சியில் அடைத்துள்ளீர்கள்....
Rate this:
Share this comment
Cancel
kskmet - bangalore,இந்தியா
07-ஜூன்-201919:11:37 IST Report Abuse
kskmet எதற்கு ஆர் எஸ் எஸ் ஐ பின் பற்ற வேண்டும். தேவையே இல்லை. பேசாமல் அதில் சேர்ந்து விடுவதே மிக நல்ல செயல்.
Rate this:
Share this comment
Cancel
padma rajan -  ( Posted via: Dinamalar Android App )
07-ஜூன்-201919:08:15 IST Report Abuse
padma rajan எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆயிட்டாரே. ஒரு காலத்தில் மராட்டிய மாநிலத்தின் மிகப்பெரிய ஹீரோவாக காங்கிரஸ் கட்சியின் முதல்வராக மிகவும் வல்லமை வாய்ந்தவராக வலம் வந்தவர். சரத்பவார் என்றால் எல்லோருக்கும் கிலி ஆக இருந்தார். பாவம் இப்போது இவர் பேச்சைக் கேட்க இவர் குடும்பத்தினரே முன்வருவதில்லை. ஆனால் மனுஷன் மிக சாமர்த்தியமாக சொத்துக்களை சேர்த்துள்ளார்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X