ஆந்திராவுக்கு 5 துணை முதல்வர்கள்: ஜெகன் முடிவு

Updated : ஜூன் 07, 2019 | Added : ஜூன் 07, 2019 | கருத்துகள் (52)
Share
Advertisement

அமராவதி: ஆந்திர வரலாற்றிலேயே முதல் முறையாக 5 துணை முதல்வரை நியமிக்க முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி முடிவு செய்துள்ளார்.



latest tamil news


ஆந்திராவின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஒய்எஸ்ஆர் காங்., கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் இன்று எம்எல்ஏ.,க்கள் கூட்டம் நடந்தது. அப்போது அமைச்சரவையில் 5 துணை முதல்வர்களையும், 25 அமைச்சர்களையும் நியமிக்க உள்ளதாக ஜெகன் மோகன் அறிவித்தார்.


latest tamil news


எஸ்சி, எஸ்டி, பிசி, சிறுபான்மையினர், கபு ஆகிய 5 இனத்தவர்களை சேர்ந்த 5 பேர் துணை முதல்வர்களாக நியமிக்கப்பட உள்ளதாக ஜெகன் அறிவித்துள்ளார். மேலும், 30 மாதங்களுக்கு பிறகு ஒவ்வொரு அமைச்சரின் செயல்பாடுகளையும் கவனித்து, 90 சதவீதம் அமைச்சர்கள் மாற்றி அமைக்கப்படுவார்கள். அவர்களுக்கு பதில் புதியவர்கள் அமைச்சர்களாக நியமிக்கப்படுவார்கள். தனது அமைச்சரவை, எம்எல்ஏ.,க்கள் மற்றும் எம்எல்சி.,க்களை உள்ளடக்கியதாக இருக்கும் எனவும் ஜெகன் தெரிவித்துள்ளார்.


latest tamil news


ஒட்டுமொத்த மாநிலமும் அரசை கவனித்து வருவதால் ஒவ்வொரு நடவடிக்கையையும் மிக கவனமாக எடுக்க வேண்டும் எனவும், அரசு நலத்திட்டங்களில் பல மாற்றங்களை கொண்டு வரவும் தான் முடிவு செய்திருப்பதாகவும் ஜெகன் தெரிவித்துள்ளார். அரசில் ஊழல் புகார்கள் வராமல் தடுக்க, ஒவ்வொரு திட்டம் தொடர்பான ஒப்பந்தத்தையும் கண்காணிக்க நீதித்துறை குழு ஒன்றை அமைக்க ஐகோர்ட் தலைமை நீதிபதியிடம் ஏற்கனவே பேசி உள்ளதாகவும் ஜெகன் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (52)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
08-ஜூன்-201902:35:07 IST Report Abuse
meenakshisundaram thimuka ஆட்சிக்கு வந்தால் இங்கே அனைவருமே 'முதல்வர்கள்'ஆக்கப்படுவார்கள்,ஸ்டாலின் தலைமையில் ,ஸ்டாலின் 'சூப்பர் முதல்வர் 'ஆவார்.இது தமிழன் மேல் சத்தியம் ?
Rate this:
Cancel
Mahendran TC - Lusaka,ஜாம்பியா
07-ஜூன்-201921:29:32 IST Report Abuse
Mahendran TC ஜெகன்மோகன் ரெட்டியை கழுவி கழுவி ஊத்தியதைவிட நம்ம சுடலையைத்தான் அதிகம் பேர் இங்கு கழுவி கழுவி ஊத்தி இருக்காங்க தினமலர் வாசகர்கள். தினமலரின் சேவை நாட்டுக்கு தேவை.
Rate this:
Cancel
Mahendran TC - Lusaka,ஜாம்பியா
07-ஜூன்-201921:29:33 IST Report Abuse
Mahendran TC ஜெகன்மோகன் ரெட்டியை கழுவி கழுவி ஊத்தியதைவிட நம்ம சுடலையைத்தான் அதிகம் பேர் இங்கு கழுவி கழுவி ஊத்தி இருக்காங்க தினமலர் வாசகர்கள். தினமலரின் சேவை நாட்டுக்கு தேவை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X