எந்த நேரத்திலும் கர்நாடகா தேர்தல்: முதல்வர் மகன் பேச்சால் பரபரப்பு

Updated : ஜூன் 07, 2019 | Added : ஜூன் 07, 2019 | கருத்துகள் (7)
Advertisement

பெங்களூரு: கர்நாடக சட்டசபைக்கு எந்த நேரத்திலும் தேர்தல் வரும். அதனால் அனைவரும் தயாராக இருங்கள் என முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில் பேசி உள்ளது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் மாண்டியா தொகுதியில் போட்டியிட்டு தோற்றவர் முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி. இவர், சட்டசபை தேர்தல் குறித்த அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாகும் என்பதால் கட்சி தொண்டர்கள் தயாராக இருக்கும்படி பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை முதலில் கட்சி தொண்டர் சுனில் கவுடா என்பவர் பகிர்ந்ததாக கூறப்படுகிறது.

அந்த வீடியோவில் நிகில், நாம் இப்போதே பணிகளை துவக்க வேண்டும். எப்போது தேர்தல் வரும் என நமக்கு தெரியாது. அடுத்த மாதமா, அடுத்த ஆண்டா, 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு பிறகா என தெரியாது. எந்த நேரத்திலும் சட்டசபை தேர்தல் அறிவிப்பு வரும் என்பதால் மதசார்பற்ற ஜனதா தளம் தொண்டர்கள் இப்போதே தயாராக வேண்டியது அவசியம் என பேசி உள்ளார்.

அதே சமயம், அரசிற்கு எந்த அச்சுறுத்தலோ, பிரச்னையோ இல்லை. எனது தந்தை தலைமையிலான அரசு முழு ஆட்சி காலத்தையும் நிறைவு செய்யும். அரசில் என்ன நடக்கிறது என எங்களுக்கு தெரியும் எனவும் பேசி உள்ளார். மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவராக இருந்த விஸ்வநாத் பதவி விலகி சில நாட்களில் இந்த வீடியோ பரப்பப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
காங்-மஜத கட்சிகள் இடையே ஒற்றுமை இல்லை எனவும், லோக்சபா தேர்தலில் பெற்ற படுதோல்விக்கு பிறகு கூட்டணியில் கடும் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் விஸ்வநாத் கூறி இருந்ததும் தற்போது கவனிக்கப்பட்டு வருகிறது.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
08-ஜூன்-201902:36:28 IST Report Abuse
meenakshisundaram வீட்டுலே பேசினதை அப்படியே வெளியே சொல்லிட்டானே இந்த பச்சை புள்ளே?
Rate this:
Share this comment
Cancel
PANDA PANDI - Aththipatti,இந்தியா
07-ஜூன்-201921:06:46 IST Report Abuse
PANDA PANDI கர்நாடகாவில் பாஜக வந்தால் தமிழ்நாட்டுடன் இணக்கமான உறவு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்.எடப்பாடி cum எடியயூரப்பா.
Rate this:
Share this comment
Cancel
Vaideeswaran Subbarathinam - Bangalore,இந்தியா
07-ஜூன்-201916:55:50 IST Report Abuse
Vaideeswaran Subbarathinam We can't find such a self contradictory statement other than this.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X