ரூ.10 ஆயிரம் கடனுக்காக சிறுமி கொலை

Updated : ஜூன் 07, 2019 | Added : ஜூன் 07, 2019 | கருத்துகள் (3)
Advertisement
ரூ.10 ஆயிரம் கடனுக்காக சிறுமி கொலை

லக்னோ: ரூ.10 ஆயிரம் ரூபாய்க்காக 2 வயது சிறுமி கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உ.பி.,யின் அலிகார் பகுதியை சேர்ந்தவர் பன்வாரிலால் சர்மா. இவருக்கு ட்விங்கிள் சர்மா என்ற 2 வயது குழந்தை உள்ளது. கடந்த மே 31ம் தேதி, குழந்தையை காணவில்லை என போலீசில், பன்வாரிலால் சர்மா புகார் அளித்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், அலிகார் நகரில், கடந்த ஞாயிறு ( ஜூன் 2) அன்று இரண்டு வயது பெண் குழந்தையின் சிதைந்த உடல் கண்டுபிடிக்கப்பட்டது. குழந்தையின் வீடு அருகிலேயே உடலை போலீசார் கைப்பற்றினர். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த சம்வம் தொடர்பாக ஜாகித் மற்றும் அஸ்லாம் என்பவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்கள் கொலை செய்ததை ஒப்பு கொண்டுள்ளனர். விசாரணையில், குழந்தையின் பெற்றோர், ஜாகித்திடம் ரூ.10 ஆயிரம் வரை கடன் வாங்கியிருந்தார். அதை, அவர்கள் திருப்பி கொடுக்காத நிலையில், கடத்தி கொலை செய்ததுடன், வீடருகே உள்ள குப்பை தொட்டியில் சடலத்தை வீசி சென்றது தெரியவந்துள்ளது.


சஸ்பெண்ட்

வழக்கில் அலட்சியம் செய்த 5 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். குற்றவாளிகள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. இதனால், பல பிரபலங்கள், அரசியல்வாதிகள் கவனத்தை பெற்றது. 24 மணி நேரத்தில் 50 ஆயிரம் பேர் சிறுமி கொலை குறித்து டுவீட் செய்துள்ளனர். அனைவரும், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.


கண்டனம்


இந்த சம்பவத்திற்கு காங்., தலைவர் ராகுல் மற்றும் பொதுச் செயலாளர் பிரியங்கா ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது மனித நேயமற்ற செயல். அதிர்ச்சி அளிக்கும் இச்சம்பவம் மன்னிக்க முடியாதது. கொலையாளிகளை சட்டத்தின் நிறுத்தி அந்த சிறுமிக்கு நீதி வழக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
southindian - chennai,இந்தியா
07-ஜூன்-201918:28:19 IST Report Abuse
southindian எல்லாமே தப்புதான் அதென்ன உ பி மட்டும் ராஜஸ்தானில் நடந்தது வெளிநாட்டில உள்ளது கர்நாடகாவில் நடந்தது என்ன வச்சு
Rate this:
Share this comment
Cancel
07-ஜூன்-201916:58:27 IST Report Abuse
சேசப்பர் இதப்பத்தி எவனும் வாய் திறக்க மாட்டார்கள்.
Rate this:
Share this comment
Cancel
07-ஜூன்-201916:07:43 IST Report Abuse
ஆப்பு பெரியவர் கட்சி ஆளும் மாநிலமாச்சே...நிச்சயம் ஆயிரம் நாட்களுக்குள் நியாயம் கிடைக்கும். கிடைக்கலேன்னா, மக்கள் மறந்துடுவாங்க....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X