பொது செய்தி

தமிழ்நாடு

கேரளாவில் இன்று துவங்குகிறது பருவமழை

Updated : ஜூன் 08, 2019 | Added : ஜூன் 07, 2019 | கருத்துகள் (7)
Advertisement
கேரளா, பருவமழை, சென்னை வானிலை மையம், பாலசந்திரன், வெப்பநிலை


சென்னை: தென்மேற்கு பருவமழை கேரளாவில் இன்று (ஜூன் 8) துவங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

சென்னையில் நிருபர்களை சந்தித்த வானிலை மைய இயக்குனர் பாலசந்திரன் கூறியதாவது: தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் தென்மேற்கு பருவ காற்று வலுவடைந்துள்ளது. மேற்கு கடற்கரை ஒட்டிய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருகிறது. வளிமண்டல கீழடுக்கில் காற்றின் திசை கிழக்கு மேற்காக மாறுதல் ஏற்படும் பகுதி நிலவுகிறது. இதனால், இன்று (ஜூன் 8) கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு உள்ளது.






வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் மழை பெய்யக்கூடும். உள்மாவட்டங்களில் வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து காணப்படும். சென்னையில் வானிலை வழக்கம் போல் காணப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
08-ஜூன்-201902:05:29 IST Report Abuse
Loganathan Kuttuva rain shadow area.
Rate this:
Share this comment
Cancel
வல்வில் ஓரி - Koodal,இந்தியா
07-ஜூன்-201919:42:35 IST Report Abuse
வல்வில் ஓரி மழையே மழையே "இளமை முழுதும்" நனையும் வரையில் வா..
Rate this:
Share this comment
Cancel
raghavan - Srirangam, Trichy,இந்தியா
07-ஜூன்-201919:10:32 IST Report Abuse
raghavan சென்னைக்கு மழை ஜூன் 16, 17 தேதி உண்டாமே, வந்தால் சரி.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X