விரக்தியில் ராகுல்: களத்தில் பிரியங்கா

Updated : ஜூன் 07, 2019 | Added : ஜூன் 07, 2019 | கருத்துகள் (31)
Advertisement
Congress,Rahul,Rahul Gandhi, Priyanka, Priyanka gandhi, காங்கிரஸ்,ராகுல்,ராகுல் காந்தி, பிரியங்கா, பிரியங்கா காந்தி,

புதுடில்லி: லோக்சபா தேர்தலில் படுதோல்வி அடைந்ததால் விரக்தி அடைந்துள்ள ராகுல் மற்றும் சோனியா போல அல்லாமல் களத்தில் இறங்கி விட்டார் பிரியங்கா.


காரணம் என்ன


ராகுல் மீது பழி ஏற்படக் கூடாது என நினைக்கும் பிரியங்கா, தேர்தல் தோல்விக்கு என்ன காரணம் என்பதை கண்டுபிடிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளார். உ.பி.,யில் ரேபரேலியில் சோனியா வெற்றி பெற்றதைத் தவிர வேறு எங்கும் காங்., ஜெயிக்கவில்லை. இதற்கு என்ன காரணம் என்று அம்மாநில காங்.,, தலைவர் ராஜ்பாபரிடம் விசாரணை நடத்தினார் பிரியங்கா.ஜூன் 9ம் தேதி உ.பி., செல்லும் பிரியங்கா, அமேதியில் ராகுல் ஏன் தோற்றார் என்பது பற்றி ஆராய இருக்கிறாராம். இந்த தொகுதியில் ராகுலுக்கு எதிராக யாரையும் நிறுத்த மாட்டோம் என்று சமாஜ்வாதியும் பகுஜனும் அறிவித்து இருந்தன. இருப்பினும் இந்த கட்சிகளை சேர்ந்தவர்கள் ராகுலுக்கு எதிராக வேலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. உ.பி.,யில் பா.ஜ., பெற்ற ஓட்டு 49.6 சதவீதம். காங்., பெற்ற ஓட்டு வெறும் 6.3 சதவீதம். ராஜ்பாபர் ராஜினாமா செய்வதாக அறிவித்ததும், புதிய தலைவரை தேர்வு செய்யும் பொறுப்பும் பிரியங்கா தலை மீது விழுந்துள்ளது.







சோனியாவின் பயம்


ஓட்டுச்சாவடி மட்டத்தில் இருந்து விசாரணை நடத்தி கட்சி தோற்றதற்கான காரணங்களை கூறுமாறு கட்சியினருக்கு சோனியா உத்தரவிட்டுள்ளார். ஜூன் 11ம் தேதிக்கும் அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும். கட்சி தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதில் ராகுல் தொடர்ந்து பிடிவாதமாக இருக்கிறார். தங்கள் குடும்பத்தை சாராத ஒருவர் தலைவர் ஆக வேண்டும் என்கிறார் ராகுல். இதனாலேயே சோனியா, பிரியங்காவைத் தவிர வேறு யாரையும் ராகுல் சந்திப்பதில்லை.






ஏற்கனவே மோடியின் தலைமையில் நாடு இருக்கும்போது, எதிர்க்கட்சிகளின் நிலை என்ன ஆகுமோ என்று சோனியா அச்சப்பட்டுக்கொண்டு இருக்கிறார். அடுத்து மகாராஷ்டிரா, ஹரியானா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் நடக்க உள்ளன. இந்நிலையில் எதிர்க்கட்சிகளின் நிலைமை பரிதாபகரமாக இருப்பதும் சோனியாவை கவலை அடைய வைத்துள்ளது.






கர்நாடகாவில் ஆளும் மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கும் கூட்டணி கட்சியான காங்.,கிற்கும் இடையே முட்டிக்கொண்டு நிற்கிறது. உ.பி.,யில் சமாஜ்வாதி - பகுஜன் இடையே தகராறு ஏற்பட்டு விட்டது. ராஜஸ்தானில் காங்., முதல்வர் அசோக் கெலாட்டுக்கும் சச்சின் பைலட்டுக்கும் இடையே பூசல் உச்சக்கட்டத்தில் உள்ளது. ம.பி.,யில் முதல்வர் கமல்நாத் - திக்கவிஜய்சிங் - ஜோதிராதித்ய சிந்தியா இடையே தகராறு. ஆதித்யாவை மாநில காங்., தலைவராக்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் கேட்கின்றனர். இந்த பதவியில் இப்போது இருப்பவர் கமல்நாத். அப்பதவியை அவர் விட்டுத் தருவாரா. இப்படி ஆளாளுக்கு மோதிக்கொண்டு இருப்பது காங்.,கை கவலை அடைய வைத்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rm -  ( Posted via: Dinamalar Android App )
08-ஜூன்-201909:01:10 IST Report Abuse
rm again in srilanka tamil war last minutehappenings due to LTT E leaders in foreign countries are the main reason for the last in war -Ananda padmanaban report .Norway report made it clear that India is not responsible .After 20 years from Rajivs death there is no need to take revenge.So there was an image d as Congress.Again it is painful that lot of tamils died but as Indian we never accept Indian govt. is a reason.
Rate this:
Share this comment
Cancel
senthil kumar.k - pondy,இந்தியா
08-ஜூன்-201906:08:56 IST Report Abuse
senthil kumar.k இலங்கை தமிழர்களை அநியாயமாய் கொன்றுகுவித்த பாதக குடும்பம். இனி காங்கிரஸ் முழுவதுமாக அழித்து ஒழிக்கப்படும்.
Rate this:
Share this comment
Cancel
ஊழல் விஞ்ஞானி - இந்திய தேசம்,இந்தியா
07-ஜூன்-201920:45:18 IST Report Abuse
ஊழல் விஞ்ஞானி ராகுல் சேர்த்தது உள்நாட்டு சொத்து எனவே கவலை......பிரியங்காவின் சொத்து வெளிநாட்டில் எனவே கவலையில்லை.......அவரவர் கஷ்டம் அவர்களுக்கு....... இந்த தேர்தலில் செல்லாகாசாகியது ஊழல்திமுக .....ஆனால் கம்பெனி சீட் கொடுத்தவகையில் தலா 25 கோடிகள் வருமானம்......எந்த வரியும் இல்லாமல்..........
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X