மோடி-மம்தா போட்டி: போஸ்ட் கார்டுக்கு 'கிராக்கி'

Updated : ஜூன் 07, 2019 | Added : ஜூன் 07, 2019 | கருத்துகள் (6)
Advertisement

கோல்கத்தா : பிரதமர் மோடி மற்றும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் அரசியல் மோதலால் மேற்குவங்கத்தில் போஸ்ட் கார்டு விற்பனை பலமடங்கு அதிகரித்துள்ளது. தினமும் ஆயிரக்கணக்கில் போஸ்ட் கார்டுகள் விற்பனையாகி வருவது தபால் நிலைய ஊழியர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.





பா.ஜ., - திரிணாமுல் காங்., இடையே,லோக்சபா தேர்தல் சமயத்தில் துவங்கிய அரசியல் மோதல் இன்னும் ஓயாமல், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பா.ஜ.,வின் ஜெய் ஸ்ரீராம் கோஷத்திற்கு மம்தா எதிர்ப்பு தெரிவித்ததால், அவருக்கு ஜெய்ஸ்ரீராம் என எழுதப்பட்ட 4 லட்சம் போஸ்ட் கார்டுகளை அனுப்ப உள்ளதாக பா.ஜ., அறிவித்தது.
இதற்கு போட்டியாக திரிணாமுல் கட்சியினரும், ஜெய் ஹிந்த் மற்றும் ஜெய் காளி என எழுதப்பட்ட 10 லட்சம் போஸ்டு கார்டுகளை பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவுக்கு அனுப்ப உள்ளதாக கூறி இருந்தனர்.




இந்நிலையில் தெற்கு கோல்கத்தாவில் உள்ள காலிகட் தபால் நிலையத்திற்கு மம்தாவின் முகவரிக்கு ஜெய்ஸ்ரீராம் என எழுதப்பட்ட ஆயிரக்கணக்கான போஸ்ட் கார்டுகள் தினமும் வந்த வண்ணம் உள்ளன. சராசரியாக தினமும் 30 முதல் 40 தபால் கார்டுகள் மட்டுமே வந்த நிலையில், தற்போது இது அதிகரித்துள்ளது. மம்தாவின் முகவரிக்கு மட்டும் தினமும் 4500 போஸ்ட் கார்டுகள் அனுப்பப்பட்டு வருகின்றன.




இதே போன்று அவுரா மற்றும் ஹூக்ளி பகுதி தபால் நிலையங்களில் தினமும் 8000 போஸ்ட் கார்டுகள் ஜெய் ஹிந்த், ஜெய் காளி என எழுதப்பட்டு பிரதமரின் முகவரிக்கு அனுப்பப்படுகின்றன. பா.ஜ., மற்றும் திரிணாமுல் இடையேயான இந்த அரசியல் போட்டியால் தற்போது போஸ்ட் கார்டுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், வெறிச்சோடி காணப்பட்ட தபால் நிலையங்கள் பரபரப்பாக மாறி விட்டதாக தபால் நிலைய ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
போஸ்ட் கார்டு கிடைக்காததால் பிரதமருக்கு கடிதமாக பிரின்ட் செய்து அனுப்ப உள்ளதாகவும் பிரதமர் அலுவலகத்திற்கு கடிதம் அனுப்புவதை தாங்கள் நிறுத்தப் போவதில்லை எனவும் திரிணாமுல் காங்., கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jothi.n - chennai,இந்தியா
07-ஜூன்-201921:08:25 IST Report Abuse
jothi.n வயிற்று எரிச்சல் ,மக்களின் விழிப்புணர்வு
Rate this:
Share this comment
Cancel
Preabhu - Tiruppur,இந்தியா
07-ஜூன்-201918:04:28 IST Report Abuse
Preabhu ஜெயஸிரிராம், ஜெய்காளி, ஜெய்ஹிந்த் இவர்களது ஹிந்துத்துவ ஒற்றுமையை காட்டுகிறது
Rate this:
Share this comment
Cancel
v sampath - CHENNAI,இந்தியா
07-ஜூன்-201917:12:46 IST Report Abuse
v sampath தபால் கார்டுக்கு டிமாண்ட் கொல்கத்தாவில் . போஸ்ட் ஆபிஸிக்கு வருமானம் வந்து உயிர் பிழைத்தால் நன்று
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X