முடியாவிட்டால் வெளியேறு: எடி போட்டார் வெடி

Updated : ஜூன் 07, 2019 | Added : ஜூன் 07, 2019 | கருத்துகள் (21)
Advertisement

பெங்களூரு : உங்களால் ஆட்சி செய்ய முடியாவிட்டால், சட்டசபையை கலைத்து விட்டு வெளியேறுங்கள். உங்களை விட சிறப்பாக நாங்கள் ஆட்சி நடத்துகிறோம் என ஆளும் காங் - மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணிக்கு அறிவுறுத்தி உள்ளார் கர்நாடகா முன்னாள் முதல்வரும், பா.ஜ., தலைவருமான எடியூரப்பா.






எடியூரப்பா அளித்த பேட்டியில், குமாரசாமி தலைமையிலான ஆட்சி மீது யாருக்கும் நம்பிக்கையில்லை. அவரது மகனே கட்சி தொண்டர்களை தேர்தலுக்கு தயாராகுங்கள் என கேட்டுக் கொண்டுள்ளார். நான் சொல்கிறேன், தேர்தலே நடத்த வேண்டாம். எங்களிடம் 105 எம்எல்ஏ.,க்கள் உள்ளனர். அவர்களால் ஆட்சி செய்ய முடியாவிட்டால், நாங்கள் ஆட்சி பொறுப்பேற்று நடத்துகிறோம்.





எந்த காரணத்திற்காகவும் மீண்டும் தேர்தல் நடத்த நாங்கள் விரும்பவில்லை. 5 ஆண்டுகளுக்கு பின்பே தேர்தல் நடத்தலாம். முதல்வர் குமாரசாமி அரசியல் நாடகம் நடத்திக் கொண்டிருக்கிறார். வறட்சி பாதித்த பகுதிகளை பார்வையிடுவதாக ஊர் ஊராக செல்வதற்கு பதில், என்ன பிரச்னை என்பதை உணர்ந்து அதற்கு தீர்வு காணலாம்.





அதை விடுத்து கிராமப்புற பள்ளிகளில் தங்குகிறேன். நான் கிராம வஸ்தியா திட்டம் கொண்டு வருகிறேன் என்றார். இதுவா இன்று முக்கியம். மக்கள் அவரை விரும்புகிறார்களா என அவரே அவரை கேள்வி கேட்டுக் கொள்ளட்டும். மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்துவதை விடுத்து அரசியல் சர்க்கஸ் நடத்திக் கொண்டிருக்கிறார் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
08-ஜூன்-201906:56:56 IST Report Abuse
Arunachalam இரு கட்சிகளும் சேர்ந்து ஆட்சி செய்ய முடிவு எடுத்து அது நடந்து வருகிறது. அவர்களாகவே அதை மாற்றும் வரை வேறு வழியின்றி மக்கள் சகித்துக் கொள்ள வேண்டியதுதான்.
Rate this:
Share this comment
Cancel
Ramasami Venkatesan - Chennai - now in Brisbane - Aus,இந்தியா
08-ஜூன்-201903:55:37 IST Report Abuse
Ramasami Venkatesan மக்கள் குமாரசாமிக்கு ஓட்டு போட்டது அவருக்காக, அவர் கட்சிக்கு. காங்கிரஸுடன் கூட்டணி வைப்பதற்காக அல்ல. அப்படி விரும்பி இருந்தால் அவர்கள் காங்கிரஸுக்கே வோட்டு போட்டிருப்பார்களே.
Rate this:
Share this comment
Cancel
Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
07-ஜூன்-201923:40:23 IST Report Abuse
Ramesh R பக்தால்ஸ் எல்லாம் சந்தோசம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X