சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : ஜூன் 07, 2019
Advertisement
'டவுட்' தனபாலு

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர், மாயாவதி: கடந்த, 45 ஆண்டுகளில் இல்லாத அளவு, வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது; இதற்கு, மத்திய அரசு, என்ன பதில் சொல்லப் போகிறது?

டவுட் தனபாலு: மதவாதம்கற ஒற்றை விமர்சனத்தை முன்வைத்து, பா.ஜ.,வை எதிர்த்து அரசியல் செய்ய முடியாது என்பதை, இப்போதாவது உணர்ந்தீங்களே... அது வரை நல்லது... மதவாதம், வேலையில்லா திண்டாட்டம் போன்றவற்றால், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தால், அது, சமீபத்தில் நடந்த தேர்தலில் எதிரொலித்திருக்குமே... மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை, உங்களுக்கு ஏன் இல்லாமல் போனது என்பது தான், என்னோட, 'டவுட்!'

***

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி: சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் தொழிற்சாலைகள், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்களுக்கு, அரசு அனுமதி அளிக்காது என, கொள்கை முடிவு எடுத்துள்ளோம். புதுச்சேரிக்குத் தேவையான நல்ல திட்டங்களுக்கு, மாநில அரசு ஒத்துழைப்பு கொடுக்கும். மக்களின் எதிர்ப்பு கொண்ட எந்த திட்டத்துக்கும், அரசு அனுமதி அளிக்காது.

டவுட் தனபாலு: சுற்றுச்சூழல் பாதிப்புக்கு மிக முக்கிய காரணம், பிளாஸ்டிக் தான்னு சொல்லப்படுது... அதை ஒழிக்க, சட்டம் மட்டும் போட்டால் போதாது... பிளாஸ்டிக்கை பயன்படுத்துறவங்க மேலே நடவடிக்கை எடுக்கணும்... தமிழக அரசியல்வாதிகள் போல், தொட்டதற்கெல்லாம் போராட்டம் என்றில்லாமல், மக்களுக்கு எது வேண்டும், எது வேண்டாம்ன்னு சிந்திச்சு, நீங்கள் செயல்பட்டால், மாநிலம் முன்னேறும்... அதைப் பார்த்து தமிழகமும் திருந்தும்ங்கிறதுல, 'டவுட்'டே இல்லே!

***

இ.பி.எஸ்., முதல்வர்: காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை பின்பற்ற வேண்டும் என, கர்நாடக அரசை ராகுல் கண்டிக்காதது ஏன்?

டவுட் தனபாலு: ராகுல், ஆரம்பத்தில் இருந்தே, காவிரி விவகாரத்தில், கர்நாடகாவுக்கு சாதகமாகத் தானே இருக்காரு... மத்திய அரசும், உங்க கூட்டணிக் கட்சியுமான, பா.ஜ.,வும், காவிரி விவகாரத்தில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை பின்பற்ற வேண்டும்னு, கர்நாடக அரசை, எந்த அளவுக்கு கண்டிச்சிருக்கு என்ற, 'டவுட்'டுக்கு, நீங்க பதில் சொல்லுங்க...!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X