சென்னை : லோக்சபா தேர்தல் குறித்து ஆராய தமிழக பா.ஜ. சார்பில் கோட்டம் வாரியாக கூட்டம் நடத்தப்படுகிறது.
இது தொடர்பாக தமிழக பா.ஜ. தலைவர் தமிழிசை கட்சியினருக்கு எழுதியுள்ள கடிதம்:
லோக்சபா தேர்தலில் பா.ஜ. தேசிய அளவில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. நரேந்திர மோடி இரண்டாவது முறை பிரதமராக பொறுப்பேற்றார். இந்த மிகப்பெரிய மகிழ்ச்சியிலும் தமிழகத்தில் ஒரு இடம்கூட வெற்றி பெற முடியாதது மிகுந்த வருத்தம் அளிப்பதாக உள்ளது.
வருங்காலங்களில் தமிழகத்தில் வெற்றி பெற்றிடவும் மண்டல பொதுச்செயலர்கள், மண்டல தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் நாம் சந்தித்த கருத்துக்களை முன்வைக்க ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு கூட்டத்திலும் நானும் மாநில அமைப்பு பொதுச்செயலர் கேசவ விநாயகமும் கலந்து கொள்ள உள்ளோம்.
அதில் தேசிய பொறுப்பில் உள்ளவர்கள், மாநில நிர்வாகிகள், தொகுதி அமைப்பாளர்கள், பொறுப்பாளர்கள், முழு நேர பணியாளர்கள் என அனைவரும் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 13ம் தேதி மதுரை, 29ல் ராமேஸ்வரம் கோட்டம் கூட்டம் நடக்க உள்ளது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (53)
Reply
Reply
Reply