பதிவு செய்த நாள் :
பிட்காயின் வைத்திருந்தால் 10 ஆண்டு சிறை
மெய்நிகர் நாணய முதலீட்டுக்கு கிடுக்கிப்பிடி

புதுடில்லி : இந்தியாவில், பிட்காயின் உள்ளிட்ட மெய்நிகர் நாணயங்களில், யாரேனும் முதலீடு செய்தாலோ, விற்பனை செய்தாலோ, பரிமாற்றம் செய்தாலோ, அவர்களுக்கு, 10 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கும் நிலை ஏற்படும் எனத் தெரிகிறது.

பிட்காயின், டிஜிட்டல், நாணய விதிமுறை,மசோதா,வரைவு திட்டம், ரிசர்வ் வங்கி


'மெய்நிகர் நாணயங்களை தடை செய்வது மற்றும் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் நாணய விதிமுறைகள் குறித்த மசோதா 2019' வரைவில், இந்த பரிந்துரைகள் வழங்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. இந்தியாவில், மெய்நிகர் நாணயங்களுக்கான அனுமதியை அரசு வழங்கும் என எதிர்பார்த்திருந்தவர்களுக்கு, இந்த பரிந்துரை பேரிடியாக அமைந்துள்ளது. மேலும், இந்தியாவிலுள்ள இத்தகைய

நாணய பரிமாற்றங்களுக்கான நிறுவனங்களுக்கும், பேரதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்தியாவில், மெய்நிகர் நாணயங்கள் குறித்த விதிமுறைகளை ஏற்படுத்த, ஒரு குழு அமைக்கப்பட்டது.

பொருளாதார விவாகாரங்களுக்கான செயலர், சுபாஷ் சந்திர கார்க் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள, இந்த குழு, மெய்நிகர் நாணய மசோதாவுக்கான வரைவு திட்டத்தை உருவாக்கி உள்ளது. இக்குழுவில் பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி உறுப்பினர்களும் பங்கேற்றுள்ளனர். மேலும், புலனாய்வு பிரிவுகள், மத்திய நேரடி சட்ட வாரியம் ஆகியவற்றிலிருந்தும், பிரதிநிதிகள், வரைவு திட்டத்துக்கான குழு உறுப்பினர்களாக பங்கேற்றுள்ளனர்.

இக்குழு, மெய்நிகர் நாணயங்களை தங்கள் கணக்கில் வைத்திருந்தாலோ, விற்பனை செய்தாலோ, பரிவர்த்தனை செய்தாலோ, நேரடியாகவோ, மறைமுகமாகவோ மெய்நிகர் நாணயங்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஈடுபட்டாலோ, சிறை தண்டனை வழங்கப்பட வேண்டும். மேலும், ஜாமின்

Advertisement

கிடைக்காத பிரிவில் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என, பரிந்துரை செய்துள்ளது. மேலும், ரிசர்வ் வங்கியுடன் கலந்தாலோசித்து, அதிகாரப்பூர்வமான டிஜிட்டல் ரூபாயை அறிமுகப்படுத்துவது குறித்து, அரசு யோசிக்கலாம் எனவும் பரிந்துரைத்துள்ளது.

ரிசர்வ் வங்கி தடை:

கடந்த, 2018 ஏப்ரலில், மெய்நிகர் நாணயங்களை தடை செய்வதாக, ரிசர்வ் வங்கி அறிவித்தது. வங்கிகள் உட்பட, ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் எந்த அமைப்புகளும், மெய்நிகர் நாணயங்களுக்கான சேவைகளை வழங்கக்கூடாது என, ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. இதையடுத்து, எச்.டி.எப்.சி., - எஸ்.பி.ஐ., போன்ற வங்கிகள் சேவையை நிறுத்திவிட்டன.


Advertisement

வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce - tokyo,ஜப்பான்
08-ஜூன்-201913:28:56 IST Report Abuse

oceபிட் காயின் என்றால் என்ன. இன்றளவில் ஒரு ரூபாய்க்கு கீழுள்ள நாணயங்கள் எதுவும் செல்லுபடியாகாதே. அவைகள் தான் பிட் காயின்களா. புரியாத வார்த்தைகளை அவிழ்த்து விடக்கூடாது.

Rate this:
Muthu - Bangalore,இந்தியா
10-ஜூன்-201909:47:26 IST Report Abuse

Muthuபிட் காயின் என்றால் என்ன என்று தெரிந்தவர்களுக்கு இந்த செய்தி பொய் சேர்ந்தால் போதும்.. அது சில்லரை காசு அல்ல..இது நாட்டையும் சேர்ந்த நாணயமுமல்ல.. ஒரு பிட் காயின் மதிப்பு சுமார் 5 லட்சங்களுக்கும் மேல்.. ஒரு சமயம் இதன் மதிப்பு 15 லட்சங்களுக்கும் மேல் இருந்தது.. இதில் பண முதலைகள் முதலீடு செய்து பணத்தை மறைப்பதால், இது தடை செய்ய பட இருக்கிறது.. ...

Rate this:
Manian - Chennai,இந்தியா
10-ஜூன்-201910:02:00 IST Report Abuse

Manianபிட் காயின் என்பது தினகரன் வாக்காளர்களுக்கு கொடுத்தது போல எண்-அடையாளம்-பிராமிசரி நோட்டு மாதிரி-இதை நிழல் பிராமிசரி நோ்உ என்கலாம்(bitcoin-the-token, ownership of a digital concept – sort of a virtual IOU). இன்னொரு பக்கம் பிட்காயின் பரவலான தொடர் பரிவர்தனை நடைமுறை(bitcoin-the-protocol- a distributed network ledger of balances of bitcoin-the-token).இரணடையையுமே “bitcoin.” என்கிறார்கள். இது பேங்குகள் போன்ற கண்காணிப்பும் இல்லாமல், ஹவாலா போல் பிடகாயின் பரிவர்த்தனை நடக்கிறது. இது மின்வளைத்தளம் உற்பத்தி, பரிவர்தனை செய்கிறது. வருமானவரியே கொடுக்காது. இது அசல் நாணயமோ டாலர், பத்து ரூபாய் நாணயம் இல்லை.இதன் மதிப்ப 1 பிட்காயின் = 8,000 நிஜ அமெரிக்க டாலர்இது தாளிலோ, உலோகத்திலோ இல்லை.அதனால்தான் இதை பலராலும் பரிந்து கொள்ள முடியவில்லை. இதுவே கருணாவின் திருட்டு விஞ்ஞான காசு.நதி மூலம், ரிஷி மூலம் போன்றதே பிட்காயின். சுருக்கமா மிஞ்சார ஹவாலா பண பரிவர்த்தனை ...

Rate this:
oce - tokyo,ஜப்பான்
08-ஜூன்-201913:25:30 IST Report Abuse

oceஏரோப்ளேன் மேகத்துக்குள் நுழைந்து பறந்து செல்கிறதே அது எப்படி தலிவா. மதுரை அப்துல்.

Rate this:
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
08-ஜூன்-201915:59:58 IST Report Abuse

pradeesh parthasarathyமேகத்துக்குள் நுழைந்து ரேடார் இலிருந்து தப்பித்து போகலாம் னு நினைப்ப .. ...

Rate this:
Abdul Rahman - Madurai,இந்தியா
08-ஜூன்-201918:53:29 IST Report Abuse

Abdul Rahmanநான் சொல்லுறது, "RSat" சாட்டலைட் தவிர மற்ற சாட்டலைட் மேகத்தை தாண்டி ஊடுருவி பார்க்க முடியாது. ...

Rate this:
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
08-ஜூன்-201910:10:58 IST Report Abuse

தமிழ் மைந்தன்அப்போ அறிவாலயத்தில் பதுக்கப்பட்டுள்ள நாணயங்கள் இனி செல்லாதா?..... மோடி அரசு ஏன் பொது மக்களுக்கு எதிராக செயல்படுகிறது.......

Rate this:
Manian - Chennai,இந்தியா
10-ஜூன்-201910:03:34 IST Report Abuse

Manianஅது ஹவாலா வியாபாரி அப்துல் மஜுத், கடலுக்கடியில் தூங்கும் கருணாவுக்கு மட்டும்தான் தெரியும். ...

Rate this:
மேலும் 11 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X