அரசியல் செய்தி

தமிழ்நாடு

புறக்கணிக்கும் மந்திரி; புலம்பும், 'காமெடி'

Added : ஜூன் 08, 2019
Advertisement

நாமக்கல் : ''அரசு விழாக்களுக்கு என்னை அழைக்காமல் புறக்கணிக்கின்றனர்,'' என, நடிகரும், எம்.எல்.ஏ.,வுமான கருணாஸ் கூறினார்.

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில், பாண்டவர் அணிக்கு ஆதரவு திரட்ட, நாடக நடிகர் சங்கத்தினரை சந்திக்க, நாமக்கல் வந்த அவர், நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த முறை நடந்த தேர்தலில், நாடக நடிகர் சங்கத்தில், பல அணிகள் இருந்தன. தற்போது, ஒரே அணி தான் என்ற நிலைக்கு வந்துள்ளனர். நடிகர் சங்க கட்டடத்தை, முழுமையாக நிறைவு செய்யும் வகையில், மீண்டும் பாண்டவர் அணி போட்டியிடுகிறது.

அ.தி.மு.க., - அ.ம.மு.க., இணைந்தால் என்ன, இணையவில்லை என்றால் என்ன. என் தொகுதியான திருவாடானைக்குள், ஓராண்டாக செல்லவில்லை. நான், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியாக இருந்தும், கலெக்டர், டி.ஆர்.ஓ., அரசு விழா அழைப்பிதழில், என் பெயரை அச்சிடுவதில்லை. அமைச்சர் மணிகண்டன், வேண்டுமென்றே என்னை புறக்கணிக்கும் செயலில் ஈடுபட்டுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X