பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
ஹெல்மெட், கோர்ட், அலட்சியம்,வாகன ஓட்டி, நோட்டீசு

சென்னை : 'ஹெல்மெட் அணியாமல் செல்வோரின் இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்ய வேண்டும்; ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்' என சென்னை உயர் நீதிமன்றம் கண்டிப்புடன் கூறிய பிறகும் போக்குவரத்து போலீசாரும் அதிகாரிகளும் எப்போதும் போல துாக்கத்தில் தான் உள்ளனர். உயிர்காக்கும் ஹெல்மெட் விஷயத்தில் அவர்கள் மெத்தனமாக செயல்படுவதும் அலட்சியம் காட்டுவதும் தொடர்கிறது.

'இரு சக்கர வாகனங்களை ஓட்டிச் செல்வோரும் பின் இருக்கையில் அமர்வோரும் ஹெல்மெட் அணிய வேண்டும்' என சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவு வந்தவுடன் போக்குவரத்து போலீசாரும் அப்பிரிவு அதிகாரிகளும் நடவடிக்கை எடுத்தனர். 'ஹெல்மெட்'டின் அவசியம் குறித்து 'சிக்னல்' தோறும் விழிப்புணர்வு பிரசாரமும் செய்தனர். இதையடுத்து ஹெல்மெட் அணியாமல் சென்றவர்களை பிடித்து அபராதம் வசூலித்தனர்.

இதெல்லாமே சில நாட்கள் மட்டுமே நீடித்தன. அதன்பின் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுவோர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் 'நுாறு இருநுாறு' வாங்கிக் கொண்டு சத்தம் போடாமல் அனுப்பி வைத்தனர். உயர் நீதிமன்றத்தின் உத்தரவை பயன்படுத்தி போக்குவரத்து போலீசார் தங்கள் பாக்கெட்டை நிரப்ப வழி செய்தனரே தவிர சட்டத்தையும் உயிரையும் காக்க ஹெல்மெட் அணியும் பழக்கத்தை வாகன ஓட்டிகளிடம் அதிகரிக்க செய்யவில்லை. இந்த சூழ்நிலையில் சென்னையை சேர்ந்த ராஜேந்திரன் 'இரு சக்கர வாகனங்களில் செல்வோர் ஹெல்மெட் அணியாமல் செல்கின்றனர்.

சட்ட விதிகளை கண்டிப்புடன் பின்பற்றும்படி அதிகாரிகளுக்கு

உத்தரவிட வேண்டும்' என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். மனுவை நேற்று முன்தினம் விசாரித்த நீதிபதிகள் ஹெல்மெட் விவகாரத்தில் மீண்டும் கடுமையான உத்தரவுகளை பிறப்பித்தனர். 'ஹெல்மெட் அணியாமல் செல்வோரின் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும். அவர்களின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். அதிகாரிகள் இந்த நடவடிக்கைகளை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும்' என்றனர்.

இந்தளவுக்கு கடுமையான உத்தரவுகளை நீதிபதிகள் பிறப்பித்த பின்னரும் போலீஸ் விஷயத்தில் அதிகாரிகள் வழக்கம் போல துாக்கத்தில் தான் உள்ளனர். உயிர் காக்கும் ஹெல்மெட் அவர்கள் மெத்தனமாக செயல்படுவதும் அலட்சியம் காட்டுவதும் தொடர்கிறது. தலைநகர் சென்னையில் நேற்று இரு சக்கர வாகனங்களில் சென்றவர்களில் பலர் ஹெல்மெட் அணியாமல் செல்வதை காண முடிந்தது. போக்குவரத்து போலீசாரும் அவர்களை கண்டுகொள்ளவில்லை. கடற்கரை சாலை வழியாக உயர் நீதிமன்றத்திற்கு செல்வது நீதிபதிகளின் வழக்கம்.

அப்படி சென்ற நீதிபதிகள் நீதிமன்ற உத்தரவு குறித்த கவலையின்றி ஹெல்மெட் அணியாமல் 'டூவீலர்'களில் பலர் பயணித்ததை பார்த்து நேற்று அதிர்ச்சி அடைந்தனர். சென்னை மட்டுமின்றி மற்ற மாவட்டங்களிலும் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்ற உத்தரவை யாருமே சட்டை செய்யவே இல்லை. வழக்கம் போல வாகனத்தை ஓட்டுவோரும் பின்னிருக்கையில் இருந்தோரும் ஹெல்மெட் அணியாமல் சென்றனர். நடவடிக்கை எடுக்க வேண்டிய போலீசாரும் கண்டும் காணாதது போல் நின்றிருந்தனர்.

மதுரையில் ஹெல்மெட் அணிவோர் அதிகரிப்பு:

மதுரை நகரில் டூவீலர் விபத்தின்போது ஹெல்மெட் அணியாததால் ஏற்படும் உயிரிழப்புகள் குறித்து வாகன ஓட்டிகளிடம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். விபத்துகளின் தன்மை, இறப்பு குறித்து புள்ளி விபரங்களுடன் கூடிய நோட்டீசும் வழங்கி வருகிறோம். இதன் மூலம் இரண்டு ஆண்டுகளில் ஹெல்மெட் அணிவோர் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. ஹெல்மெட் வழக்குகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்த ஆண்டு டூவீலர் விபத்தில் இறந்தவர்களின்எண்ணிக்கை 99 ஆக குறைந்துள்ளது.

இறப்பு அதிகம்!

சாலை விபத்துக்களால் அதிக இறப்புகளை சந்திக்கும் மாநிலமாக தமிழகம் உள்ளது. இங்கு 2017ல் 65 ஆயிரத்து 562 விபத்துக்களில் 16 ஆயிரத்து 157 பேர் உயிரிழந்தனர். 2018ல் 63 ஆயிரத்து 920 விபத்துக்கள் நடந்தன; 12 ஆயிரத்து 216 பேர் இறந்தனர். மொத்த விபத்துக்களில் 45 சதவீதம் இரு சக்கர வாகனங்களால் ஏற்படுகின்றன. இரு சக்கர வாகன விபத்தில் உயிரிழப்போரில் 90 சதவீதம் பேர் 'ஹெல்மெட்' அணியாதோர். அவர்களில் பாதிக்கு மேல் 35 வயதுக்கு உட்பட்டோர் என்பது அதிர்ச்சியளிக்கும் புள்ளிவிபரம்.

இல்லை அதிகாரி:

சென்னை காமராஜர் சாலையில் உள்ள டி.ஜி.பி. அலுவலகத்தில் போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு தொடர்பான பணிகளை கவனிக்க அலுவலகம் உள்ளது. அதில் டி.ஜி.பி. கரன்சின்கா பணியாற்றி வந்தார். அவர் மே 31ல் மாநில குற்ற ஆவண காப்பகத்திற்கு மாற்றப்பட்டதும் ராமநாதபுரம் மண்டபம் அகதிகள் முகாமில் சிறப்பு அதிகாரியாக பணியாற்றி வந்த ஐ.ஜி. பிரமோத்குமார் நியமிக்கப்பட்டார்; அவர் இன்னமும் பொறுப்பேற்கவில்லை. அதனால் இந்த பொறுப்பை தற்போது லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனர் விஜயகுமார் கூடுதலாக கவனித்து வருவதாக போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு அலுவலக ஊழியர்கள் தெரிவித்தனர். தனக்கென தனி அதிகாரி இல்லாத சூழலில் இப்பிரிவு இருக்கிறது.

லைசென்ஸ் ரத்து

வாகன சோதனையில் ஈடுபடும்படி மோட்டார் வாகன ஆய்வாளர்களுக்கு அரசு போக்குவரத்து துறை கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் நடக்கும் விபத்துக்களை கட்டுப்படுத்த 'ஹெல்மெட்' அணியாதோரின் உரிமம் வாகனத்தை பறிமுதல் செய்வது குறித்து உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இதையடுத்து வாகன சோதனை நடத்தி விதிமீறலில் ஈடுபடும் ஓட்டுனர்களின் லைசென்சை ரத்து செய்யும்படி மோட்டார் வாகன ஆய்வாளர்களுக்கு போக்குவரத்து துறை கமிஷனர் சமயமூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.Advertisement

வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
09-ஜூன்-201907:20:41 IST Report Abuse

முருகன்நான் சுமராக 35 ஆண்டுகால தினமலர் வாசகர். ஹெல்மெட் சம்பந்தப்பட்ட நீதிமன்ற உத்தரவுகளை மதிக்கின்றேன். கருத்து சுதந்திரத்தின் அடிப்படையில் இந்த பதிவு. இரண்டு சக்கர வாகனம் இன்று ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. 18 வயது முதல் 70 வயது வரை உள்ளவர்கள் இரண்டு சக்கர வாகனம் ஓட்டுகின்றனர் இவர்கள் அனைவரையும் ஹெல்மெட் போடச் சொல்வது என்பது அனைவரும் உடல் ஆரோக்கியத்திற்காக கண்டிப்பாக 5 இட்லி சாப்பிடவேண்டும் கூடவோ. அல்லது குறையவோ கூடாது என்று சொல்வது போல் ஆகும். அனைவரும் ஒரே அளவில் சாப்பிட முடியாது. MGR அவர்கள் அன்று ஏழை மக்களின் வாழ்வாதரத்திற்கு உறுதுணையாக இருந்த சைக்கிளில் இருவர் பயணிக்க சட்ட இயற்றினார். ஆனால் இன்று?. ஹெல்மெட் இள வயதினர் அல்லது நகரத்தின் வெளிப்பகுதியில் செல்பவர்களுக்கு மட்டும் செயல்படுத்தலாம்.

Rate this:
09-ஜூன்-201907:20:49 IST Report Abuse

09-ஜூன்-201907:20:36 IST Report Abuse

மேலும் 32 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X