அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
தி.மு.க.வினர் மட்டும் ஹிந்தி படிக்கலாமா
அமைச்சர் செல்லுார் ராஜு கேள்வி

சென்னை : ''தி.மு.க. தலைவரின் குடும்பத்தினர் மட்டும் ஹிந்தி படித்து உயர் நிலைக்கு வர நினைக்கின்றனர்'' என கூட்டுறவு துறை அமைச்சர் ராஜு தெரிவித்தார்.

செல்லூர் ராஜூ, ஹிந்தி,தி.மு.க, அறிக்கை,அழைப்பு, வாக்குவாதம்


கூட்டுறவு துறை சார்பில் சென்னையில் பெட்ரோல் பங்க்கை மீன் வளத்துறை அமைச்சர் ஜெயகுமார், கூட்டுறவு துறை அமைச்சர் செல்லுார் ராஜு ஆகியோர் நேற்று துவக்கி வைத்தனர்.நிகழ்ச்சியில் செல்லுார் ராஜு பேசியதாவது:கூட்டுறவு துறை சார்பில்



தமிழகத்தில் இதுவரை 28 பெட்ரோல் பங்க்கள் துவக்கப்பட்டுள்ளன.அவற்றில் தரமான பெட்ரோல் டீசல் வழங்கப்படுகிறது. தி.மு.க. தலைவரின் குடும்பத்தினர் நடத்தும் கல்வி நிறுவனங்களில் மும்மொழி கொள்கையை பின்பற்றிவருகின்றனர். அவரின் குடும்பத்தினர் மட்டும் ஹிந்தி படித்து பெரிய ஆளாக நினைக்கின்றனர். எந்த மொழி திணிப்பையும் அ.தி.மு.க. ஆதரிக்காது. இவ்வாறு அவர் பேசினார்.
பெட்ரோல் பங்க் துவக்க விழாவில் அமைச்சர்கள் ஜெயகுமார்ராஜு மற்றும் அ.தி.மு.க. அவை தலைவர் மதுசூதனன் ஆகியோர் மேடையில் அமர்ந்திருந்தனர்.

அங்கு வந்த அ.தி.மு.க. வடசென்னை வட கிழக்கு மாவட்ட செயலர் ஆர்.எஸ்.ராஜேஷ், அமைச்சர் ஜெயகுமாரிடம் ' மாவட்டத்தில் நடக்கும் விழாவிற்கு மாவட்ட செயலருக்கு அழைப்பு விடுக்க வேண்டும். ஏன் விழாவிற்கு என்னை அழைக்கவில்லை' எனக்கூறி கடும் கோபத்துடன் வாக்குவாதம் செய்தார்.

Advertisement


இதை பார்த்து டென்ஷனான ஜெயகுமார் ''இது கூட்டுறவு துறை சார்பில் நடக்கும் விழா; எனக்கு தெரியாது'' என்றார். அதை ஏற்காத ராஜேஷ் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் கோபம் அடைந்த ஜெயகுமார் விழாவில் சில நிமிடங்கள் மட்டும் பேசி விட்டு கிளம்பினார்.


Advertisement

வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce - tokyo,ஜப்பான்
09-ஜூன்-201907:57:12 IST Report Abuse

oceகடலோரம் உள்ள நகரங்களில் பெய்யும் மழை நீரை சேமித்து வைக்க இயலாது. அருகில் உள்ள கடலுக்குள் ஓடிவிடும். நீரை சேமிக்க தமிழக உள் பகுதிகளில் இருந்து சென்னைக்கு நீர் கொண்டு வந்து சேமிக்க வேண்டும். அதுவும் கடலுக்குள் போகுமுன் செலவு செய்து விடவேண்டும்.

Rate this:
oce - tokyo,ஜப்பான்
09-ஜூன்-201907:53:19 IST Report Abuse

oceஎவன் சொன்னான் இந்தி படித்தால் பெயில்ஆக்கி விடுவார்கள் என்று. சந்தேகமிருந்தால் பள்ளிப்பாடத்துடன் தனியாக இந்தி பிரச்சார சபாவில் சேர்ந்து இந்தி படித்து பட்டம் வாங்கினால் செல்லாதா. கறபனைக்கு ஒரு அளவிருக்க வேண்டும்.

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
08-ஜூன்-201922:57:59 IST Report Abuse

Pugazh Vபுரிந்தும் புரியாதது போல நடிப்பவர்களை மாற்றவே இயலாது. இந்தி படிக்காதே என்று யாரும் சொல்ல வில்லை. இந்தியை கட்டாய பாடமாக்கி படித்தே ஆக வேண்டும் என்று நிர்ப்பந்தம் செய்து, குறிப்பிட்ட இனத்தவரை இந்தியில் ஃபெயிலாக்கவும் செய்ய திட்டமிடும் வேறொரு குறிப்பிட்ட இனத்தின் சதி இது என்று இன்னும் உணரவில்லை என்றால் என்ன தான் செய்வது??????? இந்தியை ஒரு சப்ஜெக்ட் ஆக்கி அதில் ஃபெயிலானால பள்ளி படிப்பே தாண்ட முடியாதல்லவா? இதைத்தான் ரகசியமாக செய்ய துடிக்கிறது அழிவு மற்றும் ஆதிக்க இனங்கள். இத கூடப் புரியாமல் இந்திக்கு கூவி பலர் தன் இனத்தை தானே அழித்துக் கொள்கிறார்கள்.//

Rate this:
மேலும் 39 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X