பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
சிக்கலில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை
நிலத்தை ஒப்படைக்காததால் சர்ச்சை

மதுரை : மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அடிக்கல் நாட்டியும் இதுவரை 202 ஏக்கர் நிலத்தை மத்திய அரசிடம் ஒப்படைக்காதது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

AIIMS,Madurai,எய்ம்ஸ்,எய்ம்ஸ் மருத்துவமனை,மதுரை,அடிக்கல் , நிலம்


தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என உத்தரவாதம் அளித்த மத்திய அரசு பல்வேறு இடங்களில் ஆய்வு நடத்திய பின் மதுரையை தேர்வு செய்தது. இம்மருத்துவமனைக்காக தோப்பூரில் 202 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது. அங்கு 1264 கோடி ரூபாயில் 750 படுக்கை வசதியுடன்

மருத்துவமனை 100 எம்.பி.பி.எஸ். மற்றும் 60 நர்சிங் படிப்புக்கான இடங்களுடன் கல்லுாரி அமைக்க திட்டமிடப்பட்டது.

ஜன. 27 ல் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இப்பணிகள் 48 மாதங்களில் நிறைவு பெறும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டது. ஆனால் நிலம் நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட அடிப்படை பணிகளே தாமதமாகி வருவதாக புகார் எழுந்துள்ளது. நிலம் ஒப்படைக்கவில்லை எய்ம்ஸ் அமைக்க தேர்வு செய்யப்பட்ட 202 ஏக்கர் நிலத்தை மத்திய அரசிடம் ஒப்படைக்காதது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் இத்தகவல் கசிந்துள்ளது.

வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில் 'இதுவரை மத்திய அரசிடம் நிலத்தை ஒப்படைக்கவில்லை. ஆவணங்களை மாற்றும் பணி நடக்கிறது. லோக்சபா தேர்தல் அறிவிப்பால் அதில் தொய்வு ஏற்பட்டது.

Advertisement

சில நாட்களில் மத்திய அரசிடம் ஒப்படைத்துவிடுவோம். பணிகள் துவங்குவதில் தாமதம் ஏற்படாது' என்றார்.

மத்திய குழு ஆய்வு:


இந்நிலையில் எய்ம்ஸ் அமைய உள்ள இடத்தை மத்திய அரசு குழு ஜூன் 10ல் பார்வையிட உள்ளது. மதுரை மருத்துவமனை அதிகாரி ஒருவர் கூறுகையில் 'எஸ்ம்ஸ் அமைவதில் எந்த சிக்கலும் இல்லை. அறிவித்தபடி விரைவில் பணிகள் துவங்கும். இடத்தை பார்வையிட மத்திய குழு வர உள்ளது' என்றார்.


Advertisement

வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
08-ஜூன்-201917:48:20 IST Report Abuse

கதை சொல்லிஜிவ்வுனு போதை ஏற்றும் தரமான சாராயம் குடிக்கிறோம்ல

Rate this:
Manian - Chennai,இந்தியா
08-ஜூன்-201923:56:55 IST Report Abuse

Manianஅது கலப்படம் இல்லாததா என்று சோதனை செய்யணும். ஒரு தெரு நாய்க்கு கொடுங்க, அது செத்தா அதிலே பள்ளி வுளுழ்த்திருக்கும்னு தெரிஞ்கிடனும். ...

Rate this:
நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா
08-ஜூன்-201912:36:21 IST Report Abuse

நக்கீரன்ஏண்டா உங்கள் பத்திதான் தெரியும்ல... உங்களுக்கு கொள்ளையடிக்கவே நேரமிருக்காது. அப்புறம் எங்க இதுக்கெல்லாம் நேரமிருக்க போகுது.

Rate this:
kattus - chennai,இந்தியா
08-ஜூன்-201909:45:46 IST Report Abuse

kattusGo back modi, சூசை அறிவாலயத்தை மருத்துவமனை ஆக்குவார் அது போதும்.

Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X