சென்னையில் பிஎஸ்எம்மின் பிரம்மாண்ட புகைப்பட கண்காட்சி

Updated : ஜூன் 08, 2019 | Added : ஜூன் 08, 2019
Advertisement






புகைப்படக்கலையின் வளர்ச்சிக்காக இயங்கும் அமைப்புகளில் உலகிலேயே மிகப்பழமையானதும் பலரால் பாராட்டப்பட்ட பெருமை உடையதுமான அமைப்பு சென்னையில் இயங்கும் போட்டோகிராபி சொசைட்டி ஆப் மெட்ராஸ் ஆகும் இதன் சார்பில் வருகின்ற 19ந்தேதி புகைப்பட கண்காட்சி துவங்குகிறது.




பிஎஸ்எம் என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்த சொசைட்டியின் உறுப்பினர்கள் எடுத்த 250 படங்கள் கண்காட்சியில் இடம் பெறுகிறது.




Advertisement


இதுவரை நடத்தப்பட்ட கண்காட்சியில் வைக்கப்பட்டது போல இல்லாமல் இந்த முறை 30ற்கு 20 என்ற அளவில் படங்கள் பிரம்மாண்டமாய் பிரி்ண்ட போடப்படுகிறது.பார்வையாளர்களுக்கு நிச்சயம் விருந்துதான்.





மொத்தம் 7 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சிக்கான அனுமதி இலவசம் பகல் 12 மணி முதல் இரவு 8 மணிவரை கண்காட்சி நடைபெறும்.கண்காட்சியில் இடம் பெற்றுள்ள படங்களை எடுத்த புகைப்படக்கலைஞர்களை சந்தித்து உரையாடும் வாய்ப்பும் உண்டு.





கண்காட்சிக்கான ஏற்பாடுகளை தலைவர் சாமிநாதன்,செயலாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் தலைமையிலான உறுப்பினர்கள் செய்துவருகின்றனர்.













-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X