ஜெகன் மாமனாருக்கு திருமலை பதவி?

Updated : ஜூன் 08, 2019 | Added : ஜூன் 08, 2019 | கருத்துகள் (52)
Share
Advertisement

திருப்பதி ; ஆந்திராவில் உள்ள புகழ்பெற்ற திருப்பதி திருமலை தேவஸ்தான தலைவராக, முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் மாமனார் சுப்பா ரெட்டியை நியமிக்க உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அதே நேரத்தில், அவர் கிறிஸ்தவர் என்ற பிரசாரமும் சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்துள்ளன.



latest tamil news



திருமலை தேவஸ்தானம் :


ஆந்திராவில், ஒய்.எஸ்.ஆர்.,காங்கிரஸ் அபார வெற்றிபெற்று, அதன் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக பதவி ஏற்றுள்ளார். ஆந்திராவில், ஆட்சி மாறியவுடன் அங்குள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தலைவர் பதவியும் மாற்றப்படுவது வழக்கம். ஏனெனில், திருமலை கோவில் ஆந்திர அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தப் பதவி கேபினட் அமைச்சர் அந்தஸ்து உள்ளது.


சுப்பாராவ் கிறிஸ்தவரா?


ஆனால், ஜெகன் மாமனார், சுப்பாராவ் தான் அடுத்த தேவஸ்தான தலைவர் என்ற தகவல் பரவியதும் அதே வேகத்தில், சுப்பாரெட்டி ஒரு கிறிஸ்தவர், அவர் எப்படி இந்து கோவில் கமிட்டி தலைவர் ஆகமுடியும்? என்ற கேள்விகளை எழுப்பி, முகநுால், வாட்ஸ் ஆப், டுவிட்டர்களில் வைரலானது. சுப்பாராவின் டுவிட்டர் கணக்கிலும் சிலர், அவரது மதம் சார்ந்த குறிப்பில், மதம் மாறிய கிறிஸ்தவர் என்று எழுதினர். அதுபோன்ற பயோடேட்டாவையும் பரப்பி வந்தனர்.


latest tamil news




விளக்கம்:


இந்த நிலையில் சுப்பாராவ், தான் பாரம்பரியமாகவே ஒரு இந்து தான் என்றும், இந்துமதத்தின் ஆன்மீக கலாசார அம்சங்களை தவறாமல் கடைப்பிடிப்பதாகவும், விஷமிகளின் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் விளக்கம் அளித்தார். இதன் பின்னர், ஓரளவு இந்த பிரசாரம் மட்டுப்பட்டுள்ளது.


வழக்கமான வதந்தி :


இதுகுறித்து ஒய்.எஸ்.காங்கிரஸ் தலைவர்கள் சிலர் கூறுகையில், '' முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் குடும்பம் தான், கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுபவர்கள். ஆனால், அவரது மாமனார் சுப்பாரெட்டி பாரம்பரியமாகவே இந்து தான். இது புதிதல்ல. தற்போதைய திருப்பதி திருமலை தேவஸ்தான தலைவர் புட்டா சுதாகர் யாதவை முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு நியமித்தபோதும், இதேபோன்ற சர்ச்சை எழுந்தது. அவரையும் கிறிஸ்தவர் என்று தான் பொய்யாக தகவலை பரப்பினார்கள்,'' என்கின்றனர்.


ராஜ்யசபா எம்.பி.,


ஆனால், ஜெகன்மோகன் ரெட்டியின் மாமனார் சுப்பாரெட்டி தான் தேவஸ்தான தலைவரா என்பது இன்னமும் உறுதி செய்யப்படவில்லை. சில தலைவர்கள், அவரை ராஜ்யசபா எம்.பி., ஆக்கி, டில்லி அரசியலில் ஈடுபடுத்தக்கூடும் என்றும் தெரிவித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (52)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
09-ஜூன்-201910:38:42 IST Report Abuse
அம்பி ஐயர் இப்போ நெஜமாவே கைய வெச்சுடுவாங்க போல இருக்கே....
Rate this:
Cancel
கைப்புள்ள - nj,இந்தியா
09-ஜூன்-201900:22:46 IST Report Abuse
கைப்புள்ள இப்புடிதான் உங்க நைனா, பயங்கர செருக்கெடுத்து போயி திருப்பதி வெங்கடாஜலபத்திகிட்டயே முண்டுனாரு, கடைசில எப்புடி முண்டிக்கிட்டு போனாருன்னு உலகத்துக்கே தெரிஞ்சுது. பாத்து நைனா நீ வேற வாழ வேண்டிய பைய்யன், ரொம்ப முண்டி கிண்டி ஒன்னு கிடக்க ஒன்னு ஆகி தொலைக்க போவுது. இப்போ பாத்தேல்ல எவ்வளவு வாய் செருக்கோடு பேசுனன் பிண ராய்? எவ்வளவு ஆட்டம் போட்டான்? கடைசில என்ன ஆச்சு? ஐய்யப்பன் கிட்டேன் மோதி என்ன ஆச்சுன்னு? வேண்டாம் நைனா, கடவுள் குடுத்த இந்த வாய்ப்பை எதிரா யூஸ் பண்ணாதே. முதல்வர் பதவி போனா வாங்கிக்கலாம்.
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
09-ஜூன்-201900:21:56 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் இவருக்கும் ஹெலிகாப்டரில் தான் முடிவா? மறுபடியும் கோவிந்தன் கணக்கை தீர்த்து கொள்வானா? விடைகளுக்கு "ஆந்திரா கோவிந்தா" சீரியல் பாருங்கள்.. காவிகள் ரொம்ப கூவ காணாமே? ஏன்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X