அரசியல் செய்தி

தமிழ்நாடு

கரை சேருமா காங்கிரஸ் ; ராகுல் புது திட்டம்?

Updated : ஜூன் 08, 2019 | Added : ஜூன் 08, 2019 | கருத்துகள் (46)
Share
Advertisement
புதுடில்லி : நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. 52 இடங்களை மட்டுமே பிடித்து எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெற முடியாமல் போனது. இது காங்கிரஸ் தலைவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. இதிலிருந்து மீள காங்கிரஸ் தலைவர் ராகுல் புதிய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.அதிரடி :தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியை
ராகுல், அதிரடி, மூத்தோர் நீக்கம், கேரள சுற்றுப்பயணம், காங்கிரஸ்

புதுடில்லி : நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. 52 இடங்களை மட்டுமே பிடித்து எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெற முடியாமல் போனது. இது காங்கிரஸ் தலைவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. இதிலிருந்து மீள காங்கிரஸ் தலைவர் ராகுல் புதிய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.


அதிரடி :


தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக ராகுல் அறிவித்தார். எனினும் காங்கிரஸ் காரிய கமிட்டி அவரது ராஜினாமாவை ஏற்றுக் கொள்ளவில்லை. ராகுல் தொடர்ந்து காங்கிரஸ் தலைவராக இருக்க வேண்டும் என மூத்த தலைவர்கள் பலரும் வலியுறுத்தினர். எனினும் அவர் தனது முடிவில் பிடிவாதமாக இருந்தார். தலைவர்கள் வலியுறுத்தலால் தனது ராஜினாமா முடிவை ஒத்திவைத்த அவர் கட்சியில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுக்க உள்ளார்.


latest tamil news





வாரிசு தலைவர்கள் :


லோக்சபா தேர்தலில் பல்வேறு மாநில தலைவர்களும் ஒழுங்காக வேலை செய்யவில்லை என ராகுல் சாடினார். குறிப்பாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத், முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோர் தங்களது மகன்களுக்கு சீட் வாங்குவதிலேயே குறியாக இருந்ததாகவும், அவர்கள் கட்சிக்காக சரியாக உழைக்கவில்லை என்றும் ராகுல் ஆவேசப்பட்டார்.


3 மாநில தேர்தல் :


அதோடு பஞ்சாப், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் உள்கட்சி பூசல் காரணமாக தேர்தலில் காங்கிரஸ் பின்னடைவை சந்தித்ததாக ராகுல் கருதுகிறார். இந்த சூழ்நிலையில் விரைவில் ஜார்க்கண்ட், அரியானா உள்ளிட்ட 3 மாநில சட்டசபை தேர்தலுக்கு கட்சியை தயார்படுத்த வேண்டியது உள்ளது. எனவே பல்வேறு மாநிலங்களிலும் தற்போதுள்ள மாநில தலைவர்களை மாற்ற ராகுல் திட்டமிட்டுள்ளார்.


மூத்தோர் வெளியே :


அதோடு தேர்தலில் முழு மனதோடு உழைக்காத மூத்த தலைவர்களை பதவியில் இருந்து நீக்கி விட்டு அப்பதவிகளில் இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்க உள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ராகுல் தற்போது கேரள மாநில சுற்றுப்பயணத்தில் உள்ளார். வயநாடு தொகுதியில் தனக்கு சாதனை வெற்றியை தந்த வாக்காளர்களுக்கு இன்று 2-வது நாளாக அவர் நன்றி தெரிவித்து வருகிறார்.

கேரளா சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு அவர் டில்லி திரும்பியதும் காங்கிரஸ் கட்சியில் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்ய ராகுல் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (46)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.Kalyanaraman - Chennai,இந்தியா
09-ஜூன்-201910:38:41 IST Report Abuse
R.Kalyanaraman தலை கீழ் நின்றாலும் கரை சேராது.
Rate this:
Cancel
R.Kalyanaraman - Chennai,இந்தியா
09-ஜூன்-201910:36:18 IST Report Abuse
R.Kalyanaraman இந்த பிரஹஸ்பதி ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக இருக்கும் வரை மற்றும் காங்கிரஸ் இல் வேறு யார் வந்தாலும் காங்கிரஸ் உறுப்புடைத்து. எல்லாருடைய கையும் கரை படிந்து உள்ளது. அதனால் அந்த கட்சி இனி மக்கள் மத்தியில் எடுபடாது.
Rate this:
Cancel
ஓரி -  ( Posted via: Dinamalar Android App )
09-ஜூன்-201909:40:49 IST Report Abuse
ஓரி காங்கிரஸ் கரை சேரனும் என்றால் பப்பு எப்பயும் கல்கோனா மிட்டாய் மென்னுகிட்டு இருந்தா போதும்! மேட்டர் சிம் பிள் !
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X