பதிவு செய்த நாள் :
'எல்லா பிரச்னையையும் பேசி தீர்க்கலாம்'
பிரதமர் மோடிக்கு இம்ரான் கான் கடிதம்

புதுடில்லி : 'ஆசிய பிராந்தியத்தில் அமைதி நிலவும் வகையில், அனைத்து பிரச்னைகளுக்கும் பேச்சு நடத்தி தீர்வு காணலாம்' என, பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், பாகிஸ்தான் பிரதமர், இம்ரான் கான் கூறியுள்ளார்.

இம்ரான்,நரேந்திர மோடி,பாகிஸ்தான்,வாழ்த்து,தீர்வு,டொனால்டு டிரம்ப்

அண்டை நாடான, பாகிஸ்தானுடன், நமக்கு, ஜம்மு - காஷ்மீர் எல்லைப் பிரச்னை, அந்த நாட்டில் இருந்து ஏவப்படும் பயங்கரவாத தாக்குதல் உட்பட, பல்வேறு பிரச்னைகள் உள்ளன.

வாழ்த்து


ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின், புல்வாமாவில், சி.ஆர்.பி.எப்., எனப்படும், மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் மீது, பிப்ரவரியில், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல்

நடத்தினர்; இதில், 40 வீரர்கள்தாக்குதல் நடத்தி அழித்தது. இதனால், இரு நாடுகளுக்கும் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டது. கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக, பாகிஸ்தானின் பாலகோட்டில் உள்ள பயங்கர வாத முகாம்களை. நம் விமானப்படை


இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, தே.ஜ., கூட்டணி அரசு, மீண்டும் பதவியேற்றுள்ளது. கடந்த மாதம், 26ல், பிரதமர் நரேந்திர மோடியை, தொலைபேசியில் பேசிய, பாக்., பிரதமர் இம்ரான் கான், வாழ்த்து தெரிவித்தார். இந்நிலையில், மீண்டும் பிரதமராக பதவியேற்று உள்ள மோடிக்கு வாழ்த்து தெரிவித்து, இம்ரான் கான் எழுதியுள்ள கடிதம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

தீர்வு


அதில் கூறப்பட்டுள்ள தாவது: இரு நாட்டிலும் நிலவும் வறுமையை ஒழிக்க, ஒரே தீர்வு, இரு தரப்பு பிரச்னைகள் குறித்து பேச்சு நடத்துவதே. இந்த பிராந்தியத்தில் அமைதி நிலவ, இரு நாடுகளும் இணைந்து செயலாற்ற வேண்டும். காஷ்மீர் பிரச்னை உட்பட, அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காணும் வகையில், பேச்சு நடத்த வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


'பாகிஸ்தான் கையில் உள்ளது'

இந்தியா - பாகிஸ்தான் உறவு குறித்து, அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்பின் அதிகாரப்பூர்வ அலுவலகமான, வெள்ளை மாளிகை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தெற்காசியாவில் அமைதி நிலவுவது, பாக்., கையில் தான் உள்ளது. பயங்கரவாதிகளை கைது செய்வதுடன், அவர்களது நடவடிக்கைகளை தடுக்க வேண்டும். பயங்கரவாதிகள் பிரச்னை தீராத வரை, இந்தியா - பாக்., இடையே அமைதி பேச்சு நடத்துவதற்கு சாத்தியமில்லை. அதனால், இந்தப் பிரச்னையில் தீர்வு ஏற்படுவது, பாக்., கையில் தான் உள்ளது. இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - new jersy,யூ.எஸ்.ஏ
09-ஜூன்-201916:52:37 IST Report Abuse

sankarபாக்கித்தானுக்குள் அமைதி நிலவனும்னா அதுக்கு மோடி சுர்ஜிக்கல் ஸ்ட்ரிக்கே நடத்த தயார். எப்போ தேவை என்று மட்டும் சொல்லட்டும் . மத்தபடி பாக்கித்தானுக்கு வெளிய அமைதி நிலவனும்னா இம்ரான் அமைதியா இருந்தா போதும் .

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X