அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
யார் யார்?
கட்சி தாவ தயாராகும் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள்
50க்கு மேற்பட்டோருடன் துவங்கியது பேச்சு
ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் தி.மு.க., தீவிரம்

சென்னை : அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களை இழுத்து, ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில், தி.மு.க., தீவிரமாக இருப்பதால், கட்சி தாவ தயாராகும், எம்.எல்.ஏ.,க்கள் யார் யார் என்ற கேள்வி, ஆளும் வட்டாரத்தில் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. ரகசிய விசாரணைக்கு பின்,உளவுத் துறை கொடுத்துள்ள பட்டியலில் உள்ள, 50 பேரை அழைத்து, முதல்வர், இ.பி.எஸ்., சமரச பேச்சு நடத்திய தகவல் வெளியாகி உள்ளது.

 அ.தி.மு.க., எம்.எல்.ஏ, தி.மு.க, ஆட்சி கவிழ்ப்பு,,உளவுத் துறை , சட்டசபை


தமிழக சட்டசபையில், தற்போது, அ.தி.மு.க., விற்கு, சபாநாயகருடன் சேர்த்து, 123 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். தி.மு.க.,விற்கு, 101; கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு, ஏழு; முஸ்லிம் லீக்கிற்கு, ஒரு எம்.எல்.ஏ., உள்ளனர். அ.ம.மு.க., தினகரன், சுயேச்சை எம்.எல்.ஏ., வாக உள்ளார். நாங்குநேரி தொகுதி காலியாக உள்ளது. சமீபத்தில், இடைத்தேர்தல் நடந்த, 22 சட்ட சபை தொகுதிகளில், தி.மு.க.,விற்கு, 13 தொகுதிகளில் மட்டுமே, வெற்றி கிடைத்தது. அ.தி.மு.க., ஒன்பது இடங்களில் வெற்றி பெற்றதால், ஆட்சிக்கு சிக்கல் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

கடும் அதிருப்தி

லோக்சபா தேர்தலில், 37 இடங்களை பிடித்தும், மத்தியில், பா.ஜ., ஆட்சி அமைந்ததால், தி.மு.க.,வுக்கு எந்த பலனும் இல்லாமல் போய் விட்டது; தமிழகத்திலும் ஆட்சியை கைப்பற்ற
முடியாத நிலை. இது, தி.மு.க.,வினருக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. எனவே, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களை இழுத்து, ஆட்சியை கவிழ்க்க, தி.மு.க., முடிவு செய்துள்ளது. அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களை இழுக்கும் பொறுப்பு, அ.தி.மு.க.,விலிருந்து, தி.மு.க.,விற்கு வந்த, இரண்டு முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ., ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அவர்களும், அ.தி.மு.க.,வில் அதிருப்தியில் உள்ள, எம்.எல்.ஏ.,க்களுடன் ரகசிய பேச்சு நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக, மாநில உளவுத்துறை போலீசார், முதல்வருக்கு அறிக்கை அளித்துள்ளனர். தி.மு.க., தரப்பில், யார் யாருடன் பேசப்படுகிறது என்ற பட்டியலையும் அளித்துள்ளனர். அதில், 50க்கும் மேற்பட்ட, எம்.எல்.ஏ.,க்கள் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.


இதனால், யார் மீது சந்தேகப்படுவது என்று தெரியாமல், முதல்வர் திணறி வருகிறார். தி.மு.க.,விற்கு ஆதர வாக இருப்போரை கண்டறிவதற்காக, அனைத்து எம்.எல்.ஏ.,க் களை, தன்னை வந்து சந்திக்கும்படி, முதல்வர் கூறியுள்ளார். அதன் அடிப்படையில், முதல்வரை, சென்னையில், அவரது இல்லத்தில், எம்.எல்.ஏ.,க்கள் சந்தித்து பேசி உள்ளனர். அப்போது, உளவுத்துறை சொன்ன, 50 எம்.எல்.ஏ.,க்களிடம், அவர்களுக்கு சந்தேகம் வராத வகையில், முதல்வர் பேசியுள்ளார்.


அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக வாக்குறுதி அளித்து உள்ளார். அவர்களும், 'உங்களுக்கு பக்கபலமாக இருப்போம்' என, வாக்குறுதி அளித்து சென்றுள்ளனர். அது, முதல்வருக்கு தெம்பை அளித்தாலும், உளவுத்துறை அறிக்கை ஏற்படுத்திய கலக்கம் போகவில்லை. இதற்கிடையில், தி.மு.க.,

Advertisement

வலையில் விழுந்துள்ள, ஆளும் கட்சி எம்.எல்.ஏ.,க்களிடம், அறிவாலய தரப்பு தொடர்ந்து இணைப்பில் உள்ளது. 'இப்போதைக்கு, அங்கேயே அமைதியாக இருங்கள். சட்டசபையில் ஓட்டெடுப்பின் போது, சபையில் இருக்காமல், வெளியில் சென்று விடுங்கள். அதன்பின், மற்றதை பேசிக் கொள்ளலாம்' என, கூறியிருப்பதாக தெரிகிறது.

உளவுத்துறை அறிக்கை

இவ்விபரத்தையும், உளவுத்துறை, முதல்வரிடம் தெரிவித்துள்ளது. ஆனால், உளவுத்துறை கொடுத்த அறிக்கையில், அ.தி.மு.க.,வை விட்டு எங்கும் செல்ல மாட்டார் என கருதப்படும், எம்.எல்.ஏ.,க்கள் சிலரின் பெயரும் உள்ளன. இது, உளவுத்துறை அறிக்கை மீது, முதல்வருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால், யாரையும் நம்ப முடியாமல், முதல்வர் தவித்து வருகிறார். இதன் காரணமாகவே, சட்டசபையை கூட்டவும், முதல்வர் தயங்கி வருகிறார். அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் அனைவருடனும் கலந்து பேசி, அவர்கள் ஒத்துழைப்பு அளிப்பர் என்ற நம்பிக்கை வந்த பின்னரே, சட்டசபை கூட்டத்தை கூட்ட, முதல்வர் முடிவு செய்திருப்பதாக, தகவல் வெளியாகி உள்ளது.

- நமது நிருபர் -
Advertisement

வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Baskar - Paris,பிரான்ஸ்
10-ஜூன்-201915:18:29 IST Report Abuse

Baskarஅடுத்த வீட்ட u தோட்டத்தில் அழகிய மல்லி இருந்தா பாக்கத்து வீட்டுக்காரனுக்கு ஒரு மூடு வருமே அதே தான் சுடாலினிக்கும். ஆனால் இதுபோல் செய்தால் அவன் அப்பாவின் கூட மன்னிக்காது.

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
10-ஜூன்-201902:29:45 IST Report Abuse

Pugazh Vசரியான விளக்கங்களுடன் கருத்து எழுதினால் கன்னாபின்னாவென்று தணிக்கை செய்து. தவறான அர்த்தம் வரும் விதத்தில் நாலு வார்த்தை களை மட்டும் பதிவிடுவது சாமர்த்தியம் அல்ல ஊடகக்கயவாளித்தனம். ஜர்னலிசம் படித்தழர் அல்லது சிறிதேனும் ப. தர்மம் கொண்டவரேனில் ஓரு நிமிடம் வெட்கித் தலைகுனியுங்கள். அது போதும்.

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
10-ஜூன்-201902:13:04 IST Report Abuse

Pugazh Vசில மாதங்களுக்கு முன், பலர் சேர்ந்து ஒருத்தரை எதிர்த்தால் அவர் பலம் பெற்றவர், திறமையானவர் என்று மோ__ எதிர்ப்பு கட்சி களை சொன்னார் கள். இப்போது இங்கே பலரும் சுடலையை எதிர்ப்பதைப் பார்த்தால் மோ__ எதிர்ப்பு பற்றிய மேலே சொன்ன கருத்து மிகப் பொருத்தம். எங்கும் எதிலும் எப்போதும் சுடலை..சுடலை..சுடலை...சூப்பர். . சுடலை பேரைச் சொல்லாமல் பலருக்கும் சோறு தண்ணி கிடைக்காது.. கிடைத்தாலும் இறங்காது என்ற நிலைமையை அடைந்திருப்பது மிகவும் மகிழ்ச்சி தருகிறது

Rate this:
Krish Sami - Trivandrum,இந்தியா
11-ஜூன்-201914:37:32 IST Report Abuse

Krish Samiபுகழ் சொல்வது பேத்தல். தி மு க பற்றிய செய்தியில் ஸ்டாலினை பற்றி பதிவிடாமல் அமெரிக்கா ஜனாதிபதி டிரம்பை பற்றியா பதிவிடுவார்கள்? ...

Rate this:
மேலும் 26 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X