சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : ஜூன் 08, 2019 | கருத்துகள் (1)
Advertisement
'டவுட்' தனபாலு



தி.மு.க., தலைவர், ஸ்டாலின்: கல்வியை, மாநில பட்டியலுக்கு கொண்டு வரவும், 'நீட்' தேர்வு ரத்துக்கும், பார்லிமென்டிலும், மக்கள் மன்றத்திலும், தி.மு.க., பாடுபடும்.
டவுட் தனபாலு: தனித்துப் பாடுபடுவீங்களா... இல்லை, இந்த இரண்டுக்கும் சூத்திரதாரியும், உங்களின் கூட்டணிக் கட்சியுமான, காங்கிரசுடன் இணைந்து, பாடுபடுவீங்களா... நல்ல திட்டம்ன்னு கருதும், பிற மாநில, காங்., - எம்.பி.,க்கள், இதற்காக, பார்லிமென்டில் உங்களுக்கு ஆதரவு தருவாங்களாங்கிறது, 'டவுட்' தானே...!

கர்நாடகா, பா.ஜ., தலைவர், எடியூரப்பா: எங்களிடம், 105 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். ம.ஜ.த., கட்சியைச் சேர்ந்த, முதல்வர் குமாரசாமியால், ஆட்சி செய்ய முடியாவிட்டால், நாங்கள் ஆட்சி பொறுப்பேற்று நடத்துகிறோம். எந்த காரணத்திற்காகவும், மீண்டும் தேர்தல் நடத்த, நாங்கள் விரும்பவில்லை.
டவுட் தனபாலு: தமிழகத்தில், தி.மு.க., சொல்வதைப் போலவே, நீங்களும் ரொம்ப நாளா, 'காங்., - ம.ஜ.த., கூட்டணி அரசு கவிழும்'னு சொல்லிட்டே இருக்கீங்க... கர்நாடகாவில் உள்ள, மொத்தமுள்ள, 224 சீட்களில், பெரும்பான்மைக்கு, ௧௧௩ எம்.எல்.ஏ.,க்கள் தேவையாச்சே... 105 எம்.எல்.ஏ.,க்களை வைத்து, எப்படி பெரும்பான்மையை நிரூபிப்பீங்க... பிற கட்சி, எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு தருவாங்க என நம்பும் அளவுக்கு, தேர்தலைச் சந்தித்தால், மக்கள் ஆதரவு தருவாங்க என்ற நம்பிக்கை ஏன் வரலை என்பது தான், பெரும், 'டவுட்'டாக இருக்கு...!

பத்திரிகை செய்தி: ஆந்திர வரலாற்றிலேயே முதல் முறையாக, ஐந்து துணை முதல்வரை நியமிக்க, ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த, ஆந்திரா முதல்வர், ஜெகன் மோகன் ரெட்டி முடிவு செய்துள்ளார்.
டவுட் தனபாலு: அதிகாரப் பகிர்வு, நிர்வாக வசதி என்பதெல்லாம் தாண்டி, துணை முதல்வர் பதவி என்பது, குளிர்விக்க கொடுக்கப்படுவது என்ற கருத்து வேரூன்றி விட்டது... போற போக்கைப் பார்த்தால், அமைச்சர்கள் எண்ணிக்கையைக் காட்டிலும், நாட்டில், துணை முதல்வர்கள் எண்ணிக்கை அதிகரித்து விடும் என்பதில், 'டவுட்'டே இல்லை...!

முன்னாள் மத்திய அமைச்சர், அஸ்லம் ஷெர்கான்: காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை,ராகுல் ராஜினாமா செய்தால், தற்காலிக ஏற்பாடாக, இரண்டு ஆண்டுகளுக்கு மட்டும், அந்த பதவியை ஏற்கத் தயார்.என் திறமையை நிரூபித்துகாட்டுவேன்.
டவுட் தனபாலு:தேர்தல் தோல்விக்கு,ராகுலின் தலைமை தான் காரணம்னு, காங்கிரசில் யாரும் குரல் எழுப்பிடக் கூடாது என்பதற்காகத் தான், ராஜினாமா நாடகத்தை அரங்கேற்றினாரு...இது தெரியாமல், மனசுல இவ்வளவு பெரிய ஆசைகளை எல்லாம் வளர்த்து வைச்சிருக்கீங்களே... அரசியலில் நீங்க கற்க வேண்டியது,இன்னும் நிறைய இருக்கு என்பதில், 'டவுட்'டே இல்லை...!

தமிழக, காங்., தலைவர்,கே.எஸ்.அழகிரி: தமிழகத்தில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் ஆட்சி அமைக்க முயற்சி செய்தால்,காங்கிரஸ் கட்சி அதற்கு, முழு ஒத்துழைப்பு கொடுக்கும்.
டவுட் தனபாலு: இது என்ன புது விஷயமா... இந்த முறையாவது, தி.மு.க., ஆட்சியில், காங்கிரசுக்கு பங்கு கேட்பீங்களா... இல்லை, வழக்கம் போல்,வெறுமனே ஆதரவு அளிப்பதோடு, வேடிக்கை பார்க்கப் போறீங்களா என்ற,'டவுட்'டைக் கொஞ்சம் விளக்குங்களேன்...!

புதுச்சேரி மாநில,பா.ஜ., தலைவர், சாமிநாதன்: புதுவை மாநிலத்தில், ஜூன் 1 முதல்,'பிளாஸ்டிக்'குக்குதடை என்று ஆணை வெளியிடப்பட்டது. அதை, ஆளும் காங்கிரஸ் அரசு நிறைவேற்றவில்லை. தடை என்ற பெயரில், பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது.
டவுட் தனபாலு:தடை விதிப்பின் பின்னணியில்,ஊழல் பேரம் இருக்கா... இந்த,'டவுட்' எல்லாம், புதுச்சேரிக்கு முன்னேயே தடை விதித்த
தமிழகத்தின் மீது, உங்களுக்கு ஏன் வர மாட்டேங்குது... இங்கும், பிளாஸ்டிக் பொருட்கள் புழக்கம், முழுமையாக தடுத்து நிறுத்தப்படலையே... அதைப் பற்றி, இங்குள்ள,பா.ஜ.,வாய் திறக்கலையே... அதனால் தான் கேட்டோம்...!

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
09-ஜூன்-201919:43:51 IST Report Abuse
D.Ambujavalli தமிழகத்தில் பா ஜ வாய் திறக்கும் நிலையிலா இருக்கிறது? ராமா கிருஷ்ணா என்று மூலையில் முடங்கி விட்டதே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X