கடுப்பில் அமைச்சர்கள்

Added : ஜூன் 08, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
டில்லி உஷ்.

புதிய அரசில், பல மாற்றங்களைச் செய்துள்ளார், பிரதமர் மோடி. முந்தைய அரசில் இருந்த அமைச்சர்கள் பலரது துறைகளையும் மாற்றிவிட்டார். இந்த மாற்றத்தால், இரண்டு அமைச்சர்கள் கடுப்பில் உள்ளனர். ஒருவர் ராஜ்நாத் சிங்; உள்துறையிலிருந்து ராணுவத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். அமித் ஷாவிற்கு, உள்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.'பொறுப்பை ஏற்க, அமித் ஷா வருவார்; அப்போது, அவருடன் கை குலுக்கி விடை பெறலாம்' என நினைத்திருந்தார், ராஜ்நாத் சிங். ஆனால், தான் பொறுப்பை ஏற்கும் போது, ராஜ்நாத்தை கூப்பிடவேயில்லை, அமித் ஷா.அடுத்ததாக, ராணுவ அமைச்சராக பொறுப்பு ஏற்கும் போது, அந்த துறையின் முந்தைய அமைச்சர் நிர்மலா சீதாராமன், தன்னை வரவேற்பார் என எதிர்பார்த்தார், ராஜ்நாத் சிங். ஆனால், இவர் பதவி ஏற்கும் போது, நிர்மலாவரவேயில்லை. இதனால், எரிச்சலில் இருக்கிறாராம்ராஜ்நாத் சிங்.இதற்கிடையே சிலர், 'ராஜ்நாத் சீனியர், எம்.பி., எனவே, அவர், லோக்சபா சபாநாயகராக நியமிக்கப்படலாம்' என சொல்கின்றனர். இதைக் கேட்டு கடுப்பான ராஜ்நாத் சிங், 'ஏற்கனவே வெறுத்துப் போயுள்ளேன். என் காயத்தில் ஏன் உப்பைத் தடவுகிறீர்கள்?' என, தனக்கு நெருக்கமானவர்களிடமும் எரிந்து விழுகிறார், அமைச்சர். இவரைப் போல, கோபத்தை வெளிக்காட்டாமல், உள்ளுக்குள்ளாகவே புழுங்கும் மற்றொரு அமைச்சர், நிதின் கட்கரி. முந்தைய அரசில், போக்குவரத்து துறை, கப்பல் துறை, நீர் வளம் ஆகியவை, கட்கரியிடம் இருந்தன. தமிழகத்திற்கு உதவும் வகையில, 'கோதாவரி - -காவிரி இணைப்பு நடந்தே தீரும்' என, அதற்கான வேலைகளில் ஈடுபட்டிருந்தார்.ஆனால், இவரிடமிருந்து நீர்வளத்துறை மற்றும் கப்பல் துறை பிடுங்கப்பட்டு, சிறு தொழில் துறை கொடுக்கப்பட்டுள்ளது. இதனால், வெறுப்பில் உள்ளார் கட்கரி.


பிரச்னையில் சிக்கிய அமைச்சர்அந்த வட மாநிலத்தைச் சேர்ந்த, பிரபல அரசியல்வாதி, மத்திய அமைச்சரவையில் முக்கிய இலாகாவைக் கவனிக்கிறார். முந்தைய மோடி அரசில், மிக முக்கிய இலாகாவுக்கு அமைச்சராக இருந்தார். இந்த முறை, அவரது இலாகா மாற்றப்பட்டு, வேறொரு முக்கிய துறை தரப்பட்டது. இதில், அந்த அமைச்சருக்கு உடன்பாடில்லை; இருப்பினும், வேறு வழியின்றி சம்மதித்தார்.இந்த அமைச்சருடன், எப்போதும் ஒரு, பா.ஜ., பிரமுகர் கூடவே இருக்கிறார். அவர், பா.ஜ., செய்தித் தொடர்பாளர். மிகவும் படித்தவர், விஷயம் தெரிந்தவர். இவரது திருமணத்தை, இந்த அமைச்சர் தான் நடத்தி வைத்தார். இவருக்கு ஜோதிடமும் தெரியும். இதனால், அமைச்சருக்கும், அவரது குடும்பத்தினருக்கும், பல விதங்களில் உதவியாக இருந்து வருகிறார், அந்த நபர். அமைச்சர் எந்த ஒரு ஆலோசனைக் கூட்டம் நடத்தினாலும், இந்த நபர், ஒரு மூலையில் அமர்ந்து, குறிப்பு எடுத்துக் கொண்டிருப்பார். கூட்டம் முடிந்ததும், என்ன நடந்தது, யார் யார் என்ன பேசினர் என்பதை, அமைச்சரிடம் விரிவாக சொல்வார்.காரணம், அமைச்சருக்கு இப்படிப்பட்ட விஷயங்கள் அதிகம் புரியாது என்பதால், இந்த உதவியாளர் உடன் இருந்து, அமைச்சருக்கு புரிய வைப்பார்; இதைத் தவிர,கோப்புகளில் அமைச்சர், தன் கருத்தை எழுதும் போதும், இவர் உதவுவார்.தற்போது, அந்த அமைச்சருக்கு, புதிய துறை ஒதுக்கப்பட்டுள்ளது; இது, மிகவும் முக்கியமான இலாகா.வெளி ஆட்களை, இந்த அமைச்சரவை அலுவலகத்தில்அனுமதிப்பதில்லை.ஆனாலும், புதிய துறை அதிகாரிகள் கூட்டத்திலும், இந்த அமைச்சருக்கு நெருக்கமான, அந்த செய்தி தொடர்பாளரும் பங்கேற்கிறார்; இது, அதிகாரிகளிடையே அதிர்ச்சியைஏற்படுத்தியுள்ளது. 'பா.ஜ., செய்தி தொடர்பாளரை எப்படி, இந்த கூட்டத்தில் அனுமதிக்கலாம்?' என, அமைச்சரைக் கேட்க முடியாமல், அதிகாரிகள் பரிதவிக்கின்றனர்.


பண விஷயத்தில் பிரியங்கா கறார்!லோக்சபா தேர்தலில் படு தோல்வியடைந்துள்ளதை அடுத்து,பிரியங்கா, கட்சியின் முக்கிய விஷயங்களை தீவிரமாக கவனிக்க துவங்கியுள்ளார். குறிப்பாக, கட்சியின் பண விவகாரங்களை இவர் தான் கண்காணிக்கிறார்.கட்சி செலவிற்காக, தலைவர்கள் பணம் கேட்டால், பல கேள்விகள் கேட்டு, துளைத்து, கடைசியில் பணம் தர மறுத்து விடுகிறார்.காங்கிரஸ் தரப்பில் மற்றொரு விஷயமும் சொல்லப்படுகிறது. தேர்தலுக்கு முன், 'கேம்பிரிட்ஜ் அனலிடிகா' என்ற, ஒரு நிறுவனத்தின் உதவியை நாடியது காங்கிரஸ். புள்ளி விபரங்களை வைத்து, எப்படி தேர்தல் பிரசாரம் செய்ய வேண்டும் என, இந்த நிறுவனம்காங்கிரசுக்கு ஆலோசனை வழங்கும்.இந்த நிறுவனம், பல ஆராய்ச்சியாளர்களை வேலைக்கு அமர்த்தி, புள்ளி விபரங்களை அலசியது. இதற்காக கோடிக்கணக்கில், கட்சி சார்பில் செலவிடப்பட்டது.அந்த நிறுவனத்திற்காக செயல்பட்டவர், பிரவீன் சக்ரவர்த்தி என்பவர். 'பா.ஜ.,வுக்கு, 140 சீட்களுக்கு மேல் கிடைக்காது' என, பிரியங்கா மற்றும் ராகுலிடம் சொல்லி வந்தார், இவர், தேர்தல் முடிவு வெளிவந்த பின், அவர், தலைமறைவாகிவிட்டார். காங்கிரசார், இவரைத் தேடி வருகின்றனர். 'இந்த நிறுவனத்திற்காக பணம் செலவழித்தது வீண்' என்கிறார், பிரியங்கா. இப்படி தேவையற்ற செலவுகளை தவிர்க்க, பிரியங்காவிடமே பண விவகாரங்களை ஒப்படைத்துவிட்டார், ராகுல்.

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
22-ஜூன்-201904:19:31 IST Report Abuse
 nicolethomson இரண்டு விஷயங்கள் குழப்புது , யார் அந்த உதவியாளர் , மற்றும் CA என்ற கார்பொரேட் கம்பெனியில் கேரளாவை சேர்ந்த இருவர் மிக உயர்ந்த பதவியில் இருக்காங்க அப்படி இருந்துமா இவ்ளோ மோசமான ரிசல்ட் ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X